ஞாயிறு, 28 ஜூன், 2015

ANDROID APPS TAMIL LEARNING SKILL

 ஆசிரியர்கள் இன்றளவு சிந்தித்துச் செயலாற்ற வைக்கவேண்டிய திறனை மாணவர்களிடம் அளித்தல் அவசியம்.காரணம் செல்லிடப்பேசியின் வருகையைத் தவிர;க்க இயலாததாகி விட்ட காரணத்தினால் புகைப்படம் எடுக்கும் Fலை முதற்கொண்டு ஆண்ட்ராய்டு செயலியை மாணவர்கள் உருவாக்கும் அளவு கற்றுத் தரவேண்டும்.பள்ளிகளில் தமிழ் மொழி ஆய்வுக்கூடங்களில் இத்தகைய ஆண்ட்ராய்ட் ஆப்ஸ்களைப் பயன்படுத்தினால் கற்றல்திறன் வளரும்.காரணம் வகுப்பறைகளில் கணினி மட்டுமே தமிழுக்கு அறிவியல் துணைக்கருவியாக அளிக்கப்படுகிறது.டேப்லட்,செல்லிடப்பேசி இவை இன்றளவில் மாணவரிடம் முழுமையாக அளிக்கப்டாததன் காரணம் விலை உயர்வு.
அடிப்படைசராசரி மக்கள் இன்னமும் முழுமையாக வாங்க முடியாத பொருளாகவே டேப்லட் உள்ளது. இதனால் வகுப்பறைகளில் முழுமையாக அளிக்க இயலாத நிலையில் முழுமையாக மொழிக்கூடங்களில் பயன்படுத்தினால் தமிழ் கற்றல்திறன் வளரும்.கீழ்க்கண்ட் ஆப்ஸ்கள் தமிழ் விளையாட்டுக்கெ அமைக்கப்பட்டவை.இதில் ஆங்கிலத்தில் உள்ளதுபோன்றே ஷூட்டிங்,3இல் 1 வரிசை,வானவியல் விளையாட்டு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.இது டேப்லட்,ஆண்ட்ராய்ட் -இவற்றில் பயன்படுத்தி விளையாடலாம்.இதனால் மாணவர்களுக்கு தமிழ் படிக்க ஆர்வத்தினை விளையாட்டு முறையில் அளிக்கலாம்.மேலும் தொழில்ரீதியாக இளமையிலேயே இவற்றைக் கற்பதால் தொழில்நுட்பம் சார்ந்த கருத்துகள் மாணவர்களிடம் வளரும்.
                    


                                                                                                                   
Your users can download your app from:   http://app.appsgeyser.com/Tamil%20vowels        

Short url: http://www.appsgeyser.com/1603726     Short url: http://www.appsgeyser.com/1757462     
                    


                                                                                                                   
Your users can download your app from:   http://app.appsgeyser.com/Tamil%20vowels        

Short url: http://www.appsgeyser.com/1603726     


வெள்ளி, 26 ஜூன், 2015

colouring tamil activity consonant-ki-4

மரத்தில் காணப்படும் எண்ணின் வரிசைக்கு ஏற்ப இலை வடிவத்தினை  உனக்குப் பிடித்த வண்ணத்தில் வரைந்து கி எழுத்தினைக் கிளிக்கு அடையாளம் காட்டுக.
உனக்குப் பிடித்த வண்ணத்தைக் கொண்டு கிளிக்கு வண்ணம் தீட்டுக.

வியாழன், 25 ஜூன், 2015

PICTURE GAME-KI-3-CONSONANTS

படத்தில் சரியான கி வழியில் சென்று பச்சை வண்ண மிதியடி வழியாக வெளியில் செல்க.(தேவைப்படும் இடத்தில் கப்பல் பயன்படுத்துக.)

திங்கள், 22 ஜூன், 2015

WORKSHEET-TAMIL VOWEL-KI-2

மேலை உள்ள பலூனில் உட்கார்ந்திருக்கும் அம்மா கிளிக்குக் கீழே உட்கார்ந்திருக்கும் குட்டி கிளியிடம் போகப் புள்ளியை இணையுங்கள்.(ATTACH THE ROSE DOTTED LIGN-FIRST-ROW MOTHER PARROT TO NEXT ROW-PARROT)
ஆசிரியரின் பார்வைக்கு
இந்த படத்தினை ஆண்ட்ராய்டு வழியாகவும் மாணவர்களுக்கு அளிக்கலாம்.ஒலியையும் இணைக்கலாம்.

வரைபடப் பயிற்சித்தாள்-கி-1


                                வரைபடப் பயிற்சித்தாள்-கி
படத்தின் இடது பக்கத்தில் இருந்து ஒவ்வொரு வண்டாக இணைத்துப் பூவிற்கு அருகில் எடுத்துச் செல்லுங்கள்.

tamil vowels worksheet-e

3 இதயங்கள் இருக்கும் வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து எழுது.1.வீட்டிலிருந்து வட்டம் வரைக.
2.அம்புக்குறியிட்ட இடத்தின் வழியாக எழுதுக.
3.படத்தில் உள்ள இலையைப்போன்று இருக்கும் இடத்தினைப்பார்த்து அதில் குறிப்பிட்டபடி இ எழுதுக.
4. இலையிலிருந்து வெளியே சென்று இதயத்தில் உள்ளே இருக்கும் வீட்டிற்குச்(ப்)  செல்க.(போ)

worksheet-tamil vowels -e

இராட்சச பலூனிலிருந்து  இறங்கி அம்புக்குறியிட்ட பாதையில் புள்ளியை இணைத்து மாட்டிடம் அகப்படாமல் இலையிலிருந்து வீடு செல்க

சனி, 20 ஜூன், 2015

இணையவழி தமிழ் கற்றல்-கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்களும்,தீர்வுகளும்

இணையவழி தமிழ் கற்றல்-கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்களும்,தீர்வுகளும்
       
                       தமிழ் இணையமாநாடு-2015-சிங்கப்பூர்                                         
                
                                                                                                                                                
                   இன்றைய காலகட்டத்திற்குஏற்ப துணைக்கருவிகளுடன்கூடிய செயல்வழிக்கற்றல்முறை, இணையவழி தமிழ் கற்றல் என இரண்டுமுறைகளில் பலவிதமான புதுமைகளை இணைத்துக் கற்பித்தால்மட்டுமே தமிழ்மொழி வளரும்நிலை காணப்படுகிறது. தமிழ்மொழி பயின்றவருக்கென வேலைவாய்ப்புகள் மிகுதியாக உருவாக்கப்படாததால் தமிழ்மொழி கற்க மாணவர்கள் அதிக விருப்பத்துடன் ஈடுபடுவதில்லை. இணையவழி  தமிழ்கற்றல்-கற்பித்தலில் ஏற்படும் சிக்கல்கள் குறித்தும்,தமிழ்மொழி வளர ஆற்றவேண்டிய பணிகள் குறித்தும் இவ்வாய்வுக்கட்டுரை அமைகிறது.
இணையத்தில் தமிழ்மொழி
வலைப்பூக்களிலும்,வலைத்தளங்களிலும் தமிழ்மொழியினை  முறையாகப் பயின்றோர்மட்டுமே  எழுதுவதில்லை. இதனால் தமிழ்மொழி குறித்தத் தவறான பல செய்திகளை மாணவர்கள் படிக்க நேரிடுகிறது. இதனால் தமிழ்மொழி குறித்த இலக்கண நூல்களையும், இலக்கிய நூல்களையும் இணைத்து அளிக்கவேண்டும். இதனால் கற்றல்திறன் மேம்படும். மொழியியல் ஆய்வு குறித்த விழிப்புணர்வினை ஆசிரியர்கள் மாணவர்களிடம் அளித்திட இணையவழி கற்றல் சிறப்பானது. கல்லூரிகளில் கற்பிக்கும் ஆசிரியருடைய தமிழ்ப்பணி ஒரு குறிப்பிட்டதுறையில் அடங்கிவிடுகிறது. ஆனால், பள்ளிக்கல்வி அளவில் தமிழ்தொடர்பான அனைத்துத்துறைகளையும் உள்ளடக்கி ஆசிரியர் கற்பிப்பதால் அது குறித்த பாடப்பொருளினையும்,மென்பொருள் உருவாக்கத்திறன் குறித்த செய்திகளையும் அறிந்திருத்தல் அவசியமாகிறது. இது குறித்த பயிற்சிகளையே ஆசிரியர்களுக்குப் பல கல்வி நிறுவனங்கள் அளித்து வருகின்றன.
மேசைக்கணினி, மடிக்கணினி, கையடக்க அறிவியல்கருவிகள் எனப்பல நிலைகளில்  மாணவர்களின் கற்றலுக்குத்  துணைக்கருவிகளாகப் பயன்பட்டுவருகின்றன. அதிக அளவில் அறிவியல்சாதனங்களைப் பயன்படுத்துவதால் உடல்நலக்குறைபாடுகள் இன்றளவில் ஏற்படுகின்றன. செல்லிடப்பேசியினை அதிக அளவில் பயன்படுத்துவதால் புற்றுநோய் ஏற்படும் நிலை அதிகரித்துள்ளது. இதனைச் சரிசெய்ய செல்லிடப்பேசி நிறுவனங்கள் சரிவர வழிகாட்டுவதில்லை. இதனால்  பல மாணவர்களின் கற்றல்திறனில் இத்தகைய அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தாதநிலை காணப்படுகிறது. தொடுதிரைக் கணினி, தொடுதிரைச்செல்லிடப்பேசி இவற்றைப் பயன்படுத்தினால் ஏற்படும் விளைவுகள் குறித்து வலைத்தளங்களில் ஆராய்ச்சியாளர்கள் வெளியிட்டுள்ளனர். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பதனைச் சமுதாயம் உணர்ந்து மிகக்குறைந்த அளவில் அறிவியல் சாதனங்களைப் பயன்படுத்தித் தமிழ்மொழி கற்றல்திறனை வளர்க்க ஆசிரியர்கள் வழிகாட்டவேண்டும். தமிழ் கற்றுக்கொடுக்கும் பல வலைத்தளங்களும் அடிப்படைநிலையிலேயே அமைக்கப்பட்டுள்ளன. காலங்கள் மாறுவதற்கேற்றாற்போல இலக்கணப்பயிற்சியுடன்கூடிய தமிழ் வலைத்தளங்கள் அமைக்கப்படவேண்டும். இவ்வலைத்தளங்களைப் பெரும்பான்மையாக அமைப்பவர்கள் அவர்களது நாட்டின் வசதிக்கேற்றாற்போல அமைப்பதினால் மொழி உச்சரிப்பு, இலக்கண விதிமுறைகள் இவற்றினைப் பின்பற்றுவதில்லை.
தமிழ்மொழிக்கென அமைக்கப்பட்ட
www.tamilcube.com
 போன்ற வலைத்தளங்களில் அளிக்கப்பட்டுள்ள ஆங்கில உச்சரிப்பு பலதரப்பட்டவையாகக் காணப்படுகிறது.
 இவ்வாறு அமைக்கப்பட்டுள்ளமையால் குழப்பநிலையே ஏற்படும். மொழியியல் விதிகளுக்கேற்றபடி ‘பழையன கழிதலும்  புதியன புகுதலும்‘ என்பதற்கேற்பத்  தரமான ஆங்கில-தமிழ் உச்சரிப்பு அட்டவணை அமைதல்வேண்டும். கேட்டல்,பேசுதல்,எழுதுதல்,படித்தல் போன்ற திறன்களில்மட்டுமே இணையங்களில் பாடத்திட்டங்கள் அமைதல் இன்றைய காலகட்டங்களில் அவசியமாகிறது. அவரவர் மனதிற்கேற்றாற்போல தாம் நினைப்பதை அனைத்தும்  வலைப்பூக்களில் தமிழ் தொடர்பான செய்திகளைத் தரவேற்றுதலினால் தமிழ்மொழியின் பழமை அழிய நேரிடும்.
www.tamilmitra.com வலைத்தளத்தில்
 • எழுத்துகளின் வகைகள்
 • இனஎழுத்துகள்
 • வேற்றுநிலைமெய்மயக்கம்,உடனிலைமெய்மயக்கம்-எழுத்துகள்
 • வடமொழி எழுத்துகள்
எனப்பிரிக்கப்பட்டு மாணவர்களின் கற்றல்திறனை வளர்க்கிறது.
கற்பித்தலில் ஆற்றவேண்டிய பணிகள்
இணையம் மேசைக்கணினி, மடிக்கணினி, கையடக்கக்கருவி எனப் பல வடிவங்களில் மக்களிடையே இயங்கிவரினும், பாடப்பொருள் உருவாக்கம் என்ற நிலையில் எம்எஸ்பவர்பாயிண்ட்(நழுவல்) அமைக்கப்படவில்லை. இம்முறை மாணவர்களுக்குப் பயிற்சியளிக்க எளிமையானது.
 • பொதுநோக்கங்கள்
 • சிறப்புநோக்கங்கள்
 • ஆர்வமூட்டல்
 • துணைக்கருவிகள்
 • பாடப்பொருள் தலைப்பு விளக்கம்
 • பாடம் பற்றிய குறிப்புகள்
 • மதிப்பீடு
 என்ற அளவில்  ஒளிக்காட்சிகளை வடிவமைக்கும்போது கற்றல்திறன்  வளரும்.
இதற்குத் தேவைப்படும் பயிற்சித்தாள், கணினியில் விளையாடும் சில விளையாட்டுகள், பயிற்சிவினாக்கள், மடிபுத்தகம்(ஃப்ளிப்புக்) போன்றவற்றைத் தரவேற்றும்போது மாணவனே தனக்குரிய பாடத்தினைப் படித்து அறிந்துகொள்ள இயலுகிறது. தானே கற்றல் என்ற நிலையும் உருவாகிறது. ப்ம் கோட்பாட்டிற்கேற்றவாறு   வினாக்களையும் அமைத்துக் கையடக்கக் கருவிகளில் அனைத்திலும் அமைத்துக்காட்டினால் மாணவர்களும் அதனைப்போன்றே உருவாக்குவர். படைப்பாற்றல்திறன் வளரும்போது தேவையற்ற சிந்தனைகள் மாணவர்களிடையே தோன்றாது. பயனற்ற வலைத்தளங்கள்  தமது வாழ்க்கைக்கான பொருளல்ல என்பதை உணரும்வகையில் ஆசிரியர்கள் தமது பாடத்தினை அமைத்திடல்வேண்டும்.
 இணையவழி நூலகங்கள்,அகராதிகள்,தமிழ்மொழி குறித்த பழமை,தமிழ்மொழிக்கும்,பிறமொழிகளுக்கும் அமைந்துள்ள வேற்றுமைகள் இவை குறித்து அமைந்துள்ள வலைத்தளங்களைக் காட்டிப் பயிற்சியளிக்கவேண்டும்.  
தமிழ்மொழியினை இணையவழி கற்பதால் அடையும் பயன்களையும் கருத்தில்கொண்டு ஆசிரியர்கள் பாடப்பொருளினை அமைத்தல்வேண்டும். இன்றளவில் இணையத்தில் இலவசமாகப் பல மென்பொருட்கள் கிடைப்பதைப் பயன்படுத்தி பாடங்களை உருவாக்கி மின்புத்தகங்களைச் சிறுஅளவில் மாணவர்களுக்கு அளிக்கலாம். இதன்வழி மாணவர்களும் மின்புத்தகங்கள் உருவாக்கும் பலதொழில்முறைகள் போன்றவற்றைப் பள்ளிஅளவிலும், கல்லூரிஅளவிலும் அறிந்துகொள்ளும்நிலை உருவாகும். மாணவர்கள் உருவாக்கும் படத்தயாரிப்புகள் நீதிக்கருத்துகள்  நிறைந்து அவரவர் பாடத்திட்டத்திற்கேற்றாற்போல இருப்பதால் ஒளிக்காட்சிகளை உருவாக்குவதில் திறன்படைத்தவர்களாகின்றனர். இதற்குரிய பல மென்பொருட்கள் குறித்து அவர்கள் அறிவதால் இதனைத் தமிழ்மொழியில் எவ்வாறு பயன்படுத்தமுடியும் என்பது குறித்து அவர்களால் அறிந்துகொள்ள இயலுகிறது. உருவவடிவங்களைத் தமிழ் இலக்கியங்களில் உருவாக்கும்நிலை வளரவேண்டும். எழுத்து,சொல்,செய்யுள் போன்றவற்றின் சொல் உச்சரிப்பினைப் பதிவுசெய்து வலைப்பூக்கள்,இணையத்தளங்கள்,கையடக்கக்கருவிகள்போன்றனவற்றில் அளிக்கலாம்.
வகுப்பறைச்சூழலுக்கேற்ற பலவிதமான கற்பித்தல்முறைகளினையும் ஆசிரியர்கள் பதிவுசெய்து அளித்திடும்போது மாணவர்களின் கற்றல்திறன்,பண்பாடு போன்றவை பாதுகாக்கப்படுகிறது.புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் கற்றல்-கற்பித்தல்
தொடக்கக்கல்விநிலை அளவில் புலம்பெயர்ந்த நாடுகளில் வசிக்கும் மக்கள் தமிழ் கற்கும் அளவில் இணையத்தில் தமிழ்ப்பாடங்கள் வரையறுக்கப்படவேண்டும்.
இப்பாடத்திட்டமுறைகளைத் தமிழ் இணையக் கல்விக்கழகம் பின்பற்றிவருகிறது. நடைமுறை மாற்றங்களுக்கேற்றாற்போல மாணவர்களின் மனதைப் புரிந்துகொண்டு மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறது. இத்தகைய நிலையில் அல்லாது தமிழ் இணையக் கல்விக்கழகம் அனைத்து நாடுகளில் இருந்தும் மாணவர்கள் பயில்வதற்கேற்றாற்போலப் பாடத்திட்டங்களை அமைத்துள்ளது. கையடக்கக் கருவிகளிலும் பாடத்திட்டங்கள் அமைத்துள்ளவை சிறப்பானது. இருப்பினும், அட்டைக்கணினியின் அளவுக்கேற்பப் பாடங்களின் ஒளிக்காட்சி அமையவில்லை. மிகவும் சிறியதாகக் காட்சியளிப்பதால் மாணவர்களின் பார்வைத்திறன் பாதிக்கப்படும் நிலை ஏற்படும். அவரவர் நாடுகளுக்கேற்ற பேச்சுத்தமிழ்மொழியினைக் கருத்தில்கொண்டு வலைத்தளங்கள் அமைப்பதால் தமிழ்கற்றல் குறித்தான இணையவழிச்செயல்முறை மட்டுப்படுத்தப்படுகிறது. இதனைப்போக்க ஆங்கிலவழியினில் உச்சரிப்பினை அளிக்கவேண்டியநிலையில் இருப்பதால் இணையத்தளத்தில் கற்றல்நிலையினையும், தமிழ்தொடர்பான பாடப்பொருளையும் தெளிவாக்கிப் பதிவிடவேண்டும். குறிப்பிட்ட சில இணையத்தளங்களில் சில பகுதிகள்மட்டுமே பாடங்கள் தெளிவுடன் அமைக்கப்பட்டுள்ளன.
சிக்கலுக்கான தீர்வுகளும்,வருங்காலத்தில் தமிழின்நிலையும்
எழுத்துகளைக் கற்றல்நிலையில்
 • அடையாளம் காணுதல்
 • புள்ளியிட்ட இடத்தில் எழுதுதல்
 • வண்ணம் தீட்டுதல்
 • நிழலிட்ட இடத்தில் எழுதுதல்
 • எழுத்துகளை முறையாக எழுதும்முறை
 • எழுத்துகளை வெட்டி மாற்றிச் சரியாக அமைத்துக்காட்டும் முறை
 • எழுத்துகளுக்கேற்ற சொல் அமைவுகளுடன்கூடிய படங்கள்
போன்றவற்றைக்கருத்தில்கொண்டு  பயிற்சித்தாள்களும்,ஒளிக்காட்சிகளும் அமைக்கவேண்டும்.
தமிழ் கற்றல்குறித்து வலைப்பூக்களில் இது தொடர்பான செய்திகள்குறித்து அமைக்கும்போது உருவாக்கியவர்கள் தவறுகளைத் திருத்தாமல் பல வருடங்களாகியும் அதனை அவ்வாறே தொடர்ந்து வருகின்றனர். கால மாற்றங்களுக்கேற்பத் தமிழ் கற்றல் தொடர்பான வலைத்தளங்களும், வலைப்பூக்களும் மாற்றம் செய்வது அவசியமாகும். நாம் காணும் இடங்கள் அனைத்திலும் மலர்கள் நிறைந்த பூங்காவாக இருப்பதில்லை. அதுபோல இணையத்திலும் தேவையற்ற பல செய்திகள் இருப்பதை விலக்கிப் பண்பட்ட வாழ்க்கைக்கான நெறிமுறைகளை விளக்கி அதன்வழி நடந்து  இணையவழி கற்றல்,கற்பித்தலை வளர்க்க ஆசிரியர்கள் முன்வரவேண்டும்.இணைய வழி கற்பித்தலால் பலவிதமான செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ளஇயல்வதால் மாணவர்களுக்குப் பலவிதமான நன்மைகள் ஏற்படுகின்றன. இணையவழி தமிழ் கற்றலின்போது மாணவன் விடுப்பு எடுக்கும் நாட்களிலும் பாடத்தினை ஆசிரியர் அளிக்கும் பாடப்பொருள்வழியாகக் கற்றல்நிலையினை அடைய இயலுகிறது. கடின நடையுடன் கூடிய பாடப்பொருளுடன் அமைக்கப்பட்ட தமிழ்ப்பகுதியினை மாணவ சமுதாயம் விலக்குவதால் எளியநடையுடன்கூடிய பாடப்பகுதிகளை அமைத்துக் கற்றல்திறனை அமைக்கவேண்டும். இதனால் களஆய்வுப் பணியில் கிடைக்காத பல செய்திகள் இணையத்தில் நமது வீட்டு வரவேற்பறையில் கிடைக்கும்.  தேடிக் கற்றல்நிலையினைக் கிராமங்களில் காண இயலாது. இத்தகையநிலையினை இணைய வசதிகள் நமக்கு அளித்திடும்போது அதனை நாம் சரிவரப் பயன்படுத்திக் கொள்ளுதல்வேண்டும்.
 பலவிதமான புகைப்படங்களைத் தரவேற்றுவது, வேண்டாதவர்களைப்பற்றிய அவதூறுகளைப் பதிவது போன்ற குற்றங்கள் இதனால் குறைவடையும். இதுபோன்ற பல குற்றங்கள் பெருகிவருவதால் இணையத்தளங்களில் ஆசிரியப்பணியை மேற்கொண்டுள்ள பெண்கள் சமுதாயம் பங்குபெற முன்வருவதில்லை. நேரமின்மையும் பெண்களுக்கு இணையத்தில் ஈடுபடமுடியாமைக்குக் காரணமாக அமைகிறது. சில பள்ளிகளில் இன்னமும் இணைய வசதி சரிவர அளிக்கப்படவில்லை. கையடக்கக்கருவியில் அனைத்து வசதிகளும் இருப்பினும், ஆசிரியர்கள் பெரும்பான்மையாகப் பள்ளி அளிக்கும் வசதியினையே எதிர்பார்த்துக்காத்திருப்பதால் நன்னூல் காட்டும் ஆசிரியர் சமூகம் மாறிவிட்டநிலையை அறிய இயலுகிறது. இணைய வசதியற்ற பயிற்சித்தாள் உருவாக்கநிலை என்றநிலையில் மட்டும் தங்களது கற்பித்தல்நிலையை மேற்கொண்டு வாழ்ந்து வருகின்றனர். ஆசிரியப்பணியைப் பெரும்பான்மையாகப் பெண்களே மேற்கொண்டு வாழ்ந்துவருகின்ற இக்காலகட்டத்தில் இந்நிலை மாறவேண்டும். முகநூல் என்பது புகைப்படங்களை வெளியிடும் வலைத்தளமல்லாது பலவிதமான செய்திகளை உருவாக்கவல்லதாகவும் இருக்கவேண்டும். ஆனால், இன்றைய மாணவர்கள் புகைப்படங்களை மட்டும் உருவாக்கி வெளியிடுவதில்  காலத்தை வீணாக்குவதால் செல்லிடப்பேசியினைப் பள்ளிகளில் பயன்படுத்த அனுமதிப்பதில்லை. இதனால், அவற்றில் காணப்படும் பிற நல்ல அறிவியல் கருத்துகளையும் அறியமுடிவதில்லை. ஆசிரியர் எடுத்துரைத்தால்தான் அவற்றிலுள்ள வசதிகளை அறியஇயலும்நிலை காணப்படுகிறது. ஆண்ட்ராய்டில் பலவிதமான ஆப்ஸ்களை(குறுஞ்செயலி) உருவாக்குவதன்வழி தமிழ் கற்றல்நிலை விரைவாக வளர்ச்சியடையும். இதனைப் பலவிதமான படிநிலைகளில் அளிக்கலாம்.(www.appsgeyser.com-vanitamil)
 • எழுத்துகளை அறிதல்
 • பொருத்தமான படத்தினைத் தேர்க
 •  படத்திற்குப் பொருத்தமான வாக்கியம் தேர்க
 • பொருத்தமான படத்திற்குத் தகுந்த சொல்லைத் தேர்க
எனப் பல நிலைக்கல்விகளுக்குத் தகுந்தாற்போல இம்மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
அனுபவமற்ற வயதில் மிகவும் இளைய கல்லூரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வி கற்பித்தலில் அனுபவம்பெறாமல் நேரிடையாகக் கற்பித்தலில் ஈடுபடுவதால் கல்லூரி மாணவர்களின் கற்பித்தல்திறன் பாதிப்படைகிறது. தமிழ்மொழி வாழும் வாழ்க்கையின் பொருளிற்கேற்றாற்போல அமைக்கப்பட்டிருப்பினும் மாணவரின் மனநிலைக்கேற்றாற்போலக் கற்பிக்கும் ஆசிரியர்கள் சமுதாயம் மிகவும் குறைந்தநிலையில் காணப்படுகிறது.
ஆங்கிலமொழித்தாக்கத்தின் வழியாகவும், தொழில்முறையின் காரணமாகவும் தமிழ்மொழி கற்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துவருகிறது. தமிழ்மொழி அழியாமல் இருக்க அறிவியலுடன் தொடர்புடைய தமிழ்மொழிக்கான அனைத்துத் தரவுகளும் ஒருங்கே தரவேற்றப்படுதல்வேண்டும். இது தமிழ்மொழி பேசும் அனைவரின் ஒருமித்த கடமையாகும். இவ்வாறு  இணையத்தில் தமிழ்மொழி பணி சிறக்கும்போதுமட்டுமே தமிழ்மொழி வருங்காலத்தில் சிறந்துவிளங்கும்  என்பது இவ்வாய்வுக்கட்டுரையின் முடிவாகிறது.
திருவள்ளுவர் வரலாறு

                                வள்ளுவர்-வாழ்க்கை வரலாறு
பொதுவாக வள்ளுவர் குறித்த பல வரலாறு சொல்லப்படுவதுண்டு.
இவர் பாண்டிய மன்னர் தலையானங்கானத்து நெடுஞ்செழியனிடம் தலைமை அமைச்சராகப் பணியாற்றியவர்.
இறையனாரின் மாணாக்கரான உலகநாதப் பேராசானிடம் வள்ளுவரும்,பாண்டியமன்னரான உக்கிரப் பெருவழுதியும் ஒன்றாகக் கல்வி பயின்றவர்.(12 வருடம்)
பின்னர் மயிலையை அடைந்து வீரனாக விரும்பி மறக்கலை ஆசான் உத்தண்டி தேவரிடம் போர்க்கலை பயின்றார்.
நண்பரான உக்கிரப்பெருவழுதி அமைச்சன் நாகநாதன் சூழ்ச்சியினால் வள்ளுவரைப் பாண்டியநாட்டிற்கு அழைத்தார்.இதனால் நாட்டிற்குப் பல அரிய பல தொண்டுளை ஆற்றிய வள்ளுவர் அகநானூறு என்ற நூலினை அரங்கேற்ற வைத்தார். ரோமாபுரி சென்று கடல்வாணிபம் செழிக்க உடன்பாடு கண்டார்.அங்கே உலகமாவீரன் என்ற பட்டத்தினையும் பெற்று,கிடைத்த பரிஜசை பாண்டியநாட்டிற்கு அளித்தார்.மார்க்கசகாயன் என்ற குறுநிலமன்னரின் மகள் வாசுகியை மணந்தார்.நட்பின் பெருமை அறியா உக்கிரப்பெருவழுதியின் மனைவி எழிலரசி தொல்லை கொடுத்தார்.அமைச்சர் பணியிலிருந்தும் விலகி மயிலை சென்று நெசவுத்தொழிலில் ஈடுபட்டார்.நாகநாதன் சூழ்ச்சியினால் மனைவி வாசுகியை இழந்தார்.ஈழத்துப்பெருவணிகன் ஏலேலசிங்கன் மாணவனாகி வேண்டிக்கொண்டதன் பொருட்டு திருக்குறளை முறைப்படுத்தினார்.
நன்றி
வி.ஆனந்தகுமார்

PRIMARY GAMES&COLOURING WORKSHEET-1


ஆசிரியர்கள் குறிப்பு.
பலகையில் எழுதவும்,பென்சிலாலும்,பேனாவினாலும் எழுதிப் பழகிய மாணவருக்கு ஒரு புதுவிதமான விளையாட்டை அறிமுகப்படுத்தி குறிப்பிட்ட நேரத்தில் எழுத வைக்கலாம்.
எடுத்துக்காட்டாக
படத்தில் காணப்படும் அன்னாசி படத்தினை வண்ணம் தீட்டுக.
அம்புக்குறியிட்ட இடத்தின் வழியாக அ வை உனக்குப் பிடித்த வண்ணத்தில் எழுதி  வெளியே உள்ள அம்மா படத்தைச் சென்றடைக.(தெரிந்த ஒரு பொருளில் இருந்து தெரியாத ஒரு சொல்லைப் படித்தல்)
அன்னாசி-அம்மா

புதன், 10 ஜூன், 2015

இணையத்தில் தமிழ் கற்றல்,கற்பித்தல்- இன்றைய நிலை-ஓர் ஆய்வு

          இணையத்தில் தமிழ் கற்றல்,கற்பித்தல்- இன்றைய நிலை-ஓர் ஆய்வு
                                             முனைவர் பி.ஆர்.இலட்சுமி.,        பி.லிட்., எம்.ஏ(தமிழ்).,எம்.ஏ (மொழியியல்)., எம்ஃபில்., புலவர்., பிஎச்.டி., டிசிஇ.,
(பிஜிடிசிஏ.,எம்.ஏ(ஜெஎம்சி).,டிசிஏ., எம்பிஏ).,
                                     
                                                           சென்னை-66.

மொழி மனிதனின் எண்ண வெளிப்பாடு. அத்தகைய மொழியினைக் கற்றலும்,கற்பித்தலும் சிறப்புடையதாக அமைதல் அவசியமாகிறது.
கற்க கசடற என்பது வள்ளுவன் வாக்கு. அத்தகைய கல்வியினை நாம் மொழிப்பாடத்தின்வழி பெறுகிறோம். இப்புவி உலகில் மனிதன் வாழ எத்தனிக்கும்போது ஒரு குறிக்கோளுடன் இயங்க தகுதி உடையவரால் பணிக்கப்படுகிறான். அக்குறிக்கோளினை அடைய தமிழ்மொழி உதவி புரிகிறது.  இத்தகைய தமிழ்மொழி கற்றல் கற்பித்தல் முறைகள் குறித்து ஆய்வது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகிறது.
தமிழ் கற்றல்
தமிழ் கற்றல் இன்றைய உலகில் பல்வேறு இடங்களிலும் பல முறைகளில் நடந்து வருகிறது.அடிப்படைத் திறன்களானகேட்டல்,பேசுதல்,படித்தல்,எழுதுதல் போன்றவைகளின் வழியாக மாணவர்கள் பள்ளிக்கல்வி முதல் கல்லூரிக்கல்விவரை மொழிக்கல்வியைக் கற்கின்றனர்.மொழியினைக் கற்க இயல்பான ஆர்வம்,எழுதும் பயிற்சி,பேசும் திறன்,படைப்பாற்றல் திறன் அனைத்தும் தேவைப்படுகிறது.கையெழுத்து ஒரு மாணவனின் வாழ்க்கையைச் சீர்திருத்தும்.இக்கையெழுத்துப்பயிற்சியினை இன்றளவில் மாணவர்கள் ஏடுகளில் எழுதிப் பழகுகின்றனர்.  இயல்பான வகுப்பறையில் பயிலும் மாணவனின் கல்விநிலைப்பயிற்சி தேர்ச்சி சதவிகித அளவு செயல்வழிக்கல்விநிலைப்பயிற்சி தேர்ச்சி சதவிகித அளவினைவிடக் குறைவாக இருக்கிறது. உலகளாவிய அளவில் இன்றளவும் முழுமையாக இணையத்தின்வழி கற்றல் மாணவர்களிடையே நடைபெறவில்லை.
எழுதும் பயிற்சி மாணவர்களிடையே குறைந்து வருதல்,ஆசிரியர்களுக்கே கணினி குறித்த விழிப்புணர்வு இல்லாமை போன்றவை இதற்குக் காரணங்களாக அமைகின்றன. பெரும்பான்மையாகக் தொடக்கக் கல்வி கற்பித்தல் பணியில் பெண் ஆசிரியர்களே கற்பிக்கின்றனர். அந்நிலையில் பெண்கள் இணையம் பயன்படுத்துவது இன்னமும் பல குடும்பங்களில் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையும் காணப்படுகிறது. இத்தகைய சூழ்நிலையில்  ஆசிரியர்கள் பயிற்சி  ஏடுகள், கரும்பலகை, பசும்பலகை,மின்னட்டைகள்,செயல்திட்ட கையேடுகள் இவற்றைத் துணையாகக் கொள்கின்றனர். இதனால் பள்ளிகளிலேயே ஆசிரியர்களுக்குத் தகுந்த காலம் ஒதுக்கி இணையம் தொடர்பானவற்றை அளிக்கப் பயிற்சி அளிப்பதினால் இணையம் வழி கற்பித்தலை மேம்படுத்தலாம். ஆசிரியரின் கற்பித்தல் திறனிலும் புதிய பல உத்திகளைப் பயன்படுத்தலாம்.ஒரு வகுப்பறையில் இரண்டிற்கு மேற்பட்ட கற்பித்தல்முறைகள் நிகழ்வது கற்றல்திறனைப் பாதிக்கும்.
இணையப் பயன்பாடு
                    ஆங்கிலமொழியில் உள்ளதுபோல ஆண்ட்ராய்டில் பயன்படுத்தக்கூடிய திறன்களுடன் கூடிய விளையாட்டுப்பயிற்சி(pre school writing method, preschool skill,Toddler animated puzzle) தமிழில் அமையவேண்டும். பிற பாடங்களுக்கு இருப்பதுபோன்ற விளையாட்டுமுறையுடன் கூடிய கல்வி கணினியில் அமையுமானால் தமிழ் கற்க மாணவர்களுக்கு ஆர்வம் வளரும்.செல்லிடப்பேசி வரவால் மாணவரின் கவனம் முழுவதும் திசை மாறிச் சென்றுகொண்டிருக்கும் இவ்வேளையில் இணையத்தின் வழி தமிழ் கற்க பல வலைத்தளங்கள்  உதவி புரிகின்றன. எழுத்துகளின் ஒலித்திறனை உணர்ந்து கற்க www.noolagam.com உதவி புரிகிறது. இணையவழியில் பலவித மென்பொருட்களைப் பயன்படுத்தி குறுக்கெழுத்துப்புதிர்கள், விளையாட்டுகள் அமைக்கலாம்.
நடுநிலைக்கல்வி கற்பதற்குத் தேவையான மின் நூலக வசதியினைப் tamil virtual academy.com வழங்குகிறது. தேவைப்படும் வரைகலையை இணைய வழியாகக் கற்று ஆசிரியர்கள் மாணவர்களுக்குப் பயன்படுத்தலாம்.
கற்பித்தல் திறன்
ஆரம்பக் கல்வி நிலை மாணவர்களின் படைப்பாற்றல் திறனை வெளிக்கொணர
v  எழுத்துப் புள்ளிகளை இணைத்தல்
v  வண்ணங்களை வேறுபடுத்திக் காட்டுதல்
v  நிழலிட்ட படங்களைப் பொருத்திக் காட்டுதல்
v  நிழலிட்ட எழுத்துகளைப் பொருத்திக் காட்டுதல்
v  மாறுபட்ட எழுத்துகளை ஒழுங்குபடுத்துதல்
v  எழுத்துகளைப் பொருத்திக்காட்டுதல்
போன்றவற்றின்வழி எழுத்துகளை மாணவரிடம் தெளிவாகக் கற்பிக்கலாம். அடுத்த படிநிலையாக சொற்களை இணைத்து எழுதும் பயிற்சியினை அளிக்கலாம். இவற்றினிடையே நாநெகிழ் பயிற்சி,நா பிறழ் பயிற்சி போன்றவற்றை அளிக்கலாம்.10 வயது மாணவனுக்கு குறைந்தபட்சம் ஐயாயிரம் சொற்களை எழுதப் பயிற்சியளித்தல் அவசியமாகும்.
மொழி காலங்கடந்து மனிதனின் துணையாக அமையக்கூடிய கருவி. இத்தகைய தமிழ்மொழி கற்றல்-கற்பித்தலில் காணப்படும் சில குறைபாடுகளை நீக்கி கற்கின்ற முறைதனைத் தெளிவாக்கியது இவ்வாய்வுக் கட்டுரையின் வழி அறிய முடிகிறது.