திங்கள், 30 மார்ச், 2015

மதம்-விழிப்புணர்வு

   மதம் 
இன்றளவில் மாணவரிடையே சாதியோ,மதமோ காணப் படுவதில்லை. பணியாற்றும் இடங்களிலும்,பிற இடங்களிலும் மட்டுமே இவ்வுணர்வு காணப்படுகிறது. இத்தகைய உணர்வினைத் தூண்டுபவர் யாரென நோக்கிடினில் சுயநலத்துக்காக இயங்குபவர் என்பது தெளிவாகத்தெரியும்.காரணம் அடித்தட்டு மக்கள் தனது வாழ்க்கைப்பாதையைக் குடும்பம் என்ற சிறிய வட்டத்தில் அடக்கிவிடுகின்றனர்.அவர்கட்குத் தெரிந்ததெல்லாம் இறைவன்,இன்ன சாதிக்கு இன்னகடவுள்,இன்ன மதத்திற்கு இன்ன கடவுள்-தவறு செய்தால் இறைவன் தண்டிப்பான்.மதத்தில் சொல்லப்பட்ட கருத்துகள் அவர்களை வழிப்படுத்தும்.அத்தகைய இறைவனே தலைமைத்துவம் பெற்றவன்.இக்கருத்துகளைக்கொண்டே அவர்கள் வாழப்பழகிவிட்டனர்.ஆனால் எல்லாக்கடவுள்களும் நமது காலத்திற்கு முன்னர் வாழ்ந்து வந்தவர்கள்.அவர்கள் கூறிய கருத்துகளைத்தான் நாம் பின்பற்றுகிறோம்(உருவவழிபாடு,உருவவழிபாடின்மை) என்பது எத்தனை மக்களுக்குத் தெரியும்? அத்தகைய மதமோ,சாதியோ அன்று இருந்ததா? இல்லையே! நிலத்தின் அடிப்படையில் அவர்கள் செய்யும் தொழிலின் அடிப்படையில் மக்கள் குழுக்களாகப் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.சாதியே இடைப்பட்டதுதானே? இதிலென்ன வன்முறை,தீவிரவாதம்,மதத்துவேஷம்.
ஒன்றுபட்ட அன்புநிறைந்த  சண்டையற்ற உலகத்திற்கு இவையெல்லாம் தேவையா!இவைபோன்ற சிந்தனைகளை ஆசிரியர் பாடப்பொருளினை அளிக்கும்போதே மாணவர்களிடம் விதைக்கவேண்டும்.பாடம் என்பது மனப்பாடமாக இருப்பதற்கல்ல என்பதை அவர்கள் புரிந்துகொள்ளும்வண்ணம் நடத்தவேண்டும்.இந்த எண்ணம் தெளிவாக இருந்துவிட்டால் மாணவன் வெற்றிகரமாக வருங்காலத்தில் சிறந்து விளங்குவான்.பின் எதற்காக சான்றிதழில் வருகிறது என்ற வினா எழும்.அதை ஆசிரியர் திறமையாகச் சமாளித்து மாணவரது ஐயப்பாட்டினை நீக்க  வேண்டும்.



தமிழ் தகவல் களஞ்சியம் : பயனுள்ள இணையதளங்கள்...! சான்றிதழ்கள் :-

தமிழ் தகவல் களஞ்சியம் : பயனுள்ள இணையதளங்கள்...! சான்றிதழ்கள் :-: பயனுள்ள இணையதளங்கள்...! சான்றிதழ்கள் :- 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan...

தமிழ் தகவல் களஞ்சியம் : பயனுள்ள இணையதளங்கள்...! சான்றிதழ்கள் :-

தமிழ் தகவல் களஞ்சியம் : பயனுள்ள இணையதளங்கள்...! சான்றிதழ்கள் :-: பயனுள்ள இணையதளங்கள்...! சான்றிதழ்கள் :- 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan...

ஞாயிறு, 29 மார்ச், 2015

மொபைல் தீமைகள்-ஆசிரியரும்,பெறறோரும் கவனிக்கவேண்டியவை

பின் வரும் செய்தியை இன்றைய பெற்றோரும்,ஆசிரியர்களும் அவசியம் படிக்கவேண்டும்.இன்றைய கால கற்றல் கற்பித்தல் பகுதியை இரண்டு பெரிய தடைக்கற்கள் தடுத்துக் கொண்டிருக்ின்றன.ஒன்று-மது,இரண்டு-மொபைல் கலாசாரம்.
மது குடித்து மாணவரகள் சமுதாயம் சீரழிந்து கொண்டிருக்கிறது.காரணம் எங்கு நோக்கினும் மதுக்கடைகள்.வழிகாட்டவேண்டியவர்களும் வாய்மூடி மௌனமாய் வருவாயை எதிர்பார்த்துக்கொண்டிருப்பதால் நாட்டில் வன்முறைகளும்,தீமைகள் நிறைந்த வருங்கால மாணவ சமுதாயங்களும்தான் உருவாகிக்கொண்டிருக்கின்றன.இதனை அருந்துவதால் தாம் என்ன செய்கிறோம் என்பதே அவர்களுக்குத் தெரிவதில்லை.கையில் மொபைல்வேறு.பயன் தெரியாமல் அதனைக் கண்டபடி புகைப்படத்தை எடுத்து கால நேரத்தை விரயம் செய்து வாழ்கின்றனர்.இதனால் மொபைலில் உள்ள நல்ல சில விஷயங்கள் தெரியாமலேயே வாழ்ந்து வருகின்றனர்
படிப்பு என்பது இன்றைய காலகட்டத்தைப் பொறுத்தவரை பணி வாய்ப்பு என்பதை மையமாகக் கொண்டு இயங்குகிறது. அத்தகைய கல்வியையும்,பணியையும் இலஞ்சம் கொடுத்தோ,வேறு சில குறுக்கு வழிகளிலோ பெறுவதால் என்ன லாபம்? 
நாம் என்ன விதைக்கிறோமோ அதன் பலனைத்தான் அனுபவி்க்க முடியும்.விஷவித்தை விதைத்துவிட்டு பலன் தருவது விஷமாக இருக்கிறது என்பது கேலிக்குரிய ஒன்று. நமக்கு இது தேவை என்பது பணத்தால் வருவது மட்டுமன்று.இதனை உணரவேண்டும்.பெற்றோரோ பிள்ளைகளை மது வாங்குவதற்கும்,வீட்டின் நடுவில் ஊற்றிக்கொடுக்கவும் பழக்கினால் பிள்ளை எப்படி இருக்கும்? பள்ளியில் எப்படி இருக்கும்? அவனது எண்ணங்களை ஆசிரியர் எப்படி சரி செய்வார்? இது என்ன தவறான விஷயமா என்பது அவனது மனதில் ஆழ ன்றிக்கிடப்பதற்கு யார் காரணம்?பெற்றோரா! ஆசிரியரா! சட்டமா!
புகை பிடிப்பது உடல் நலத்திற்குத் தீங்கானது.அதற்காக அதற்குக்கீழ் வாசகங்கள் அமைக்கப்பட்டுள்ளது.அதற்காக பள்ளியிலேயோ,பள்ளி அருகாமையிலோயோ கொண்டுவர முடியுமா?அதைப்போல்தான் இந்த மது அரக்கனும் என்பதை அனைவரும் உணரவேண்டும்.மது இருப்பதால் இத்தகைய மொபைல் கேவலங்கள் அரங்கேறியவண்ணம் உள்ளன.பத்திரிகைகளும்,மீடியாக்களும் பலவிதங்களில் எடுத்துரைத்தாலும் யாரும் கவனிக்காத நிலையில் சமுதாயமக்கள்தான் விழிப்புணர்வுடன் நடந்துகொள்ளவேண்டும்.காந்திகண்ட சமுதாயம் என்றோ மேடையளவல் மட்டும் முழங்கிக்கொண்டிருப்பது மடமை.காரியத்திலும் நிறைவேற்றவேண்டு்ம்.வெள்ளம் வரும்முன்னர்தான் தடுக்க அணை கட்டவேண்டும்.வெள்ளம் வந்த பின் கட்டும் அணை உடைந்துதான் போகும்.இன்றைய மாணவர்கள் வாழ்க்கையும் அப்படித்தான் உள்ளது.இதனால் பள்ளிகளில்,கல்லூரிகளில் ஆசிரியர்கள் பல பிரச்னைகளைக் கையாளுகின்றனர்.





செல்போன் பற்றிய பீதியை மத்திய அரசே பற்ற வைத்துள்ளது. கடந்த வாரத்தில் மத்திய அரசின் தொலைத்தொடர்புத் துறை வெளியிட்ட விளம்பரத்தில் செல்போனை எப்படி பயன்படுத்தக் கூடாது என்று சொல்லி இருந்த கட்டளைகள் மரண பயத்தை விதைப்பதாக உள்ளன. ஏன் இந்தத் திடீர் விளம்பரம்..?

மனிதன் கண்டுபிடித்தப் பொருட்கள் அனைத்தும், ஆக்கத்துக்கும் அழிவுக்கும் அடிப்படையாக இருக்கின்றன என்ற கூற்று அடிக்கடி நிரூபிக்கப்பட்டு வருகிறது. தொலைத் தொடர்புக்குப் பயன்படுத்தப்படும் செல்போனும் இதுக்கு விதிவிலக்கல்ல. செல்போன் கதிர்வீச்சால் மனிதனுக்குப் பாதிப்பு என்று ஆய்வுகள் மூலம் சொல்லப்பட்டாலும், யாரும் அதைப் பயன்படுத்தாமல் இருக்கப் போவதில்லை.  ஆனால் எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு உணர்த்தவே அந்த அறிவிப்பை மத்திய அரசு செய்துள்ளது.

இதுபற்றி மூளை நரம்பியல் நிபுணர் அலீமிடம் பேசினோம்.

'
இன்று செல்போன் இல்லாத மனிதனை வேற்றுகிரகவாசிபோல பார்க்கும் மனநிலைக்கு மக்கள் வந்துவிட்டார்கள். செல்போன்கள் முழுக்க முழுக்க மின்காந்த அலைவரிசையில் இயங்குபவை. மக்களின் அதிகபட்ச பயன்பாடு காரணமாகக் கண்களுக்குப் புலப்படாத இந்த மின் அலைவரிசைகள், நம் பூமிப்பந்தில் எங்கும் நீக்கமற நிறைந்திருக்கின்றன. இவற்றின் பயன்களைப்போலவே, இவற்றால் சில பாதிப்புகளும் இருக்கின்றன. இந்தக் கதிர்வீச்சினால் அதிகம் பாதிக்கப்படுவது மூளைதான். 20 சதவிகிதம் முதல் 60 சதவிகிதமான நோய்கள் இதன் மூலம் ஏற்படக்கூடியதாக உள்ளன என்பது கண்டறியப்பட்டுள்ளது. மின்காந்த அலைகளான செல்போன் அலைகள், நமது உடலில் செயல்படும் மின்சாரத்துடன் இடையீடு செய்யும். இவை மக்களுக்கு கண் எரிச்சல், தலைவலி, வாந்தி போன்ற பாதிப்புகளை அடிக்கடி ஏற்படுத்துவதாகச் சில ஆராய்ச்சிகள் கூறுகின்றன.

ஒவ்வொரு செல்போனிலும் இருந்து பேசும் நேரத்துக்கேற்ப கதிர்வீச்சின் தன்மை (Specific Absorption Rate -SAR)  அளவிடப்படும்.  ஒரு கிராம் மனித திசுவுக்கு சராசரியாக 1.6W/kg என்ற அளவில் இருத்தல் வேண்டும். இந்த அளவானது, சீன தயாரிப்பு செல்போன்கள் அனைத்திலும் மாறுபட்டு இருக்கும். அவற்றைப் பயன்படுத்துவதால் பாதிப்பு அதிகளவில் இருக்கும். அவை சாதாரண பிரச்னைகள் முதல் காதுகேளாமை வரை ஏற்படுத்தும். அதிகப்படியான கதிர்வீச்சு காரணமாக மூளைப் புற்றுநோய்க்கட்டிகள் வரும் ஆபத்து குறித்தும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. எனினும், அவை இன்னும் நிரூபிக்கப்படவில்லை. குழந்தைகளுக்கு மண்டை ஓடு மிகவும் மெல்லியதாக இருக்கும். கதிர்வீச்சு காரணமாக பிற்காலத்தில் அவர்கள் அதிக பாதிப்புக்கு ஆளாக நேரிடும்.

இதுமட்டுமில்லாமல், நரம்பியல் தொந்தரவாகத் தலைவலிப் பிரச்னை ஏற்படலாம். தொடர்ந்து குறுஞ்செய்தி அனுப்புவதாலும் கைகளைத் தொடர்ந்து ஒரே கோணத்தில் வைத்து பயன்படுத்துவதாலும் மூட்டு எலும்புகள் பாதிப்படையலாம். தோள்பட்டையில் செல்போனை வைத்துச் சாய்ந்தபடி பேசுவதால் தோள்பட்டை வலி, கழுத்து வலி ஏற்படும் ஆபத்து உள்ளது. அதிகப்படியாக பயன்படுத்துவதால், கற்றலில் குறைபாடு, ஞாபகமறதி, தூக்கமின்மை, இதயத் துடிப்பு அதிகரித்தல், உடல் சோர்வு போன்ற பாதிப்புகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிகப்படியான கதிர்வீச்சு காரணமாக விந்தணுக்களின் எண்ணிக்கையில்கூட பாதிப்பு ஏற்படும் என்கிற அதிர்ச்சித் தகவலும் உண்டு. இதுபோன்ற பிரச்னைகளைக் கருத்தில்கொண்ட அரசு,  செல்போன் டவர்களில் இருந்து வெளிப்படும் எலக்ட்ரோ மேக்னடிக் கதிர்வீச்சின் தற்போதைய அளவை, 10 மடங்கில் இருந்து ஒரு மடங்காகக் குறைக்கப்படவேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. ஆனாலும், அதிகப்படியாக செல்போன்கள் பயன்படுத்துவதை நாம் தவிர்க்க வேண்டும்' என்று எச்சரித்தார்.

தேசிய தொலைத்தொடர்புத் துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் சென்னை தொலைபேசி மாநில சங்கத்தின் செயலாளர் சி.கே.மதிவாணனிடம் பேசினோம். ''சில தனியார் நிறுவனங்கள் தங்களுக்கு என ஒதுக்கப்பட்ட அளவைவிட அதிகமாக ரேடியோ அலைவரிசைகளைப் பயன்படுத்துகிறார்கள். இதனால் செல்போன் சிக்னல் சரியாக இருக்கும். ஆனால், இது மனிதர்கள், பறவைகள் மற்றும் சூழலுக்குத்தான் ஆபத்து.  1 வாட் (செல்போன் வெளிப்படுத்தும் கதிர்வீச்சின் அளவு) ஆற்றல் மூலம் மைக்ரோவேவ் அடுப்பில் ஒரு லிட்டர் நீரை 1 டிகிரி செல்சியஸ் வரைச் சூடாக்க 500 விநாடிகள் தேவைப்படுகின்றன. நாம் தொடர்ந்து மொபைல் போனில் பேசுவதால் காதுமடல்கள் மூலம் உள்ளிருக்கும் உறுப்புகளுக்கும் வெப்ப அதிகரிப்பால் பாதிப்பு ஏற்படும். அரசு நிறுவனமான பி.எஸ்.என்.எல் தங்களுக்கு என வரையறுக்கப்பட்ட அளவை மட்டுமே பயன்படுத்துகின்றனர். அதனால்தான், அவர்களுடைய சிக்னல் அளவு குறைவாக உள்ளது என மக்கள் தெரிவிக்கிறார்கள். சிக்னல் நன்றாகக் கிடைக்க வேண்டும் என்பதற்காகச் செய்யும் ஏற்பாடு, மக்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை உணர வேண்டும்' என்றார்.

திடீரென்று மொபைல் ரிங்டோனோ அல்லது குறுஞ்செய்தியோ வந்ததுபோல் இருக்கும். ஆனால், போனை எடுத்துப் பார்த்தால் எதுவும் இருக்காது. அதேபோல அடிக்கடி போனை எடுத்துப் பார்க்கத் தூண்டும். இது சாதாரண விஷயமாகத் தோன்றலாம் ஆனால், இதுவும் ஒருவகை மனநோய் பாதிப்புதான். இதன் பெயர் 'ரிங்டோன் ஃபோபியா.’ இப்படியாக, போனை எடுத்துப் பார்ப்பது அடிக்கடி நிகழ்ந்தால் நம்மை அறியாமலேயே டென்ஷன், பதற்றம், கோபம், முரட்டுத்தனம், படபடப்பு ஆகியவை நமக்கு ஏற்படும். இது  தொடர்ந்தால் செல்போனைக் கண்டாலோ எரிச்சல் வந்துவிடும். இந்தப் பிரச்னைகளுக்குச் சரியான சிகிச்சை எடுத்துக்கொள்ளாமல், கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டால் ஒரு கட்டத்தில் மனநோய்கூட ஏற்படலாம்.

ஆபத்தையும் கையோடு சேர்த்தே வைத்திருக்கிறோம். ஜாக்கிரதை!

செல்போனை ஜாக்கிரதையாகப் பயன்படுத்த சில யோசனைகள்!

செல்போனைப் பயன்படுத்தும்போது காது மடலில் வலி, காது சூடாதல் போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும். அதனால் ஹேண்ட்ஸ் ஃப்ரீ பயன்படுத்துவதன் மூலம் செல்போன் கதிர்வீச்சு பாதிப்புகளில் இருந்து ஓரளவு தப்ப முடியும்.

உங்கள் செல்போனின் சிக்னல் குறைவாக இருக்கும்போது, செல்போனில் பேசுவதைத் தவிர்க்கவும். ஏனெனில் அந்த நேரத்தில் செல்போன், சிக்னலை முழுமையாகப் பெற அதிக அளவு கதிர்வீச்சை வெளிப்படுத்தும்.

செல்போன் பேசும்போது மூளையின் செயல்பாடு சற்றே அதிகமாக இருப்பதாகக் கண்டறியப்பட்டு உள்ளது. எனவே, ஒரே பகுதியில் போனை வைத்துப் பேசாமல் அவ்வப்போது மாற்றி மாற்றி வைத்துப் பேசுங்கள்.

தலையணைக்கு அடியில் செல்போனை வைத்துவிட்டுத் தூங்கும் பழக்கத்தைத் தவிர்க்கவேண்டும். காரணம் ரேடியோ அலைவரிசைகள் மூளையைப் பாதிக்கும் வாய்ப்புள்ளது.

காதில் செவித்திறன் கருவிகள் ஏதேனும் பொருத்தியிருந்தால், குறிப்பிட்ட அந்தப் பகுதியில் இருந்து 15-30 செ.மீ தூரத்துக்கு செல்போனைத் தள்ளியே வைத்துப் பேசுங்கள்.

மொபைல் வாங்கும்போதே அதனின் ஷிகிஸி  அளவை சரி பார்த்துக்கொள்ளவும்.

அழைப்பு இணையப்பெற்ற பிறகு போனைக் காதில் வைத்துப் பேசவும். காரணம், முதல் ஒலியானது அதிக அளவில் தொடங்கி, பின்னர் தேவையான அளவுக்குக் குறையும். அழைப்பு இணையும் சமயத்தில் அதிக ஆற்றல் வெளிப்படும்.

செல்போன்களை சட்டையின் இடதுபக்க பாக்கெட்டில் வைத்தால், கதிர்வீச்சின் மூலம் இதயம் பாதிக்கப்பட வாய்ப்பு உண்டு. எனவே அதைத் தவிர்க்கவும்.

போனில் பேசும்போது இரண்டு ஓரங்களை மட்டும் பிடித்துப் பேசவும். கைகளால் முழுவதுமாகப் பின் பக்கத்தை மூடிக்கொண்டு பேச வேண்டாம். வைப்ரேட் மோடில் செல்போனை வைத்திருப்பதைத் தவிர்க்கவும். பாக்கெட்டில் வைத்திருப்பதால் இதன் மூலம் ஏற்படும் அதிர்வலைகள் அதிகமாக உடல் பாகங்களைத் தாக்குகின்றன. மிக முக்கியமாக போனில் செலவிடும் நேரத்தைக் குறையுங்கள். அழைப்புகளுக்கான நேரத்தையும் கட்டுப்படுத்தினால் உடல்நலன் பாதுகாக்கப்படும்.

விகடன்