வெள்ளி, 13 மார்ச், 2020


               விளையாட்டின்வழி தமிழ்க் கல்வி
ஆசிரியர் இன்றைய மாணவர்களுக்கு வாரத்தின் ஒருநாள் மட்டுமாவது விளையாட்டுவழி கல்விமுறையினைப் புகுத்தவேண்டியகாலகட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
ஏனெனில் வெறும் ஏட்டுவழிக்கல்வியினை மட்டும் அவர்கள் விரும்புவதில்லை.அரசுபள்ளிகளில் பெரும்பாலும் இரண்டு ஆசிரியர்கள் வரவில்லை என்றாலே திண்டாட்டம்தான். இந்நேரங்களில் இவ்விளையாட்டுமுறையினைப் பயன்படுத்தி கற்றல்முறையினை ஊக்குவிக்கலாம்.
எளியமுறை
ஒரு காலண்டர் மாதக்காலெண்டரில் ஒரு மாதத்திற்கான அட்டவணையைக் கிழித்து வைத்துக்கொள்ளவேண்டும். அதைப்போல மேலும் குழுக்களைப் பிரித்து அந்தந்த குழுவினரிடம் அத்தாளினைக் கொடுத்து குறிப்பிட்ட எண்களைப் பயன்படுத்தச் சொல்லலாம்.
இதைப் பயன்படுத்தக் காரணம் விளையாட்டுவழி கல்வி கற்றலில் ஆசிரியர்கள் கூறும் தலைவலி தரும் விஷயம் நான்தான் சொல்வேன், நான்தான் அந்த கருவிகளைப் பயன்படுத்துவேன் என ஆளாளுக்குக் கூறுவதினால் வகுப்பறை அமைதி கெடும் என பெரும்பாலான பள்ளிகளில் விளையாட்டுமுறையினை அளிப்பது கிடையாது. இம்முறையினைப் பயன்படுத்துவதால் வகுப்பறை அமைதி கெடாது. மாணவர்களும் விரும்பி பாடம் கற்பர். எல்லாத்துறை ஆசிரியர்களும்  இம்முறையினைப் பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டு
வகுப்பறை மாணவர்கள்-மொத்தம் 40பேர்
நான்கு  குழுவிற்கும் அடையாள வண்ணஅட்டைகள்(சிவப்பு,மஞ்சள்,நீலம்,பச்சை)
மாததேதி இட்ட தாள்கள் நான்கு
குறிப்பிட்ட பாடத் துணைப்பாடக் கருவிகள்
எழுத்துப் பிழை தவிர்க்க இன எழுத்துகள் இணைந்தே வரும்-இதுதுான் கற்பிப்புபாடம் தரும் கருத்து.
வல்லினம்,மெல்லினம்,இடையினம் குறித்து அறியச் சொல்லுதல்
இதற்கென கடையில் நெகிழி பிளாஸ்டிக்கில் கடையிலோ அல்லது ஆசிரியர் சாஃப்ட்போர்டிலோ,பேப்பர் அட்டையிலோ செய்து வைத்துக்கொள்ளலாம். கடையில் விற்கும் பிளாஸ்டிக் கிரீடங்களைப் பயன்படுத்தி அதன் தலையில் எழுத்துகளை ஒட்ட வைத்துப் பாடம் நடத்தவேண்டும்.ரயில்வண்டிபோல ஒருவர் பின் ஒருவராக நிற்கவைக்கவேண்டும்.வல்லினம் அருகில் மெல்லினம் நிற்க வைத்து அருகில் (தங்கம்,மஞ்சள் போன்ற பொருட்களைக் காட்டி)இணைந்து வருவதை விளக்கவேண்டும்.இவ்வாறு கற்பித்தால் எழுத்துப் பிழைகள் வராது.
பின்னர் கூட்டல் குறிக்கு ஒரு கிரீடம் போட்ட மாணவனும் உயிரெழுத்துகளைக் கிரீடத்திலும் செருகி உயிர்மெய் எழுத்துகளைக் கற்பிக்கலாம். ஒரு மாதத்திற்கு முப்பது நாட்கள் என்றால் ஒரு வகுப்பிற்கு 120மாணவர்களையும் இக்கற்பித்தல்முறையில் சமாளிக்கலாம். ஒன்றாம்வகுப்புமுதல் பன்னிரண்டாம்வகுப்புவரை இக்கற்பித்தல்முறையைப் பயன்படுத்தலாம். அத்தேதிஎண்ணை அழைப்பவர்கள்மட்டும் பதில்சொல்லவேண்டும் என்ற விதிமுறையில் வகுப்பை இனிமையாக்கலாம். ஆசிரியரால் முடியாதது எதுவும் இல்லை.