வியாழன், 20 மார்ச், 2014

Sentence formation worksheet

சொற்களைப் பயன்படுத்தி வாக்கியம் அமைத்து எழுதுக.

சனி, 15 மார்ச், 2014

இந்திய 2020 ஒளி விளக்குகள்

வாய் திறந்த நாக்கில்
அம்மாவின் குரலொளி
அமுங்கிய நாதமாய்
குரல் கானம் மறைந்தது!
செடியின் பாதுகாப்பிற்கு
அருகில் மரத்தாய்!
உறவுகளின் தொப்புள்கொடி
அறுத்த உன்னத உறவுகள்
ஓடிய இடம் தேடி
காக்கையைத் தூது
செல்ல அனுப்பிய இடத்தில்
மகிழுந்து வாகனத்தில்
குளிரூட்டும் வசதிக்காற்றில்
அன்னையவளின்
மூடுதிரை வாழ்க்கையின்
கண்ணாடி மாளிகையின்
பிரதிபலிப்பில் பயந்த காக்கை
உறவுகளின் இருப்பிடம்
அறிந்து பதுங்கி விட்டது.
எங்கள் அருகிலோ
யாரோ இடும் உணவுக்காக
யாரோ அளித்த வெற்றுஅலுமினிய
சொட்டைப் பாத்திரம்
பசிப்பிணி அறுத்திட
அருகில் அதுவல்ல
ஆபுத்திரன் அட்சயபாத்திரம்
இங்கு அணியணியாய்
இடுப்பிற்கு மேலே ஆரமாய்
மரக்கிளை வேராய்
மண்பானைத் தலையாய்
உயிருள்ள எலும்புவாசிகளின் முகாரி!
இந்திரனின் வஜ்ராயுதத்திற்கு
பின்னாளில் தேவை
என்பதை உணர்த்தும்
நவீன இந்திய 2020 ஒளி விளக்குகள் 

வெள்ளி, 7 மார்ச், 2014

ஆங்கிலப்படுத்துக

                                              பெண்கள் தின நல்வாழ்த்துகள்
பழமொழிக்குத் தகுந்த ஆங்கிலப்பழமொழியினை எழுதுக.

1.உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூட இயலுமா?

2. அரசன் எவ்வழியே குடி மக்கள் அவ்வழி
   ஆங்கிலப்படுத்துக

கண்ணபுரத்தில் வாழ்ந்த கண்ணம்மா எரிக்க விறகு இல்லாததால் அவ்வீட்டின் குடும்பத்தலைவரிடம் சென்று வாங்கி வருமாறு கூறினாள். அப்போது காற்றும், மழையாகவும் இருந்தது. அதனால் மரங்களை வெட்டவும் முடியாதநிலையில் இவர் எங்கே செல்வார் எனப் பார்த்தாள்.
அவர் வேகமாக ஒரு வீட்டருகே சென்று கதவைத் தட்டி எரிக்க விறகு வாங்கி வருமாறு தனது மனைவி கூறியதாகக் கேட்டார். ஐயா! தங்களுக்கு இல்லாத விறகா! நாங்கள் கஷ்டப்பட்ட காலத்தில் எவ்வளவோ உதவியிருக்கிறீர்கள்! தங்களது பிள்ளைகளை யாரேனும் அனுப்பியிருந்தால் போதுமே! என்றபடி ஒரு கட்டை விறகைக் கொடுத்து அனுப்பினாள். இதைப்பார்த்துக்கொண்டிருந்த பக்கத்து வீட்டுக்காரன் இரவு நடுசாமத்தில் வீட்டின் வெளியே வந்து கத்தி தொடர்பேயில்லாமல் பேசினான்.
இதைக் கண்ணுற்ற நங்கை அதிர்ந்து, எந்த ஒரு விருந்தாளி வந்தபோதும்  இப்படி இருப்பதைக்கண்டு மனம் பதைத்து  அரசியிடம் சொல்லவேண்டும் எனத் தனது கணவனிடம் கூறினாள். மறுநாளும் இதைப்போலப் பலமுறை நிகழவே,கணவனிடம் கூறியும் பயனில்லை எனத் தனக்குள் மறுகினாள்.
இவ்வீடு  ஒழுக்கமில்லாதவர் வசிக்கும் வீடு என்பதால் நீங்கள் நல்லவர்களாக இருக்கிறீர்கள்.அதனால் மாறிச் சென்றுவிடுங்கள் என்று கூறினான்.இதைக்கேட்ட நங்கை, இந்த வீட்டிற்கு வந்தபின் நாம் சுகமாக இருக்கிறோம்.அவன் தேவையில்லாமல் வம்பு செய்கிறான்.அவனிடம் தங்களுக்கு என்ன பேச்சு? என்று சண்டையிட்டாள். இதனால் பிரச்னை கணவன், மனைவிடையே வளர்ந்தது. மனைவி அரசியிடம் செல்லப்போவதாக அவனிடம் மிரட்டினாள். இதைக் கண்ணுற்ற அவன், மறுநாள் தேவையில்லாமல் பல பிரச்னைகளை உருவாக்கி மிரட்டினான்.அரசியிடம் பணிப்பெண்ணாக இருந்த அவள் இந்த பிரச்னைகளைக் கண்டு மனம் வருந்தினாள்.