செவ்வாய், 24 மார்ச், 2015

வலைப்பூக்கள்

வலைப்பூக்கள் என்பது நமது எண்ணங்களின் வெளிப்பாடு.அதனைப் பலரும் பலவிதங்களில் பயன்படுத்துகின்றனர். நிஜ செய்திகள்,அன்றாடம் அவர்கள் வாழ்க்கையில் சந்தித்தவை,ஆராய்ச்சி செய்திகள்,கதைகள்,கவிதைகள்,தொடர்கதைகள்,பாடக்குறிப்புகள் எனப் பல செய்திகளும் உள்ளடங்கியதாக அவை இருக்கின்றன.பல நேரங்களில் உண்மைக்குப் புறம்பான பல செய்திகளும் அவற்றில் வருவதால் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும்போது சிக்கலாகின்றது. அதற்குண்டான புத்தகங்களைத் தேடி எடுத்துப் பார்த்து சிக்கலுக்கு விடை தேட வேண்டியுள்ளது. பல மென்பொருளைப் பயன்படுத்தித்தான் ஒரு ஆய்வுக்கான முடிவு கிடைக்கிறது.அதற்குப் பல வலைத்தளங்களைத் தேடுவதினால்மட்டுமே விடை சரியாகக் கிடைக்கும்.அதனால் கிடைப்பதுதான் கணினி அறிவியல் புரட்சி.ஆனால் அதற்குண்டான நேரமின்மையால் பலரும் ஒரு மணித்துளிகள் என ஒதுக்கி கிடைத்த சில குறிப்புகளினால் தேடுவதால் இன்றளவில் தமிழுக்கான முழுமையான ஆய்வுகள் கணினியில் கிடைக்கவில்லை.மாணவர்களுக்கு இத்தகைய விழிப்புணர்வினை ஆசிரியர்கள் வளர்க்கவேண்டும்.

வலைப்பூக்களில் பதிவிடுவது எங்கிருந்தாலும் அவற்றை அனைவரும் பார்த்து நல்ல கருத்துகளை வளர்ப்பதற்கும்,பிற்காலத்தில் அவை அனைத்து உலக மக்களுக்கும் பயன்படுத்தக்கூடிய ஒன்று என்பதை ஆசிரியர் வலைப்பூ உருவாக்கத்தின் அவசியத்தை உணர்த்தவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக