வியாழன், 16 பிப்ரவரி, 2012

uyir-ezhurhu-pollatchi nasan
uyir -ezhuthu


அடிக்கோடிட்ட சொல்லுக்குத் தகுந்த எதிர்ச்சொல்லை எழுதுக. 1.மரத்தின் மேல் கிளிகள் பறந்தன. 2.மரத்தின்-----மாணவர்கள் அமர்ந்திருந்தனர். சரியான அருஞ்சொற்பொருளைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (ஒன்றுசேர்ந்து,பாடி,நடனம்ஆடுதல்) கூடி- ஆடி- ஆங்கிலச்சொல்லுக்குத் தகுந்த தமிழ்ச்சொல்லைப் பொருத்துக. தோட்டம்-RED நீலம்-TREE சிவப்பு-FLOWER மரம்- GARDEN மலர்-BLUE வகுப்பு-3 நாள் மாணவர்பெயர் பயிற்சித்தாள்-8 படத்தைப் பார்த்து எழுத்தை இணைத்துச் சொற்களை உருவாக்கவும். பூட்டு பூனை பூ பூமி பூக்கள்
படைப்பாற்றல் திறன் சொற்றொடரை உருவாக்கவும் தாத்தா மாணவர்கள் கிளி நாய் துள்ளி பறந்து தோட்டத்தில் விளையாடியது பறந்தது அமர்ந்திருந்தார் விளையாடினர்

நா பிறழ் பயிற்சித் தொடர்கள்

நா பிறழ் பயிற்சித் தொடர்கள் அவள் அவல் தின்றாள் வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் ல,ள,ழ-வேறுபாடு அறிந்து பயன்படுத்துக. சொல்வதை எழுதுக.(ல்ள்,ளு,ழு) தோட்டத்தில் உள்ள ப-ம்(ழ,ள)சாப்பிட்டால் ப-ம்(லள) உண்டாகும். ன,ண,ந வேறுபாடு அறிக. வ-(ண்,ண) மலர்கள் எனக்குப் பிடிக்கும். தின்னப் பழம் கொடுக்கும் மரங்களை அ-(னை,ணை)வரும் வளர்ப்போம். குலின் இசை நி-(னை,ணை)க்கும்போது இ-(ன்,ண்)பம் உண்டாகும் தோட்டம்-(ந,ன) தோட்டம். தோட்டத்தின் அ-(ழ)கு அள்ளும். வண்ண மல-(ர்,ற்)களால் தோட்டம் அழகு பெ-றும்.(று,ரு)

worksheet-

பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.(கா கா,கூ கூ) காக்கை எப்படிக் கரையும்? காக்கை ‘-------‘ என்று கரையும். குயில் எப்படிக் கூவும்? குயில் ‘-------‘என்று கூவும் கேட்டல் திறன் பாடல் தாகம் கொண்ட காகம் ஒன்று எட்டி எட்டி பார்த்தது! எங்கும் அதற்கு தண்ணீர் தான் கொஞ்சம் கூட இல்லையே! தேடித் தேடிப் பார்த்த காகம் தோட்டத்தினில் நடுவினுள் சாடியில் நீரைக் கண்டது. எட்டி எட்டிப் பார்த்த காகம் ஏமாந்து போனதே! எட்டாத தூரத்தில் தண்ணீரும் இருக்குதே? யோசித்துப் பார்த்த காக்கையும் ஒய்யாரமாய் கழுத்தை கொஞ்சம் சாய்க்கையில் கற்களைத்தான் கண்டதே! கற்குவியலைக் கண்டதும் ஞானம் அதற்குப் பிறந்ததே! கல்லை எடுத்து சாடிக்குள் போட தண்ணீரும் தான் கிடைத்தது. தாத்தாவுடன் காகமும் விளையாடத்தான் சென்றது. ர.ற வேறுபாடு அறிந்து எழுத்தினைக் கோடிட்ட இடத்தில் நிரப்புக. 1.பட்டுபோல புல் த-(ரை,றை) யில் பட- (ர்,ற்) ந்திருக்கும். 2.வண்ண மல-(ர்,ற்)களால் தோட்டம் அழகு பெறும். ன,ண,ந வேறுபாடு அறிக. 1.வ-(ண்,ன்)ண மலர்கள் எ-ண,ன)க்குப் பிடிக்கும். 2. தோட்டம் –(ந,ன)ல்ல தோட்டம் 3.தி-(ன்,ண்)னப் பழம் கொடுக்கும் மரங்களை அ-(னை,ணை)வரும் வளர்ப்போம். குயிலின் இசை நி-(னை,ணை)கும் போது இன்பம்

கௌதாரியும் முயலும்

கௌதாரியும் முயலும் (கடல்,பொந்து,குகை, வளை,புற்று) 1.பாம்பு வசிக்கும் இடம்---- 2.எலி வசிக்கும் இடம்----- 3.சிங்கம் வசிக்கும் இடம்--- 4.கிளி வசிக்கும் இடம்------ கௌதாரி எங்கு வசித்தது? உணவு தேடி கெளதாரி எங்கு பறந்து சென்றது? கௌதாரி எப்போது மரத்தடிக்குத் திரும்பியது? கெளதாரியின் பொந்தில் யார் வசித்தது? கௌதாரி ஏன் கோபம் கொண்டது? முயல் கௌதாரியிடம் என்ன கூறியது? கௌதாரியும்,முயலும் யாரைத்தேடிச் சென்றன? கௌதாரியும் ,முயலும் யாரைப் பார்த்தன? கௌதாரியும், முயலும் பேசியதை யார் கேட்டது? பூனை கண்களை மூடி என்ன முணுமுணுத்தது? கௌதாரியும்,முயலும் பூனை எதன் அருகில் சென்றன? பூனை என்ன செய்தது? கௌதாரியும், முயலும் என்ன செய்தன? படத்தினைச் சொற்களோடு பொருத்துக. கௌதாரி,முயல்,பூனை படம் பார்த்துப் படி கௌதாரி,முயல்,பூனை,நெல்வயல்,நெல்மணி விடுபட்ட இடத்தில் எழுத்துக்களை இட்டு நிரப்புக. கௌ-ரி,மு-ல்,பூ--,நெல்வ--ல்,நெல்—ணி கௌதாரியும், முயலும் ர,ற வேறுபாடு கௌதா-(ரி,றி)ப் ப-(ர,ற)வை பொந்தமைத்து, பல காலமாக வாழ்ந்து வந்தது. அ-(று,ரு)வடைக் காலம் முடிந்ததும் முடிந்த்தும் கௌதாரி தன் இ-(று,ரு)ப்பிடம் சென்றது. ந,ன,ண வேறுபாடு அறிக. எ-(ன்,ண்) பெயர் எழில-(ன்,ண்) ஊராட்சி ம-(ன்,ண்)றத் தலைவர் பரிசு வழங்கி—(னா,ணா)ர். இந்த வீடு எ-(ன,ண)க்கே தான் சொந்தம் என்றது முயல். ஆபத்தை உ-(ண,ன)ர்ந்த முயல் வேகமாகத் தப்பி ஓடியது. ந,ன,ண வேறுபாடு அறிக இந்த வீடு எ-(ன,ண)க்கே சொந்தம் என்றது முயல். ஆபத்தை உ-ணர்ந்த முயல் வேகமாகத் தப்பி ஓடியது. நான் இ-(ந்)த வீட்டில் நீ-(ண்,ன்)ட நாட்களாக இருக்கிறேன்.

நா நெகிழ் பயிற்சி

நா நெகிழ் பயிற்சி வேகமாகவும், மெதுவாகவும் சொல்லிப் பழகவும். மழையே! மழையே ! விரைந்து வா! மலையின் மீது விரைந்து வா! மரம் செழிக்கப் பெய்ய வா! பசுமைத்தோட்டம் காணவே விரைந்து நீயும் ஓடி வா!

worksheet

சரியான விடையைத்தேர்ந்தெடுத்து எழுதுக.(முதலிடம்,தலைமை,பரிசு) 1.எழிலன் ஓட்டப்போட்டியில் --------பெற்றான். 2.ஊராட்சிமன்றத்தலைவர் எழிலனுக்குப் -----வழங்கினார். 3.ஊராட்சிமன்றத்தலைவர் -------தாங்கினார். கட்டத்தின் உள்ளே கொடுக்கப்பட்டுள்ளவற்றிற்கு விடை எழுதுக. 1.எனது பள்ளியின் பெயர்--------- 2.எனது பெயர்------- 3.எனக்குப் பிடித்த இடம் ------ 4.எனக்குப்பிடித்த விளையாட்டு-----
பின்வரும் சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக 1. விடியல் என்பதன் பொருள் என்ன? ----------(மன வெளிச்சம்,மண வெளிச்சம்) 2. யூதத்துறவி யாரிடம் பேசினார்?-------(மாணவர்,மானவர்) கோடிட்ட இடங்களை நிரப்புக. (அத்தி,சகோதரர்) 1.எதிரில் உள்ளது யோக்மரமா?----- மரமா? 2.புதியவர் வரும்போது அவரும் நம் -------என்ற நாம் எப்பொழுது நினைக்கிறோமோ, அந்த நேரமே விடியல் தொடங்கும் நேரமாகும். கட்டங்களில் உள்ள சொற்களை இணைத்துப் புது வாக்கியங்கள் உருவாக்குக. எதிர்ச்சொல் எழுதுக. 1.இரவு -------- 2. வெளிச்சம் ------
அடைப்புக்குறியினுள் காணப்படும் சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக. (சென்றேன், மலர்ந்தன, செல்கிறேன் ,மலர்கின்றன, செல்வேன், மலரும்) 1.நான் நேற்று உணவு சாப்பிட்டேன்.இன்று உணவு சாப்பிடுகிறேன்.நாளை உணவு சாப்பிடுவேன். 2.நான் நேற்று பள்ளிக்குச்------------.இன்று பள்ளிக்குச்--------- நாளை பள்ளிக்குச் -------------. 3.ரோஜாவும்,அல்லியும் நேற்று ------------.இன்று தாமரையும், முல்லையும், ---- நாளை 4.மல்லிகையும்,சம்பங்கியும் ------------- அடைப்புக்குறியினுள் காணப்படும் சொற்களை எடுத்து எழுதுக. (என்ன, எப்போது, எப்படி, எங்கு, யார்) 1.----ஊஞ்சல் விளையாடுகிறாள்? குரங்கு அமர்ந்திருக்கின்றது? 2.குரங்கு ----விரும்பி சாப்பிடும்? 3.புறா மற்றொரு புறாவுடன் ----பேசியிருக்கும்? ‘க‘ எழுத்துச்சொற்களை வட்டமிடுக. 1.உலகம் ,காகம்,புறா,குரங்கு (பசுமை, கருமை) 2.இலையின் நிறம் -----------. 3.காகத்தின் நிறம் --------------. 4.ஊஞ்சலாடும் சிறுமி ------வண்ணத்தில் சட்டை அணிந்திருக்கிறாள்.

ல,ள வேறுபாடு

worksheet ல,ள வேறுபாடு 1.வி-ங்குகள் கூடியிருப்பதைக் கண்ட செல்வன் மகிழ்ந்தான். 2. சிறுவர்கள் வி-(லை,ளை)யாடிக் கொண்டு இருந்தனர். 3.ம-(லை,ளை) ழை பெய்தால் தான் தண்ணீர் கிடைக்கும். 4.ம---(ர,ற)ங்கள் குளிர்ந்த காற்றை வீசும். சொற்கள் விடுபட்ட பத்தியை நிரப்புக. 5. மழை-இயற்கையான செயலாகும்.-மழை பெய்வதற்கு ---செய்கின்றன.—உள்ள மரங்கள் வெட்டப்படுகின்றன.. எனவே –பொழிவது குறைகிறது. (பெய்வது,மரங்கள்,உதவி,காடுகளில்,மழை)

ஆசிரியர் பணி

கற்றல் என்பது தனிப்பட்ட ஒருவருடைய செயல். அதற்கான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பது மட்டும்தான் ஆசிரியர் பணி. ஒவ்வொரு குழந்தையிடமும் கற்பனை, ஓவியம், விளையாட்டு, இசை என தனிப்பட்ட ஆற்றல்கள் ஒளிந்திருக்கும். அதன் அடிப்படையில் கூட, பாடங்களை சொல்லி கொடுக்க முடியும். ஆனால், அதையெல்லாம் எந்த பள்ளி நிர்வாகமும், ஆசிரியரும் சிந்திப்பதில்லை. அதை பெயரளவிற்கு ஒரு பாடமாக வைத்து விடுகின்றனர். டாக்டர் அல்லது இன்ஜினியராவதே, கல்வி கற்பதன் முக்கிய நோக்கம் என, பெரும்பாலான பெற்றோர் மற்றும் மாணவர்கள் நினைக்கின்றனர். தமிழகத்தில் உள்ள கல்வி முறை, புத்தகத்தில் உள்ளதை படித்து, தேர்வில் தேர்ச்சி பெற மட்டுமே பயன்படுகிறது. மாணவ, மாணவியர் கொண்டுள்ள சிந்தனைத்திறன், படைப்பாற்றல் உள்ளிட்டவற்றை, வெளிக்கொண்டு வர உதவுவதில்லை. இத்தகைய கல்வி முறை நீடித்தால், அடுத்த பத்தாண்டுகளில் அறிவியல்துறையில், எந்த அளவுக்கு வளர்ச்சி பெறுவோம் என்பது, கேள்விக்குறி.முடியாதது என்று, இவ்வுலகில் ஒன்றுமில்லை. குறிக்கோளை அடைய, பல சிக்கல்களை துணிச்சலுடன், எதிர்கொள்ள வேண்டும். யாரும் நுழையாத துறைகளை, தேர்ந்தெடுத்துக் குடும்பம், சமுதாயம் மற்றும் நாடு முன்னேற்றம் உள்ளிட்டவற்றிற்கு உதவும் வகையில், செயல்பட வேண்டும். என்னால் முடியும் என்ற எண்ணம், கொண்டிருத்தல் வேண்டும்நீங்கள் அடைய நினைக்கும் குறிக்கோள்கள் குறித்த எண்ணங்களை, தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தால், நினைத்ததை விட, அதிகம் சாதிக்க வாய்ப்பு உள்ளது. வாழ்க்கையை கண்டு, எக்காரணம் கொண்டும் பயம் கொள்ளக் கூடாது. இன்றைய இளைய சமுதாயத்தினர், சாதிக்க வாய்ப்புகள் அதிகம் கிடைத்துள்ளன. குழந்தைகள் எப்படி கற்றுக் கொள்கின்றனர் என்பதை ஆசிரியர்கள் முதலில் தெரிந்து கொள்ள வேண்டும். இந்த விஷயத்தில் குழந்தைகள் பற்றிய உளவியல் பயிற்சி ஆசிரியர்களுக்கு தேவை. குழந்தைகளை மற்றவர்கள் மத்தியில், மட்டம் தட்டக் கூடாது. பாடம் நடத்தும் முறை பின், எப்படி இருக்க வேண்டும்? ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கிடையே கலந்துரையாடல் முறை அவசியம். ஒரு விஷயம் குறித்து கலந்துரையாடும்போது தான், பல முடிச்சுகளுக்கு விடை கிடைக்கிறது. குறிப்பாக, இந்த முறையில் பாடத்தை ஒவ்வொரு மாணவனும் எந்த அளவிற்கு அறிந்து வைத்துள்ளான் என்று, அவனே அறியும் வகையில் சூழ்நிலை அமைவதால், சிறந்த கல்வியைக் கொடுக்க இயலும்.மாணவர்களிடம் ஒழுக்கத்தை கொண்டு செல்ல சிறந்த வழி...ஆசிரியரே முன் உதாரணமாக இருப்பது ஒன்று. அடுத்ததாக, நீதி போதனை என்று ஒரு வகுப்பு நடத்தப்படுவதால் மட்டுமே ஒழுக்கத்தை மாணவர்களிடம் கொண்டு சென்று விட முடியாது. மாறாக, சில பிரச்னைகளை கையில் எடுத்துக் கொண்டு அதனை விவாதிக்கும் சுய ஆராய்ச்சி முறை நல்ல பலனைத் தரும். சினிமா, "டிவி' நிகழ்ச்சிகளால் மாணவர்கள் பாதிக்கப்படுகிறார்களா...தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பழிக்குப் பழி வாங்குவது போல் தான் அமைந்துள்ளன. அது குறித்து விவாதத்தில் மாணவர்களை ஈடுபடுத்தும் போது, அதனால் பாதிப்படைய மாட்டார்கள். மாறாக, நல்லது எது, கெட்டவை எது என பிரித்தறியும் தன்மையை பெறுவர்.பெற்றோர் - ஆசிரியர் சந்திப்பு அவசியமா?மிக, மிக அவசியம். ஆனால், இன்று பெற்றோர் - ஆசிரியர்கள் சந்திப்பு என்பது பல இடங்களில் பெயரளவில் மட்டுமே நடக்கிறது. சில இடங்களில் சந்திப்பு நிகழ்ந்தாலும், ஆசிரியர் கருத்தை, பெற்றோர் கேட்டு செல்வது போன்று தான் அமைந்துள்ளது. பெற்றோரின் கருத்தும் கேட்கப்படுவது அவசியம்.இன்றைய கல்வி முறை குறித்து தங்களது கருத்து?மதிப்பெண்ணிற்கு முக்கியத் துவம் கொடுத்து, அதன் அடிப்படையில் மாணவர்களை உருவாக்கும் இன்றைய கல்வி திட்டத்தால் எவ்வித பயனும் கிட்டப்போவதில்லை. அதிக மதிப்பெண் பெற்று விட்டதால் மட்டும், சிறந்த மாணவனாக ஒருவர் உருவாகி விட்டார் என்று சொல்லி விட முடியாது. அதிக மதிப்பெண் பெற என்ன செய்ய வேண்டும் என்ற நிலை மாறி, இன்று என்னவெல்லாம் செய்யலாம் என்று மாணவர்கள் யோசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இது ஆபத்தான பாதைக்கு வழி வகுத்தது போன்று அமைந்து விட்டது.பாடத்திட்டத்தில் என்ன மாற்றம் வேண்டும்?தொடர் மதிப்பீட்டு திட்டம் என்ற முறையை கொண்டு வருவது அவசியம். இத்திட்டத்தின் படி, மாணவர்கள் தன்னைத் தானே மதிப்பிடுதல், ஆசிரியர்களை மதிப்பிடுதல் ஆகியவை சாத்தியம். மேலும், தாங்கள் கற்றுக் கொள்ளும் விஷயங்கள், தங்களது வாழ்க்கைக்கு உதவுவதாக அமையும் வகையில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடியும்.மாணவர் - ஆசிரியர்களுக்கு இடையே ஏற்படும் பிரச்னைகளை தீர்க்க வழி?ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென்று கவுன்சிலர் ஒருவரை நியமித்து அவரிடம் முறையிடும் வழி சிறந்தது. இதன் மூலம், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடையே ஏற்படும் கசப்புணர்வு ஆரம்பித்திலே தீர்க்கப்பட்டு விடும். இதன் மூலம், பெரிய குற்றச் செயல்களை முன் கூட்டியே தடுக்க முடியும். நன்றி.தினமலர்