சனி, 3 மே, 2014

செயல்வழிக்கற்றல்


கணினி இல்லாத வகுப்பறை-முதல் அடிப்படை-எழுத்துகள் தெளிவாக்கம்சீட்டுக்கட்டுகளின் பின்னர் வெள்ளைத்தாளை ஒட்டிக்கொள்ளவேண்டும்.
1.அதில் தேவையான படங்கள்(உயிரெழுத்து, மெய்யெழுத்து, உயிர்மெய்யெழுத்து) இணைக்கவேண்டும்.(எ-டு) சக்கரம்,சங்கு,பச்சை
2. உயிரெழுத்து, மெய்யெழுத்து,உயிர்மெய்எழுத்து-போன்றவற்றைக் கையில் வைத்திருக்கவேண்டும்.
3.இரு குழுக்களாகவோ,அல்லது நான்கு குழுக்களாகவோ வகுப்பறையைப் பிரித்துக்கொள்ளவேண்டும்.
4. இருகுழுக்களிடம் எழுத்துசீட்டுக்கட்டுகளும்,மற்றொரு இரு குழுக்களிடம் படச்சீட்டுக்கட்டுகளும் அளிக்கவேண்டும்.
5.விளையாட்டில் யார் தவறின்றி பாடத்தில் உள்ள செய்யுளைக் கூறுகிறாரோ,எழுதுகிறாரோ(நடுவர்-ஆசிரியர்) அவரவர் விருப்பப்பட்ட சீட்டுக்கட்டுகளைத் தேர்வு செய்து கொள்ளலாம்.
குழுவழிக்கற்றல்(வட்டமாக மாணவர்கள் அமர்ந்து கொள்ளவேண்டும்)
1.ஒரு குழு(பாரதி-பெயர்) மற்றொரு குழுவினரிடம்(பகத்சிங்) உள்ள ஒரு சீட்டை எடுக்கச்சொல்ல வேண்டும்.
(படம் வந்தால்(பகத்சிங் குழு) பாரதி அணியிடம் உள்ள எழுத்தினை படத்தின் முதலெழுத்தைத் தேடி எடுக்கவேண்டும்.(உயிரெழுத்து-முழுமை-அந்த காலத்திற்குரியது)
2. விளையாடி முடித்தபின்னர் 2 ஆவது முறை வரும்போது அ-ஔ வரை வரிசையாக வைக்கச்சொல்லி படத்துடன் பொருத்திக்காட்டவேண்டும்.(ஒன்றாம் வகுப்பு வரை)
இம்முறையையே வகுப்புவாரியாகப் பாடத்தில் உள்ள சொற்களை எழுத வைக்கலாம்.(எ-டு)காகம்-பறக்கும்,நாய் நடக்கும்,அம்மா வந்தாள்.

பயன்கள்
1.எழுத்துகளை அறிந்து எழுதுதல், எழுத்துகளை இணைத்துப் படித்தல்(விளையாட்டின்வழி)
வெற்றி பெற்ற அணியினரை செய்தித்தாள் படிக்க வைத்து எழுத்து கிரீடம் அணிவிக்கலாம்.
இரண்டாம் வகுப்பு
இலக்கணம்—இம்முறையில்(சீட்டுக்கட்டுமுறை) எளிமையாகக் கற்பித்தால் மாணவரிடம் 3 காலங்களிலும், பால் வேறுபாட்டிலும் செய்யும் பிழைகளை நீக்குவர்.
எ-டு(இறந்தகாலம்)
பாரதி குழு        
1.அவன்
2.அவள்
3.அது
4.அவை
5.அவர்கள்
பகத்சிங் குழு
  1. வந்தான்
  2. வந்தாள்
  3. வந்தது
  4. வந்தன
  5. வந்தனர்
 காலத்திற்கும் தகுந்தாற்போலச் சொற்களை அமைத்துக்கொள்ளவேண்டும். இதற்குத் தகுந்தவாறு படங்களையும் அமைத்துக்கொள்ளலாம்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக