வியாழன், 12 டிசம்பர், 2013
சனி, 7 டிசம்பர், 2013
கணினியை இயக்கலாம்
கணினியை இயக்கலாம்
அலுவலகங்களில் உள்ள உங்களது கணினியை
உங்கள் வீட்டிலிருந்து இயக்க வழியும்,
வசதியும் கிடைத்தால் எவ்வளவு வசதியாய் போய்விடும் என்று எண்ணி,
இயங்கு தளம் மாறுபடுகிறது என்ற
காரணத்தால் விட்டுவிட்டீர்களா?
வீட்டில் குனு/லினக்ஸ்-ம் அலுவலகத்தில்
விண்டோஸ் இயங்குதங்களும் பயன்படுத்துகிறீரா? குழப்பம் தேவையில்லை.
உங்களுக்கான வழி இதோ! விண்டோஸ் இயங்கு தளங்களில் உள்ள மிக முக்கியமான மற்றும்
மிகவும் பயனுள்ள வசதிகளில் ஒன்றான இந்த ரிமோட் டெஸ்க்டாப் லாகின்
எனப்படும் தொலைதூரத்திலிருந்து இணைய வசதியுடன் உங்கள் கணினியை இயக்கும்
வசதியை எந்த ஒரு லினக்ஸ் விநியோகஸ்தர்களும் வழங்கவில்லை. ஆனால் இவ்வசதியை வெளியிலிருந்து கிடைக்கும் பலவகை மென்பொருட்களின் துணை கொண்டு
பெற முடியும். அந்த வகையில் Remmina
Remote Desktop எனப்படும் ஓபன் சோர்ஸ் மென்பொருள் பயன்படுத்த எளிமையாகவும், இலவசமாகவும் நமக்கு
கிடைக்கிறது. இந்த மென்பொருளை எவ்வாறு தரவிறக்கி நிறுவுதல் மற்றும் பயன்படுத்தல்
பற்றி இந்த கட்டுரையில் காணலாம்.
படி 1:
உங்கள் விண்டோஸ் கணினியை ரிமோட் ஆக
இயக்க அல்லது மற்ற கணினிகளை இணைக்க,
அது உங்களுக்கு அனுமதி அளிக்க வேண்டும்.
அந்த அனுமதியைப் பெற நீங்கள்
கணினியிலுள்ள இதற்கான செயல்பாடுகளை enable செய்ய
வேண்டும்.
படி 2:
பதித்தல்
உபுண்டு இயங்கு தளமானது, விண்டோஸ் இயங்கு
தளங்கள் பயன்படுத்தும் RDP எனப்படும் Remote
Desktop Protocol – யை இயக்கும்
மென்பொருட்களைக் கொண்டு வருவதில்லை. நாம் தான் நம் தேவைக்காக உபுண்டு மென்பொருள்
தளத்திலிருந்து தரவிறக்கி நிறுவிக்கொள்ள வேண்டும்.
இதை செய்ய, Applications – Ubuntu Software Center வழியாக செல்லலாம். அங்கே Get Software என்பதை தெரிவு செய்து, அதில் Remote Desktop என தேடவும். தேடலுக்கு விடையாக, பல மென்பொருட்களின் பெயர்கள் வரிசைபடுத்தப்பட்டிருக்கும். நாம் இங்கு, பயன்படுத்துவோர் மத்தியில் மிகவும் புகழப்பட்டு வரும் Remmina Remote Desktop – யை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்த வரிசையிலிருந்து Remmina Remote Desktop – யை தேர்ந்தெடுத்து Install செய்துகொள்ளவும்.
இதை செய்ய, Applications – Ubuntu Software Center வழியாக செல்லலாம். அங்கே Get Software என்பதை தெரிவு செய்து, அதில் Remote Desktop என தேடவும். தேடலுக்கு விடையாக, பல மென்பொருட்களின் பெயர்கள் வரிசைபடுத்தப்பட்டிருக்கும். நாம் இங்கு, பயன்படுத்துவோர் மத்தியில் மிகவும் புகழப்பட்டு வரும் Remmina Remote Desktop – யை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
இந்த வரிசையிலிருந்து Remmina Remote Desktop – யை தேர்ந்தெடுத்து Install செய்துகொள்ளவும்.
படி 3:
கட்டமைத்தல்:
Applications – Internet என்ற வழியில் ரெம்ம்மினாவை திறந்து கொள்ளலாம். அதில் New Connection என்ற பட்டன் யை தேர்ந்தெடுக்கவும். இது உங்கள் Remote Desktop Preference window யைத் தரும். இங்கு தான் நாம் நம்முடைய இணைப்புகளை
கட்டமைத்துக் கொள்ளப்போகிறோம்.
அதில் உள்ள profile பகுதியில், உங்களுக்கு
விருப்பமான பெயரை நீங்கள்
ஏற்படுத்தப் போகும் இணைப்பின் பெயராக
கொடுக்கவும். அதன் பின் அதில் உள்ள
Basic Tab – ல் உள்ள server
field – ல் உங்கள் விண்டோஸ் கணினியின் IP Address யையும், பயனர் கணக்கு
விபரங்களையும் உள்ளிடவும். அது மட்டுமல்லாமல் உங்களுக்கு தேவையான
கலர் தீர்மானத்தையும் செய்துகொள்ளலாம்.
உங்கள் உபுண்டு தளத்திலுள்ள ஒரு
குறிப்பிட்ட அடைவை விண்டோஸ் உடன்
பகிர்ந்து கொள்ள விரும்பினால் அதே
திரையிலுள்ள Share folder என்பதனை கிளிக்
செய்யவும். அதன் பின் நீங்கள் பகிர
விரும்பும் அடைவைத் தேர்ந்தெடுத்துக்
கொள்ளலாம்.
இது தவிர,
அதிகப்படியான கட்டமைப்புகளுக்கு, Advanced Tab யை அழுத்தவும்.இவ்வாறாக அனைத்து விதமான கட்டுமான அமைப்புகளையும்
செய்து முடித்த பின், connect பொத்தானை அழுத்தவும். இப்போது உங்கள் விண்டோஸ் கணினி on செய்யப்பட்டிருந்தால், உங்கள் கணினியுடன்
இணைக்கப்பட்டிருக்கும்.
நம் அனைத்து வேலைகளையும் செய்து
முடித்தபின், இணைப்பை மூடும் போது,
Remmina தாமாகவே அந்த இணைப்பு விவரங்களை
சேமித்து வைத்துக் கொள்கிறது.
தேவைப்படும் சமயத்தில் திரும்ப நாம்
இணைத்துக் கொள்ளலாம்.
ஆக்கம்:ஆனந்தராஜ்
வியாழன், 5 டிசம்பர், 2013
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)