செவ்வாய், 3 பிப்ரவரி, 2015

இணையத்தில் தமிழ் நாளேடுகள்-ஓர் ஆய்வு



                                       இணையத்தில் தமிழ் நாளேடுகள்-ஓர் ஆய்வு
                                                                                   முனைவர் பி.ஆர்.இலட்சுமி.,
                        பி..லிட்.,எம்.ஏ(தமிழ்),(மொழியியல்).,எம்ஃபில்.,புலவர்.,பிஎச்.டி., டிசிஇ.,(பிஜிடிசிஏ).,(எம்.ஏ.,டிசிஏ) 
                                                                                                                    தமிழ்த்துறை வல்லுநர்,
                                                                   சென்னை-66.
                 நாடு விட்டு நாடு இடம்பெயர்ந்து குறிப்பிட்ட கொள்கைக்கென மனித சமூகம் வாழ்ந்து வருதல் பண்டைக்கால மரபு. அவ்வாறு வாழ்ந்து வரும் காலகட்டங்களில் இடத்திற்கேற்றவாறு தன்னைப் பண்படுத்தி வாழ்வது  மனிதனின் பண்பாட்டுநெறி. அறிவியல் இயந்திர உலகில் அனைத்தும் கணினியின்வழி இயங்கிவருதலின்போது சமூதாயத்தில் பண்பாட்டின் வெளிப்பாடான நாளேடுகளின் பங்கு இன்றியமையாதது. அத்தகைய நோக்கில் இணையத்தில்  வெளியாகும் மின் நாளேடுகள் குறித்து ஆய்வது இவ்வாய்வுக் கட்டுரையின் நோக்கமாகிறது.
இணைய நாளேடுகளின் வளர்ச்சியும், பயன்களும்
             மனிதன் தன்னைச் சுற்றி நடக்கும் நிகழ்வுகள் குறித்து அறிவதில் அதிக ஆர்வம் காட்டிவாழ்வது உலக இயல்பு. மக்கள் இன்றைய வாழ்க்கைமுறையில் இணையத்தைச் செல்லிடப்பேசி, கணினி எனப் பலமுறைகளிலும்  பயன்படுத்துகின்றனர். இவ்வுலகில் ஊர்திகள் சென்று சேர இயலாத இடத்திலும் செய்திகள் இதன்வழியாக மக்களைச் சென்றடைகின்றன. இதனால் மக்களின் தொழில்நுட்பச் சிந்தனைக் கருத்துகள் தெளிவடைகின்றன. நாளேடு வடிவத்தில் இணையத்தில்  படிக்கப் பல நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. மக்களின் தேவை அறிந்து அவை இயங்கி வருகின்றன. காலந்தோறும் மக்களின் தொழில்நுட்பச் சிந்தனைக் கருத்துகள் வளர்ச்சியடைந்துள்ளமையால்  1974ஆம் ஆண்டிலிருந்து மின் நாளிதழ்களுக்கான முன் மாதிரி நுட்பங்கள் வளர்ந்தன. இலினாய்சு பல்கலைக்கழகத்தில் பிளேட்டோ முறைமையைப் பயன்படுத்தி இணையத்தில் மட்டும் பயன்படுத்துவதற்கு ஏதுவாக நாளிதழ்கள் தயாரிக்கப்பட்டன.(விக்கிஃபீடியா)
 படைப்புகளின் பக்கங்களைப் பிரதி எடுக்கவேண்டிய வசதிக்கட்டமைப்புகளுடனும், உடனடி விவாதக் கருத்துகளுடன்கூடிய வசதிநிலைகளுடனும் யுனிகோட் தொழில்நுட்பத்திற்கேற்றாற்போல இணைய நாளேடுகளான தினமலர், தினமணி, தினத்தந்தி, தினகரன், தி இந்து, தமிழ்முரசு போன்றவை இந்தியாவில் சிறப்பாகச் செயலாற்றி வருகின்றன.
மாணவர்கள்  அடையும் நன்மைகள்
           புத்தக வாசிப்பு (www.badhriseshadhri.nin) குறித்து மாணவர்களிடையே பத்ரி பேசியமை குறித்த செய்தியின்வழி இன்றைய மாணவர்கள் எதனையும் பார்த்து அறிவதில்தான் நாட்டம் அதிகம் உடையவராக இருப்பது தெரியவருகிறது. நாளேடு படிக்கும் பழக்கம் மாணவர்களிடையே குறைந்து வருகின்ற காரணத்தினால் பெரும்பான்மையான தமிழகப் பள்ளிகள் நாளேடுகளில் வெளியாகும் செய்திகளைப் படிக்கும் முறையினை ஊக்குவிக்கின்றன. நாளேடு செயல்வரைபடத்திட்டத்தின்வழி கற்றல்திறனை மாணவர்களிடத்தில் வளர்க்கிறது. இது இணையவழி நாளேடுகளைப் படிப்பதினால் ஏற்படுவதில்லை. இருப்பினும்,  தரவுகளைச் சேகரித்துக் கற்றல்திறனை மேம்படுத்த இணைய நாளேடுகள்  உதவி புரிகின்றன. படிக்க இயலா நேரங்களில் நமக்குத் தேவைப்படும் நாட்களைத் தேர்ந்தெடுத்துப் படிக்கும் வசதியினையும் நாளேடுகள் அளிக்கின்றன.  சினிமா, புத்தகம், இசை சார்ந்த ரசனைகள், பாதித்த நிகழ்வுகள், ஆன்மீகம். சமையல், வேடிக்கை, கிசுகிசு, அரசியல், அன்றாட நிகழ்வுகள் எனப் பலதரப்பட்ட செய்திகளை நாளேடுகள் அளிக்கின்றன. நாளேட்டின் வலைத்தள வடிவமைப்பு வண்ணத்திற்குப் பெரும்பான்மையான நாளேடுகள் இன்னமும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும்.

                 நடுத்தரவருமானம் நிறைந்தவர் வீட்டில் ஒரு நாளேடு மட்டுமே வாங்க இயலும். அவர்களால் நினைத்த கோயில்களுக்குக்கூடச் செல்ல இயல்வதில்லை. நூலகத்திற்குச் சென்று படிக்கும் வாய்ப்புகளும் மிகவும் குறைவு. இத்தகைய சூழலில் வாழ்ந்து வரும் சமுதாயமக்களின் நலனுக்கேற்றாற்போலத் தினமலர் நாளேடு  அழகாக எல்லா மதத்தினவருக்கான ஒளிக்காட்சிகளை வடிவமைத்துள்ளது.  தினமலர் நாளேட்டினைப் படிக்கப் பதிவு செய்தால்  மின்னஞ்சல் வழியாக இலவசமாக நாளேட்டினைப் படிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. ‘நீங்கள் படித்தவை எனக் குறிப்பிடப்பட்டுள்ள பகுதி மிகவும் பயனுள்ளதாக அமைக்கப்பட்டுள்ளது.  புத்தகங்களைப் படிக்கும் வசதியும் குறிப்பிட்ட சில நாளேட்டினில் அமைக்கப்பட்டுள்ளன. தினமலரில் கணினி தொடர்பான இலவச வெளியீட்டினைத் தரவிறக்கம் செய்யும் வசதி முன்னர் அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், சில வருடங்களாக இத்தகைய வசதி அளிக்கப்படாமல் மின்நூலாக மட்டுமே அளிக்கப்பட்டுவருகிறது.

             கல்வி குறிப்பிட்ட செய்திகளைத் தினமலரும், தினமணியும் அளிப்பதால் இணைய உலகில் சிறப்பான இடத்தைப் பிடித்துள்ளன. வளர்ந்து கொண்டிருக்கும் தி இந்து நாளிதழ் இலக்கியச் சிறப்பாதாரங்களுடன் காணப்படுகிறது. குறிப்பிட்ட செய்திகளுக்கு அளிக்கும் உடனடி பதில்களைத் தினமலர் நாளேடு மின்னஞ்சல்வழியாகத் தொடர்புடையவரிடம் தெரிவிக்கிறது. இதைப்போல மக்களின் மனதைப் புரிந்துகொண்டு நாளேடுகள் அமைக்கப்படவேண்டும்.

                 தி இந்து‘ நாளிதழ் அறிவியல் சார்ந்த இலக்கிய அணுகுமுறைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. (http://tamil.thehindu.com/opinion/columns.article6757744-கிரகங்களுக்கிடையில் பறந்த விமானங்கள்) முக்கியச் செய்திகளை ஒலி வடிவில் தரவிறக்கம் செய்யும் வசதியுடன்  நாளேட்டின் வடிவமைப்பினைப் புதுமையான கட்டமைப்பு வசதியுடன் அமைத்துள்ளது. சோதிட ஒளிக்காட்சியினை மக்களின் எண்ணங்களுக்கேற்றாற்போல நாளேடுகள் அமைத்துள்ளன. தினகரனில் பக்கவடிவமைப்பில் மருத்துவக்குறிப்புகள் பகுதியும், சமையலறைக்குறிப்புகளும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன. தமிழ்முரசு பக்கவடிவமைப்பு ஓரளவு மட்டுமே சிறப்புள்ளதாக அமைந்துள்ளது. ஒளிக்காட்சியில் எழுத்துப்பிழையுடன் காட்சியளிப்பதை மாற்றி அமைத்திடவேண்டும். பிறமொழிக்கலப்பு மிகுதியாக அமைந்து கொச்சைத் தமிழ்ச்சொற்கள் அமைந்துள்ளதை மாற்றி அமைத்திடல்வேண்டும்.  தினத்தந்தி நாளேடு மணப்பந்தல் என உட்தலைப்பிட்டுச் செய்திகளை வலைப்பக்க வடிவமைப்பாக்கியுள்ளது. வலைப்பக்க வடிவமைப்பில் பிற நாளேடுகள் போலல்லாது தனித்துக் காணப்படுகிறது.

பெண் முன்னேற்றச் சிந்தனை
              பெண்கள் இணைய வசதியினைக்  குறைவான அளவில் பயன்படுத்தி வருகின்றனர். பெண்ணின் கற்பு குறித்த செய்திகள் உலகளாவிய அளவில் வேறுபட்டுள்ளன. பெண்கல்வி முக்கியத்துவத்திற்காகக் கற்பினை விலைபேசும் பெண்ணினமும்  இருப்பதால் பெண்கள் இன்றளவில்  பாலியல் பொருளாக நோக்கப்படுகின்றனர். பெண் சமுதாயம் உலகம் முழுவதும் ஒருங்கிணைந்த சில கருத்துகளைக் கொண்டிருந்தால் பெண்ணினம் வளர்ச்சிபெறும்.  பெண்களுக்கு நடைபெறும் வன்முறைகள்  நாள்தோறும் செய்திகளில் இடம்பெறுகின்றன. அவைகுறித்தே மக்களால் வாசிக்கப்படுகின்றன என்பதனை அறிந்து விழிப்புணர்வு பெறப் பல நாளேடுகள் பெண் பாலியல் கொடுமைகள் குறித்த செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்கின்றன. இது சமுதாயத்தில் நல்ல எண்ணங்களைக் கொணர்தலின் பொருட்டு வெளிக்கொணரப்படுகின்றன. ஆனால், தனிமனிதத்துவத்தின் உணர்வினை வெளிக்கொணர்வது, பெண்ணின் சுதந்திர நிலையைப் படமெடுத்து வெளியிடுவது போன்ற சில  செய்தி நிகழ்வுகளினால் பெண் சமுதாயம் தாழ்வடையும்.
        பெண் என்பவள் ஒரு உயிரினை உயிர்ப்பிக்கும் வல்லமை பொருந்தியவள். பெண்கள் பகுதி எனக் குறிப்பிட்டு  சமையல், அழகுக்குறிப்புகள், வீட்டு அலங்காரம் போன்றவை மட்டுமே பெரும்பான்மையான நாளேடுகளில் இடம்பெறுகின்றன. உலகெங்கிலும் பெண் குறித்த கருத்துகள் மாறுபடவேண்டும். பத்திரிகையாளர்கள் பெண் குறித்த இதர  பாலியல் வருணனைச் செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்காது பெண்ணின் முன்னேற்றக் கருத்துகளுக்கு வழி வகை செய்யவேண்டும். விளம்பரங்களில் பெண்ணின் உடலமைப்பினை ஆபாசமாகக் காட்டும் விளம்பரங்கள் வெளியிடுதலைத் தடை செய்ய வேண்டும். அடித்தட்டு மக்கள் முதல் நாட்டின் முதன்மைப்பீடத்தில் இருக்கும் பெண்களைக்கூட நாளேட்டுச் செய்திகள் விட்டுவைப்பதில்லை. உலகநாட்டு நிகழ்வுகள் நடப்பதை வெளிக்கொணர்வது நாளேடுகளின் கடமை என்றாலும் அடிப்படை மனித உரிமைகளில் இருந்து தவறி விடுகின்றனர். இந்நிலை வருத்தத்திற்குரியது.  இத்தகைய நிலையினை மாற்றியமைக்க நாளேடுகள் ஒத்துழைப்பளிக்க வேண்டும். இதனால் பெண்களும் இணைய வசதியினை அதிக அளவில் பயன்படுத்த முன்வருவர். 
மொழிநடை
                     மொழிநடை என்பது காலமாற்றத்திற்கேற்ப மாறுபடுகிறது. நடைமுறையில் மக்கள் பேசும் மொழிக்கேற்ப இயல்பான நடையில், ஆங்கிலக் கலப்பில் நாளேடுகள் தங்களது மொழிநடையினை மைத்துக்கொள்கின்றன. சீனாவில் மொழிக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்துவத்தை இரா.சுப்பிரமணி வெளிக்கொணர்ந்துள்ளார். (ப.442.,13 ஆவது இணையத்தமிழ் மாநாடு,2014). பிறமொழிச்சொல் கலவாதிருத்தல் நடைமுறையில் கொண்டுவருவது மிகவும் கடினமான செயலாகக் கருதலாம். காரணம், தமிழ் தொடர்பான அறிவியல் கலைச்சொற்கள் தெளிவாக மக்களிடையே பரவவில்லை.
இருப்பினும் ஆங்கிலச்சொல்லை உட்தலைப்பிடாமல் அமைப்பது தமிழ்மொழியின் பெருமையை வெளிக்கொணர்வதாகும். மக்கள் பொது இடங்களில் பிறமொழிச்சொற்கள் கலப்பு  பயன்படுத்துவதைக்   கட்டுப்படுத்த வேண்டும்.
              இணையத்தில் வெளியாகும் நாளேடுகளின்  பங்களிப்பினால்  உலகில் பல இடங்களிலும் வாழும் மக்கள் செய்திகளை அறிந்துகொள்ள இயல்வதையும், அதனால் ஏற்படும் பயன்களையும் இக்கட்டுரை வெளிக்காட்டியுள்ளது. பலதரப்பட்ட முறையில் நாளேடுகள் வடிவமைக்கப்பட்ட முறைமை குறித்தும் இவ்வாய்வுக் கட்டுரையின்வழி அறிய இயலுகிறது.    

புதன், 7 ஜனவரி, 2015

காந்தி கையெழுத்து

தமிழில் காந்தி எழுதிய கடிதம் வலைத்தளத்திலிருந்து எடு்க்கப்பட்டு இங்கே அளிக்கப்பட்டுள்ளது. மொழிக்கு காந்தி அளித்த முக்கியத்துவம் இதன்வழி வெளியாகியுள்ளது.

திங்கள், 5 ஜனவரி, 2015

நிறுத்தற்குறிகளை இடும் பயிற்சி



சரியான இடத்தில் நிறுத்தற்குறிகளை நிரப்பி தவறுகளைத் திருத்துக.

4 வருஷத்துக்கு முன்னாடி எடுத்த ஃபோட்டோ எதுவும் இல்லையா சார்?
ஏன் கேக்குறீங்க?
பசங்க பெருசா வளர்ந்ததுக்குப் பிறகு ஆம்பிளைப்பசங்களை அடையாளம் கண்டுபிடிக்கறது கஷ்டம் பாருங்க! அப்ப குண்டா,புஷ்டியா ஒரு பையனைத்தான் அமுல்பேபி மாதிரி கழுத்துல முருகன் டாலர் நீளமாகத் தொங்கவிட்டு.........அதை  டீவில பார்த்தேன். அதைத்தான் அங்க நேரிடையாகக் கோவில்லயும் பார்த்தேன்.
சோ! வந்தது அப்ப ஓரளவு காப்பாத்தினதா நினைச்சது எல்லாமே ஊர்ஜிதமா தெரிஞ்சது......டயலாக் கரெக்டா சார்! செக் பண்ணிக்குங்க.....
கேரக்டர் ரோல் இல்லையா! அதைக் காப்பாத்தணும்ல.....அதைக் கெடுத்துட்டா ஜென்மத்துக்கும் வெளியே வர முடியாதுல்ல...அதுக்காக ப்ரொபஷன்ல என்னென்ன உண்டோ அத்தனையும் ஆடிப்பாத்தானுங்க..........?

நாலு பேர் தூக்கறதுக்கு வேணும்ல.....?என் சிஷ்யனுங்களே எங்கிருந்தாலும் வருவானுங்கன்னா சொல்ல முடியும்?..................

அதான் ஜாக்ரதையா ரோலை செலக்ட் செய்தேன். அப்பதான் சார் நீங்களும் உள்ளே வந்தீங்க..........!வராமலே இருந்திருந்தீங்கன்னா இன்னமும் ஆடி குழி வெட்டிருப்பானுங்க?..................வாழ்க்கைக்கு பணம் தேவைதான். அதை யார் தருகிறார்கள்? என்பதைப் பார்ப்பது முக்கியமில்லையா! மாட்டுனா 123456! என அரிச்சுவடிதான் படிக்கணும்...............காரணம் தொழில் அந்த மாதிரி! இந்த சினி லைனே இப்படித்தான் சார்! சீன் நம்பர் 12 க்குப் போலாமா சார்! எனப் பேசி அலுத்தவனை உற்றுப்பார்த்தான் நரேன்!!!!

வியாழன், 11 டிசம்பர், 2014

பெண்களும்,இணையத்தளமும்

 பெண்களும், இணையத்தளமும்

முனைவர் இலட்சுமி
தமிழ்த்துறை வல்லுநர்

    இன்றைய உலகைப் பொறுத்த அளவில் பெண் ஒரு பாதுகாப்புக்கு உட்படுத்தப்பட்டவளாகவே நோக்கப்படுகிறாள். காரணம் பெண் குறித்தான தவறான கண்ணோட்டங்கள் அவளது முன்னேற்றத்தைத் தடை செய்கின்றன. இதற்குப் பெண் உலகளாவிய அளவில்ஒரே மாதிரியான சிந்தனையுடன் இயங்கவேண்டும். பாலியல் வன்முறைகள் பெருகி வருவதால் பெண்கள்  அணியும் உடைகளைப் பிறர் கவரத்தக்கமுறையில் ஆபாசமாக அணிதல் கூடாது. உடை சுதந்திரம் என்று பெண் பேச முற்படும்போது அவள் பேசும்,செய்யும் காரியங்கள் அனைத்தும் இக்காரணத்தினால் பயனற்றுப்போய்விடுகின்றன. உடை சவுகர்யம் என்பது இன்றைய காலகட்ட உலகில் ஆண் சமூகம் இன்னமும் மாற வேண்டியிருப்பதால் இயலாத ஒன்றுதான்.இதனால் இணையத்தளத்திலும் பெண்கள் வரத் தயங்குகின்றனர். இத்தகைய நிலை மாறுபட பெண்கள், புகைப்படங்கள்,குடும்பச் செய்திகள் இவற்றை வெளியிடுதலைத் தவிர்க்கவேண்டும். நெருப்பு என்பதற்காக நாம் அதனைப் பயன்படுத்தாமல் இருக்கிறோமா? அதைப்போலத்தான் இணையமும் . இணையவழி கற்றல்திறன் மேம்பட பலமென்பொருட்கள்,அறிவார்ந்த செய்திகள் மிகுந்துள்ளன. வெறும் பொழுதுபோக்குசாதனங்களல்ல இணையம் என்பதை உணர்ந்து பெண்கள் பணியாற்றவேண்டும்.

இணையத்தளத்தில் வெளியிடப்பட்ட  பின்வரும்  பரிசு பெற்ற கவிதையினை நோக்கும்போது பெண்கள் எந்தஅளவு சிந்திக்கின்றனர் என்பது தெளிவாகிறது. இத்தகைய நிலை வளரவேண்டும்.அதற்குப் பெண்கள் ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.இச்சமூகம் பலதரப்பட்ட கருத்துகளைக் கொண்டு இயங்குகிறது. இவ்வுலகில் பெண் குறித்த சிந்தனைகளும் மாறுபட்டு இருப்பதனால் ஏற்படும் அவலநிலை மாறுபடவேண்டும். பெண்கல்வி வலுப்பெற இணையவழிக்கல்வி இன்றியமையாதது.

                 தாய் தந்தை அன்பு

            நன்றி-     எழுத்து.காம்


நேற்றுவரை உயிர்ப்பும்
ஊர்மெச்சும் வனப்பும்
குறையாத சிறப்பும்
கொண்டதொரு ஜோடி மரங்கள்

சீமந்த அழகு கொண்டு
சிங்கார புன்னகை வீசி
சீமாட்டியாய் சில பூக்களையும்
சீமானாய் சில விதைகளையும்
பெற்றெடுத்தது பெண்மரம்

சித்திரையில் நிழலும்
செருக்கில்லா சிறப்பும்
செருப்பில்லா பாதத்தோடு
செம்மண்காட்டு நீர்உறிஞ்சி
சேயிற்கு சேமிக்கும்
வேராய் நின்றதந்த ஆண்மரம்.

மொட்டுக்கள் விரியும் வரை
மௌனம் காத்தன
விதைகள் விடியும் வரை
விளையாடி சிரித்தன
பிள்ளைகளின் பெருங்களிப்பில்
பெருமை கொண்டன ஜோடி மரங்கள்

வசந்த காலத்தின் வளமையால்
வாரிசுகள் வளைந்து கொடுத்தன
வயதில் மூத்தோர் என
வணங்கி வரம் பெற்றன

இலையுதிர் காலம் கண்டு
இனி பயனில்லை என்று
ச(சொ)த்துக்களை சுருட்டிக் கொண்டு
சொல்லாமல் சென்றன.

உடலின் சுருக்கம் வயதை காட்ட
உயிரின் இறுக்கம் நோயை கூட்ட
உழைக்க உறுதியின்றி
உறவுகள் ஏதுமின்றி
ஊனுடம்பு நொந்தன இருமரங்கள்

இருமரங்களின் இறுதிக்கிளையில்
இளைப்பாற ஒரு பறவை வர
இதுதான் இறுதி நாளென
இரு இதயங்கள்
இரங்கல் செய்தி சொல்லிவிட
இருப்பிடம் தந்த மரத்தின்
இறுதி சடங்கில்
இறகுளர்த்திய பறவைகள்
இழப்புணர்ந்து அழ
இரு மரங்களின்
இறுதி மூச்சாய்
ஒற்றை சருகு ஓயாமல் ஆடியது
அது,
பெற்ற பிள்ளையை காண ஏங்கியது...


V.Seethaladevi
BCA 3rd year Swami Dayananda Arts&Science College
Manjakkudi Kodavasal(tk) Thiruvarur(dt)

செவ்வாய், 18 நவம்பர், 2014

கதை எழுதும் பயிற்சி



ஒரு தடவை சொன்னா புரிஞ்சுக்கணும்
படித்த படிப்பு கடவுள் கொடுத்தது.
அதை கல்யாணம் முடிஞ்சபின்னாடி நிறைய பேருக்கு ஃபாலோ அப் பண்ண முடியறதில்ல.மறந்து போய்டுது.பிள்ளைகள் எல்லாம் பெரிசான பிறகு தனிமை வாட்டுகிற நேரத்துல படிச்ச டிகிரி மட்டும்தான் ஞாபகம் இருக்கும்.தாய்மொழி ஞாபகம் இருக்கும்.அதுக்கா தாய்,தகப்பன் கஷ்டப்பட்டு படிக்க வச்சாங்க.......இதுக்கா அத்தனை செலவு....... என்னதான் கணவனுக்கு சேவை செய்யுற மனைவிதான் என்றாலும் வீட்டுவரை படித்த படிப்பினை மறக்காமலிருக்க ஏதாவது செய்ய வேண்டாமா? சொன்னவளையும் ஞாபகம் இல்லை......வெறும் வெற்றுப் புகழுக்காக கிறுக்கல்கள் யாருக்காக?......எங்கோ பார்த்தபடி சொன்ன திவ்யாவை வெறித்தாள் அனுஷா. நான் என்ன வச்சிருக்கிறேனோ அந்த வரிசையெல்லாம் வச்சுக்கற கணக்குப் பாக்கற நீ என் படிப்பையும் ஃபாலோ பண்ணனும்ல....அதுல மட்டும் போட்டி கிடையாதா? எட்டு மணிக்கு எருமைமாடுமாதிரி எந்திரிச்சு ஆஃபிஸ் போக வேண்டியது...பல் தேய்க்க பிரஷ் எடுத்து வைக்க ஒரு ஆளு, குளிக்க வெந்நீர் வைக்க ஒரு ஆள்,ஷூ மாட்ட ஒரு ஆளு, ஸ்கூலுக்கு கொண்டு போய் விட ஒரு ஆளு இப்படியே பழக்கப்பட்ட மாதிரி வாழ்நாள் ஃபுல்லா ஓட்ட முடியாது.ஒவ்வொரு காலகட்டத்துலயும் ஒவ்வொருத்தருக்கும் ஒரு குறிக்கோள் இருக்கும்னு தெரியும். அதுக்காக என்ன செய்யலாம்னு யோசிச்சதுண்டா? பணம் என்ன பணம்,இன்னைக்கு ஒருத்தர் கைல! நாளைக்கு வேறாருத்தர் கைல!பத்து வருஷம் கஷ்டப்பட்டா போற வழி கரெக்டா இருந்தா பணம் யார் காலடியில் வேணுமானாலும் கிடைக்கும்.உடல் ஆரோக்யமும்,பாசமும் கிடைக்குமா?கொஞ்சம் பொது வாழ்க்கைக்கு என்ன செய்யணும்னு யோசிக்கணும். சின்ன வயசுப்பாடமும் பெரிசானதுக்கப்புறமும் வரணும். அண்ணன்,தம்பி,அக்கா,தங்கை இவங்களோட பிறந்த நீ வாழ்க்கையில் யாருக்கு பயன்பட்டிருக்கிறாய்? செக் நோட்டுல் ஒண்ணு எழுதறதுக்கே டுவிஸ்ட் டேன்ஸ் ஆடும் பென்சில். அப்போ எனக்கென்னன்னு தூக்கிப்போட்டுட்டு  என் படிப்பை நான் பார்க்க ஓடியிருந்தா என்ன பண்ணியிருப்ப? இதுக்கா உனக்கு நான் உள்ளங்கை வேர்க்க அரிச்சுவடி பாடம் சொன்னேன்? ஏதோ பக்கத்துல இருக்க! சொல்லிட்டேன். என்னைத் திட்டுறமாதிரி நீ என்ன எனக்கு அட்வைஸ் பண்ணறதுன்னு சொன்னே பல்லு எகிறிடும். முன்னாடி இருக்கற அப்பா தேச்சு விட்டஅணில்பல் நாலும் காணாமல் போயிடும்.  பணம் மட்டும்தான் வாழ்க்கையில்லை.புரிஞ்சுக்க..சொல்லிவிட்டு விடு!விடுவென நடந்து உனக்குப் பிடிச்ச கேரம்போர்டுல கேம் விளையாடலாம் வர்றியா! என போர்டில் அருகே அமர்ந்த திவ்யாவை சிரித்தபடி அவளை நோக்கி ஓடினாள் அனுஷா.
கதையைத் தொடர்ந்து எழுதுக.
கதைக்குப் பொருத்தமான தலைப்பு எழுதுக.