சனி, 23 மே, 2015

கதை எழுதும் பயிற்சி

 மார்க் எல்லாத்திலேயும் கம்மியா வாங்கியிருக்கேன்னு அம்மா திட்டுவான்னு பார்த்தியா?
இல்லேம்மா…….அது வந்து………படிச்சதெல்லாம் மறந்து போச்சு……………….
இல்லை…நான் ஒண்ணும் சொல்ல மாட்டேன்.
ஏம்மா……நீ என்னைத் திட்டினால்தானே நான் நல்லா படிப்பேன்.
அம்மா படுகிற கஷ்டம் உனக்குத் தெரியும்.நீ புரிஞ்சு அடுத்த தடவை படிச்சுடுவேன்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.
உன்னை எல்லோரும் கேட்பாங்களேன்னு தோணலியாம்மா…..
யாருக்காகவும் நாம் வாழ முடியாது.ஊர்ப் பெருமைக்காக காப்பியடிச்சு மார்க் வாங்கி என்ன புண்ணியம் சொல்லு......?
ஹாலில் யுனிவர்சிட்டி எக்சாமுக்குத் தயார் செய்து கொண்டிருந்த கலா நிமிர்ந்தாள்.
ஆமாம்மா…..இப்பல்லாம் யுனிவர்சிட்டி எக்சாம் எல்லாம் முக்கால்வாசி அப்படித்தாம்மா இருக்கு….எதுக்கு டிகிரி வேல்யுன்னே தெரியலை….
எங்கே சென்டர் உனக்கு?
ஏதோ சின்ன இடம்மா…….அது யுனிவர்சிட்டி ஸ்டடி சென்டர் இடம்மா…ஒரே ஹீட்டும்மா…எழுதவே முடியலை…..கஷ்டமா இருந்துச்சு…அப்புறம் ஃபேன் அடியில் உட்கார்ந்து எழுதிட்டு வந்தேன்.அப்ப கூட நினைச்சேன்.கிராமத்துல இதுகூட இல்லாத இடம் எல்லாம் இருக்கே…இதுக்குப்போய் நம்ம மனசு அலைபாயுதேன்னு…ஆனா ஃபீஸ் வாங்கிட்டு இப்படி உட்கார வச்சிட்டாங்கன்னுதான் வருத்தப்பட்டேன்.
கவலையே படாதே.நீ இன்னும் நிறைய டிகிரி வாங்கறதுக்காகப் படிச்சேன்னா அதே சென்டருக்கு இன்னும் சில வருஷம் கழிச்சு போனேன்னா ஏசிலேயே உட்கார வைத்து எழுத வைப்பாங்க பாத்துக்கோ எனச் சிரித்த அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள் சூர்யா.
நான் டீச்சர்.காப்பியடிக்காதே..நல்லா படின்னு கைடுலைன் கொடுத்து ஒரு மாணவனைச் சொன்னா அவன் சிரிக்கிறான்.காரணம் பள்ளிக்கல்வியை மட்டும் சொல்றீங்களேன்னு…………சமூகத்தைத் திருத்துகிறமாதிரி கதைகள் மட்டும் திறனாய்வு செய்கிற கலாசாரம் போதுமான்னு கேட்கிறான்.என்ன பதில் சொல்வே அதுக்கு?நாம நம்மை சுத்தமா வைச்சிருந்தா போதும். சமுதாயம் தானாத் திருந்தும்.தெரியுதா…………
இது சைக்கிள்மாதிரி.நான் தப்பு செஞ்சா நீ மட்டும் செய்யலைன்னா ரொடேஷனுக்கு சரியாக வராதுல்ல…..அப்ப எப்படி திருத்துவீங்க?
போராடித்தான் ஜெயிக்கணும்….மனசாட்சின்னு ஒண்ணு இருக்குல்ல…எதுக்காகப் பாடுபடுகிறோம்….யாருக்காக இருக்கிறோம்…அதை மறந்து செஞ்சா எப்படி?
இதுக்கா அந்தக் காலத்துல சுதந்திரம் வாங்கித் தந்தாங்க?
தப்பு செஞ்சா ஜெயிலுக்கு போவேன்னு சொன்னா காந்தியடிகள் இருந்த ஜெயில் மாதிரியா?இப்ப இருக்கற ஜெயில் மாதிரியான்னு கேட்கிறான்.என்ன பதில் இதற்கு சொல்ல…..பாடத்துல மட்டும் பண்பாட்டிற்குத் தேவையானதை மட்டும் கொடுத்துட்டு இன்னைக்கு இளைஞர்களைக் கடைபிடின்னு சொன்னா பத்தாது. வாழ்ந்தும்  காட்டணும்.
இரண்டு நாளுக்கு முன்னாடி சின்னதா ஒரு கார்ட்டூன் பார்த்தாயா?
மார்க் கம்மின்னா என்னன்னு?வந்ததைச்தானே சொல்றே!
அறிவைப் பெருக்கி நாட்டின் வளர்ச்சியை அதிகரிப்பதுதானே இளைஞர் கடமை. தீமையை வளர்க்கக் கல்வி இல்லையே?
படிச்சவங்களும் பணிஞ்சுதானே போறாங்க இதுக்கு?
அப்போ படிச்சவங்க தனக்கும்,தன்னுடைய குடும்பத்துக்கும் வேணுங்கற வசதி கிடைக்கலேங்கறதுக்காக வன்முறைக்குத் துணைபோவதுதானா கல்வியின் அடிப்படை? ஒவ்வொருத்தரும் பணத் தேவைக்காக நியாயமில்லாத காரியத்தைச் செஞ்சா விளைவு எப்படி இருக்கும் தெரியுமா?
அதோ பார்….வானத்துல எத்தனை நட்சத்திரங்கள்.பால்வெளி மண்டலம் படித்திருக்கிறாயா?அதுபோலத்தான் நம்மைச்சுற்றி இருக்கறது எல்லாம்.
நீ இயற்பியல் ஆசரியர்தான்.நேர்மையானவர்தான் ஒத்துக்கறேன்.
அன்புன்னா என்னன்னு தெரியுமா?அதோ பார் அந்த மரத்தின் கீழே விதைகள் விழுந்து முளைத்திருப்பதை…..எத்தனை விதைகள் பார்த்தாயா?
ஒவ்வொன்றும் ஒவ்வொரு வளர்ச்சியில்.
அந்த மரம்போலத்தான் ஆசிரியர்.அந்த மரம் பெயர் கொக்கு மந்தாரைன்னு சொல்வாங்க…..வருஷத்துக்கு ஒரு தடவைதான் பூக்கும்.அவ்வளவு அழகா இருக்கும்.அதுதான் ஆசிரியர் வைக்கும் தேர்வு.அதில் தேர்வான விதைகள்தான் கீழே விழுந்து முளைத்த விதைகள். விழுந்து முளைத்த இடம்தான் நமது தாய்மண்.அதற்கு தண்ணீர் ஊத்தி வளர்க்கிறாங்க பார்.அவங்கதான் பெற்றோர்.அவங்க நல்ல தண்ணீர் ஊற்றினால் செடி நல்ல வளரும்.
விழுந்த விதை ஏம்மா ஒரே சீரா வளர்ச்சி இல்லை?
விழுந்த இடம் சரியாக இருந்தாலும்,செடியின் விதைக்குன்னு ஒரு சக்தி இருக்குல்ல………
நீ சொல்லிக் கொடுத்தும் ஏன் மார்க் வாங்க முடியலை.உன்னுடைய பவர் அவ்வளவுதான்.எல்லோருக்கும் ஒரே மாதிரிதான் கல்வியை டீச்சர் கொடுக்கிறாங்க..ஆனா எல்லோரும் முதல்ல வரணும்னு நினைக்கறது எப்படி சரியா வரும்?
நிறைய பேரண்ட்ஸ் செய்யற முதல் தப்பு இதுதான்.
உங்களுக்குத் தெரியுது…..பலபேருக்குப் புரியறதில்லை.கம்பேர் பண்ணியே பசங்க மனசை நோகடிச்சுடுறாங்க…கேட்டா லைஃப்………..
லீவு நாள்லகூட விடுறதில்லை……
இப்படி பெரிய அளவுல நடக்கறது பெத்தவங்களுக்குத் தெரிஞ்சு போச்சு…அதான் பிள்ளைங்களுக்குப் பணம்தான் உலகம்.சுயநலமாத்தான் இருக்கணும்னு போதிக்கிறாங்க…
இது தப்பில்லையா!
 கதையைத் தொடர்ந்து எழுதுக.
கதைக்குத் தகுந்த தலைப்பினை எழுதுக.

புதன், 6 மே, 2015

ஆண்ட்ராய்டில் செயலிகள் உருவாக்கம்

http://app.appsgeyser.com/Tamil%20space%20vowels%20word%20game       

Short url: http://www.appsgeyser.com/1757376   


 http://app.appsgeyser.com/BASIC%20TAMIL%20TAPAMAYA%20GAME       

Short url: http://www.appsgeyser.com/1757238   


ஆண்ட்ராய்டில் இது போன்ற செயலிகளை விளையாட்டு முறையில் மாணவர்களை உருவாக்க ஆசிரியர்கள் கற்பிக்கவேண்டும்.இதனால் மாணவர்கள் செல்லிடப்பேசி என்பது வெறும் பொழுதுபோக்கு செயலிகளைப் பார்ப்பது மட்டுமல்ல என்பதை உணர்வர்.   இதனை மேல்நிலை வகுப்புகள் வரை உள்ள பாடங்களுக்கும் உருவாக்கலாம்.        

செவ்வாய், 5 மே, 2015