சூறைக்காற்று –மழை
சுழலும் மழையில்
சுழன்றது தாள்
வானத்துக் கலைமகளிடம்
மனிதநேயம் வேண்டி முறையிட்டதோ!
எழுத மறந்த தாளில்
புழுதியும் தப்புக்கணக்கு
போட்டுப் பார்க்கிறதா?
தாளம் போட்டது தவளை
தங்கரளியில் தலையைச் சாய்த்தபடி!
கோழிக்கொண்டை தாயின்
கொஞ்சுமொழி அரவணைப்பில்
செம்பருத்தியின் குளியல் ஆரம்பம்.
வானத்து அண்ணா மத்தளம் கொட்டி முழங்க
மின்னல்மகன் மண்(ன்)அவளை
மாலையிட
ரோஜாவின் பன்னீர்
அபிஷேகம் ஆரம்பம்!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக