வெள்ளி, 30 நவம்பர், 2012

தமிழ்

வகுப்புகளில் இன்றைய நிலைமையின்படி தமிழ் கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் என்றாலே மாணவர்களின் மத்தியில் ஒருபடி இறக்கம்தான். காரணம் தமிழ் கற்றுக்கொண்டால் வருமானத்திற்கு வழி கிடையாது.இது மாணவர்களின் மத்தியில் ஒரு தவறான கருத்து.

  • ஆசிரியர், பேராசிரியர்,ஆய்வுத்துறை,கணினித்துறை, இதழியல் எனப் பல வகையிலும் பணி வாய்ப்புகள் உள்ளன. ஆங்கிலம்-தமிழ் மொழிபெயர்ப்பாளருக்கு இன்றளவில் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.கணினி என எடுத்துக்கொண்டால் அசைவூட்டம் தொடர்பானசெய்திகள் துறை,மொழியியல் துறை போன்றவற்றில் வாய்ப்புகள் உள்ளன.இஞ்சினியரிங் படித்த மாணவரே இன்று மொழியியலில் முதுகலை எடுத்துப் படித்து வருகின்றனர். காரணம் கணினித்துறையில் தமிழ்மொழி இப்போது தான் வளர்ந்து வருகிறது. கணினியில் தமிழ் முழுமையானபிறகு தமிழ் எப்படி தாழ்ந்து போகும்.!
  • இதை அறியாத பலரும் தமிழ் படித்தால் பணி கிடையாது என்ற கருத்தோடு இருக்கின்றனர்.தமிழ் படிப்பது நமது பண்பாட்டினை வளர்ப்பதற்காகத்தான் என்பதை நாம் அனைவரும் உணர்ந்து செயல்படவேண்டும்.தமிழ் ஆசிரியர்கள் முதலில் தமிழ்மொழி குறித்து ஒருங்கிணைந்த ஆய்வுகளை அளிக்கவேண்டும். பல்வேறு இடங்களில் தமிழ் குறித்த பல்வேறு கருத்துகளை வெளியிடுவதால் பிற மொழியாளர் தமிழ்மொழி அறிவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
  • ஏற்கனவே தமிழ் அறியாதவர்கள் தட்டச்சினை ஆங்கிலம் -வழி செய்து தமிழ் அளிப்பதால் தமிழில் சிறப்பு ஓசைகள் தெளிவுற இணையத்தில் காண இயலவில்லை.இக்குறை நீங்க தமிழ் தட்டச்சு பயின்றவர் மட்டுமே தமிழ்-கணினி என்ற நிலை வர வேண்டும்.
  • அவ்வாறு வந்தால் தான் பொதுஇடங்களில் வைக்கப்படும் விளம்பரப்பலகை, இணையம்-போன்றவற்றில் தமிழில் பிழை திருந்தும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக