திங்கள், 1 செப்டம்பர், 2014

ஆசிரியர்களின் உருவாக்கப் பயன்பாட்டிற்கான மென்பொருள்

பயிற்சித்தாள் உருவாக்கம் என்பது மாணவரின் படைப்பாற்றல் திறனை வளர்க்கும் கருவி.அத்தகைய திறன் வளர ஆசிரியர்கள் மாணவர்களைத் தூண்டுதல் அவசியம்.காரணம் இன்றைய உலகில் அனைத்தும் கணினிமயமாக்குதலின்கீழ் இயங்கி வருகின்றன.அத்தகைய நேரத்தில் தமிழ்மொழி கற்றலுக்கும் நாம் தகுந்த அறிவியல் மென்பொருட்களைப் பயன்படுத்த வேண்டும்.மேற்கண்ட படம் வரைதல் தொடர்பான மென்பொருட்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட படம்.மாணவர்களை செயல்திட்டப்பயிற்சியாக இதனைப் பயன்படுத்தலாம்.ஆசிரியர்,மாணவர்-இடையே கற்றல்-கற்பித்தல் இதனால் வலுப்பெறும்.மிகவும் குறைந்தநேரத்தில் உருவாக்கப்படுவதால் கற்பித்தல் நிகழ எளிமையாகிறது.
ஆங்கிலத்திலோ,பிறமொழிகளிலோ குறுக்கெழுத்துகள் அமைப்பதுபோல படத்தைப்பார்த்து இதற்கு விடையளிக்கவேண்டும்.
வட்டத்திற்குள் உள்ள எழுத்து முயல்-அதைக் கண்டுபிடித்த குழு -முதலில் விளையாடவேண்டும்.
பகடைக்காயை உருட்ட வைத்து வகுப்பில் கற்பித்தல் நிகழ்த்தலாம்.
எ-டு
1.1 எண் பகடையில் விழுந்தால் அந்த எழுத்தை ஒரு அணி கூற வேண்டும்.
2. அடுத்த அணி அந்த எழுத்தை எழுத வேண்டும்.
3. விடுகதைப்பாடலாக அமைத்து எழுதவைக்கலாம்.
இறுதியாக யார் இந்த படத்தில் உள்ள அனைத்திற்கும் சரியாக விடை கூறுகிறார்களோ அவர்களை இதைப்போலவே வேறு படம் உருவாக்கச் சொல்ல வேண்டும்.
அவரே இறுதி வெற்றியாளர்.

பயிற்சித்தாள்

1.படத்தைப் பார்த்து உனக்குத் தெரிந்த சொற்களை எழுதுக.
2. படத்தைப் பார்த்து உனக்குத் தெரிந்த சொற்களைப் பயன்படுத்தி வாக்கியம் அமைத்து எழுதுக.