வியாழன், 27 டிசம்பர், 2012

ஆசிரியர் கவனம்

                                           
மாணவியரிடம்  கற்ற கல்வியின் பெருமையை அறிந்து  அதன்படி நடக்கச் செய்வது ஆசிரியரின் கடமை.
இன்றளவில் ஆண்சமூகத்தின் கீழ்தான் பெண்ணுலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது. அது உலகளாவிய அளவில் நடந்துகொண்டுதான் உள்ளது. பெண் கல்வி கற்றிருந்தபோதிலும் அவள் பாலியல்நோக்கில்தான் பார்க்கப்படுகிறாள்.இது கல்வி கற்றவரிடத்தில் பெரும்பான்மையாக இல்லை.
இருப்பினும், மது,போதை இவ்விருபழக்கத்தில்இருப்பவரிடத்தில் தாம் இன்னதுதான் செய்கிறோம் என்ற உணர்வு இல்லாத நிலையில் பெண்மீது பாலியல்  குறித்தத் தவறான எண்ணங்கள் தோன்றுகின்றன.
இதற்குப் பெண் முக்கிய காரணமாகிறாள்.
உலகெங்கிலும் உடை குறித்து பெண்களுக்கு விதவிதமான உடை இருப்பினும்,தனது நிலை அறிந்து  உடலுறுப்புகளை ஆபாசமாக வெளிக்காட்டாத முறையில் பெண்கள் ஆடை அணிதல் வேண்டும்.திரைப்படத்தில் வரும் பெண்களைப்போன்று நடைமுறையில் பெண்கள் உடை உடுத்தி வலம் வர இயலாது.இதை ஆசிரியர்கள் மாணவிகளுக்குப் புரியும் வகையில் எடு்த்துரைக்கவேண்டும்.
உடை எங்கள் வசதிக்குத்தான் எனக் கவர்ச்சியாகவும்,உடலுறுப்புகளை வெளிக்காட்டுபவையாகவும் அமைந்தால் பெண் திரும்பவும் அடிமைப்படநேரும் .இதனால் கற்ற கல்வியின் பயன் குறித்து மாணவியரிடம் தெளிவாக ஆலோசிக்கவேண்டும். பெண்ணியம் என்பது  உடை குறித்ததன்று.
ஆணுக்கு எதிரானதன்று. ஆணுக்கு இருக்கும் கல்விச்சிந்தனைகள் பெண்ணுக்கும் உண்டு. ஆணும், பெண்ணும் இணைந்து பணியாற்றும்போது உலகளாவிய அளவில் நாட்டின் வளர்ச்சி  முன்னேறும் .இதற்காகத்தான் பெண்கல்வி கற்பது என்பதை ஆசிரியர் வலியுறுத்தவேண்டும். வெறும் ஆடை மோகத்திற்காகவும், தன்னுடைய  குடும்பச்செலவினங்களுக்காகவும் பெண் கல்வி என்ற நிலை மாற வேண்டும்.
 நம்நாட்டிற்காகப்போராடிய தேசத்தலைவர்களும் இக்கருத்தையே  வலியுறுத்தினார்கள் எனபதை ஆசிரியர்கள் வலியுறுத்த வேண்டும்.
பெரும்பான்மையான ஆசிரியர்கள் உடை விஷயத்தில் அவர்களே தங்கள் பெண்ணிற்குப் பிறந்தநாள் என்ற பெயரில்   சினிமா நடிகைகள் போன்று ஆபாசமாக உடை அணிவித்து மகிழ்கின்றனர்.இது தவறு என்று அவர்கள் உணர்வதில்லை.இந்நிலையினை ஆசிரியர்கள் உணர்ந்து செயல்படவேண்டும்.
குழந்தைகள் கேட்கிறார்கள் என்பதற்காக விஷத்தை வாங்கிக்கொடுக்கஇயலுமா?உடை நான்குபேர் நம்மைப்பார்த்து இரசிப்பதற்கன்று.நமது மானத்தைக் காப்பதற்கு எனப் பெண்குழந்தைகளுக்கு ஆசிரியர் வலியுறுத்தவேண்டும்.
உடை பிடி்த்திருக்கிறது என்றால் வீட்டிற்குள் அணிந்து கொள்ளலாமே?
என ஆசிரியர் மாணவிகளுக்கு அறிவுரை வழங்கலாம்.
மட்டமான திரைப்படங்கள், ஆபாசமான பாடல்வரிகள் இதை எச்சரிக்கும்  சட்டங்கள் இருப்பினும்பெரும்பான்மையாக மீடியாவில் கடைப்பிடிப்பதில்லை. வீட்டின் வரவேற்பறையில் ஆபாசமான காட்சிகளைக் காணும் பெண் குழந்தைகள் மனதளவில் கெட்டுப்போவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் மீடியாவைத் தவிர்த்தலைப் பழக்கமாக்கிக் கொள்ளச்செய்யலாம்.
அறிவைப் பெருக்கும் நூலகங்கள் செல்வதை ஊக்குவிக்கலாம்.
இதன்படி வளர்க்கப்படும் பெண் எந்தஅளவில் உருவாகிறாள் என்பதை ஆசிரியரும் வாழ்ந்து காட்டவேண்டும்.
ஆசிரியர்
மருத்துவர்
காவலர்
வழக்குரைஞர்
இந்த நான்கு பணிகளும் நாட்டில் சரிவர இயங்கினால் மட்டுமே ஒருநாடு வளர்ச்சியடையும்.
இந்த நான்கு பணிகளையும் ஏற்றுக்கொண்ட சமூகத்தினர் அத்தொழிலின் பெருமையை உணர்ந்து வாழ்ந்தால் காந்தி கண்ட சமுதாயம் மலரும்.இக்கருத்தைப் பெண்குழந்தைகளிடம் ஆசிரியர் வலியுறுத்தவேண்டும்.
 வெறும் பாடத்தை மட்டும் வினா, விடைகளுடன் மட்டுமே அளிப்பது மோசமான மாணவர் சமுதாயத்தை உருவாக்கிடும் என்பதை ஆசிரியர் சமுதாயம் உணர்ந்து செயல்படவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக