திங்கள், 27 ஏப்ரல், 2015
சனி, 25 ஏப்ரல், 2015
செய்முறைப் பயிற்சி
செய்முறைப் பயிற்சி
எழுத்துகளைப் பயிற்சி
அளிக்க ஆசிரியர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.
அதற்குத் தகுந்த
வழி விளையாட்டுமுறையில் எழுத்துகளைக் கற்பித்தல் சிறந்த முறையாகும்.
உதாரணத்திற்குக்
குழந்தைகளுக்கு பலூன்கள்,மிட்டாய்கள்,அப்பளம் போன்றவை மிகவும் பிடிக்கும்.இவற்றை வைத்துக்கொண்டு
எழுத்துகளைக் கற்பிக்கலாம்.
கற்பிக்கும்முறை
பலூன்களில் எழுதுதல்
பலூன்களுக்கு இடையே
எழுத்துகளை எழுதி அடையாளப்படுத்துதல்
குறிப்பிட்ட பலூன்களை
அவரவர் இடத்தில் ஒன்று வைத்துவிட்டு வண்ணமிட்ட அடையாள எழுத்தினை எடுக்கச் செய்தல்
நான்கு பலூன்களை
ஒன்றாகக் கட்டி அதில் வேறுபட்ட எழுத்தினை அடையாளம் காணச் செய்தல்
மாவினில் எழுத்துகளை
எழுதிப் பயிற்சி அளித்தல்
அப்பளத்தில் பெயரினை
எழுதி(உணவில் பயன்படுத்தும் வண்ணங்களைப்பயன்படுத்தலாம்) அடையாளங்காணச் செய்தல்
ஓட்டப்போட்டி நடத்துதல்
போன்ற பலவிதங்களிலும்
தமிழ் எழுத்துகளைக் கற்பிக்கலாம்.
சராசரியாக ஒரு மாணவருக்கு
பத்து முதல் பதினைந்து நாட்களுக்குள் உயிரெழுத்துகளை முழுமையாகக் கற்பிக்கலாம்.பயிற்சித்தாள்கள்
புள்ளியிடுதல்
நிழலிடுதல்
வரிசைப்படுத்துதல்
வேறுபட்டதை அடையாளங்காணுதல்
போன்ற முறைகளில்
அமையவேண்டும்.
வெள்ளி, 24 ஏப்ரல், 2015
ஐவகை நிலங்களுடன் புதையல் பெட்டி-செயல்திறன் பயிற்சி விளையாட்டு
ஐவகை நிலங்களுடன் புதையல் பெட்டி-செயல்திறன் பயிற்சி விளையாட்டு
குறிஞ்சி,முல்லை,மருதம்,நெய்தல்,பாலை
என ஐவகை நிலங்களுக்குரிய கருப்பொருள்,உரிப்பொருள் முதலானவற்றை மாடலாகச் செய்து ஒவ்வொன்றையும்
ஒவ்வொரு இடத்தில் வைத்துவிடவேண்டும்.
இரு அணிகளாகப் பிரித்த மாணவர்களிடம் போட்டி தொடங்குவதற்கான
அடையாளங்களைத் தெரிவிக்கவேண்டும்.மின்னட்டைகளை விடுகதைகளுடன் இணைத்து அதற்குரிய தெளிவான
பொருளுடன் இணைத்து வைத்து இரண்டு கண்ணாடி சாடிகளில் வைக்கவேண்டும்.
இரண்டு அணிகளும் தொடர்புள்ள தாளினை எடுத்து ஒவ்வொரு இடத்தில் வைக்கப்பட்டுள்ள நிலங்களைத் தேடி அவற்றில் உ்ள்ள பொருட்களைக் கண்டுபிடிக்கவேண்டும்.வெற்றிபெற்ற அணியினருக்கு மதிப்பெண் கொடுத்து ஊக்குவிக்கலாம்.
கற்பித்தல் திறனில் துணைக்கருவிகளின் தயாரிப்பு
கற்பித்தல் திறனில் துணைக்கருவிகளின் தயாரிப்பு
கற்பித்தல் திறனில் துணைக்கருவிகளின் பங்கு மிகவும் முக்கியமானது.
உயிரெழுத்துகள் கற்பித்தல்
1. அடையாளங்காணும்
திறன்
2. வடிவம்
காட்டும் திறன்
3. எழுத்துகளை
அறிமுகப்படுத்தும் திறன்
4. எழுத்துகளை
எழுதும் திறன்
5. எழுத்துகளைத்
தொடர்ச்சியாக எழுதும் திறன் போன்றவற்றில் மாணவர்களின் கற்றல்நிலை தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.
6. அடையாளங்காணும்
திறனுக்கு ஆசிரியரின் கற்பித்தல்திறனுக்குத் தகுந்த துணைக்கருவிகளைப்பயன்படுத்தவேண்டும்.
7. வண்ணம்
நிறைந்த 4 பந்துகள் பயன்படுத்துதல்
8. வேறுபடுத்திக்காட்டுதல்
9. பலூன்களை
ஆசிரியரின் கற்பனைத் திறனுக்கு ஏற்றாற்போல வடிவமைத்தல்,பொருத்தமான எழுத்தைக் குறி வைத்துப்
பந்தினால் அடித்தல்
10.
பொருத்துக அட்டையினைப்
பயன்படுத்துதல்
11.
எழுத்து அட்டவணையைப் பயன்படுத்துதல்
12.
எழுத்துக்குழிவுப் பெட்டியினைப் பயன்படுத்துதல்
13.
புள்ளியிட்ட எழுத்துப் பயிற்சித்தாளினைப் பயன்படுத்துதல்
14.
நிழலிட்ட பயிற்சித்தாளினைப் பயன்படுத்துதல்
போன்றவற்றின் வழி உயிரெழுத்துகளைப் பத்துநாட்களுக்குள் மாணவர்கள்
எளிமையாகக் கற்கலாம்.
திங்கள், 6 ஏப்ரல், 2015
பெருங்காப்பியங்களில் அறிவியல் செய்திகள்
பெருங்காப்பியங்களில் அறிவியல் செய்திகள்
(மலேசியா மாநாட்டிற்கு அளிக்கப்பட்ட கட்டுரை)-2015
முனைவர் பி.ஆர்.இலட்சுமி பி.லிட்.,எம்.ஏ.,(தமிழ்,மொழியியல்)எம்ஃபில்.,பிஎச்.டி.,டிஎல்.பி.,டிசிஎஃப்இ.,(பிஜிடிசிஏ)
(எம்.ஏ)(ஜெஎம்சி)
தமிழ்த்துறை வல்லுநர்
சென்னை-66.
அறிவியல் மனிதனின் படைப்பாற்றல்திறனுடன் சமூகத்தின் பய்னபாட்டில் அமைந்துள்ள
விதிமுறைக்கோடலின் வெளிப்பாடாக அமைகிறது. அத்தகைய அறிவியல் ஆக்கசக்திகளுக்காகப் பயன்பட்டுவருகிறது.
அறிவியல் கல்வி படித்து அதன்வழி பொருளீட்டுவதற்கு மட்டுமல்லாது வாழ்க்கை முறையிலும்
படைப்பாற்றல் திறனுடன் அமைத்து வாழ்தல் சிறப்பானது.
பெருங்காப்பியங்களான சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவகசிந்தாமணி
போன்றவற்றில் காணப்படும் அறிவியல் செய்திகளை வெளிக்கொணர்வது இவ்வாய்வுக்கட்டுரையின்
நோக்கமாக அமைகிறது.
இயற்பியல்
பெஞ்சமின் ஃப்ராங்க்ளின்
மின் கடத்தியை பதினெட்டாம் நூற்றாண்டில் கண்டுபிடிப்பதற்கு முன் காப்பியக்காலத்தில்
தமிழகத்தில் அது இருந்துள்ளதை
“ஒள்ளிலைச்சூலம் தெண்ணீர்
உலாமுகில் கிழிக்கும் மாடம்".(சீவக.சி.2527)
“சூலநெற்றிய கோபுரத்
தோற்றமும்"(சீவக.சி.3003) எனும் அடிகளில் பயின்றுவரும் சூலங்கள்,கட்டிடத்திற்கு
இன்னல் தராமல் மின்சாரத்தைக்கீழே இறக்கும் மின்கடத்திகள் இருந்துள்ளதைக் காட்டுகின்றன.
“அணு எட்டு கொண்டது தோத்துகண்"(சிலம்பு.3:97-100) என
அணு குறித்த கருத்துகளையும்
உள்ளடக்கி இலக்கியம் எடுத்துரைத்த செய்திகள் இலக்கியத்தின் பெருமையை எடுத்துரைக்கின்றன.
கருவிகளைத் தயாரிக்கும் அறிவியல் திறன்
கோட்டைகளைப் பலப்படுத்துவதற்கான
மதிலைக்காக்கும் போர்க்கருவிகள் பயன்பட்டு வந்துள்ளன.
“கருவிரல் ஊகமும் கல்உமிழ் கவணும்
பரிவுஉறு வெந்நெயும் பாகுஅடு குழிசியும்
எழுவும் சீப்பும்முழுவிறல் கணையமும்
கோலும் குந்தமும் வேலும் பிறவும்”
(சிலம்பு :15:208-216)
என்ற அடிகள் கூறுவதன்வழி கருவிகளின் பயன்பாடு
அறிந்தவர்கள் அதனை உருவாக்கவும் செய்திருக்கலாம் என்று கருதுவதற்கு இடமுண்டு.
தாவரவியல்
சூரிய ஒளியினால்தான் தாவரங்கள் ஆற்றலைப்
பெறுகின்றன. தாவரங்களின் ஒளிச்சேர்க்கைக்குச் சூரிய ஒளி பெரிதும் உதவுகிறது. இக்கருத்தை உணர்ந்த
இளங்கோ அடிகள் ''ஞாயிறு போற்றுதும்”
என்று ஞாயிற்றைப் போற்றினார்.
இளங்கோ அடிகள் ''ஞாயிறு போற்றுதும்”
என்று ஞாயிற்றைப் போற்றினார்.
வானூர்தி தயாரிக்கும் அறிவியல்நோக்கு
சீவக சிந்தாமணியில் திருத்தக்க தேவர், விசயை வானத்தில் பறக்கக் கூடிய
மயிற்பொறியை உருவாக்கிச் சென்றதாகக் காட்டுகிறார்.
மயிற்பொறியை உருவாக்கிச் சென்றதாகக் காட்டுகிறார்.
“எஃகு என
விளங்கி வான்கண் எறுகடல் அமிர்தம் அன்னாள்
அஃகிய மதுகை
தன்னால் ஆய்மயில் ஊடும் ஆங்கண்
வெஃகிய
புகழிவால தன் வென்று வெம்முரசம் ஆர்ப்ப
எஃகு எறி பினையின் மாழ்கி மெம்மறந்து
சோர்ந்தாள்” (சீவ.சி.299)
என்றும்,
”பல் பொறி
நெற்றிக்
குஞ்சிமா மஞ்சை வீழ்ந்து கால்குவித்து
இருந்து” (சீவ.சி.,30)
போன்ற அடிகளிலும்
வானவூர்தி பற்றிய செய்திகளைக் காண முடிகிறது. அவ்வூர்தி வான் மேகங்களிடையே பறக்கவோ,
தரையில்
இறங்கவோ செய்ய முடியும் என்ற செய்தி வியப்பானது. இறக்கைகள் முழுவதுமாக விரித்துப் பறக்கின்ற விமானத்திற்கு ஆபத்து நேருவது
எளிது என்பதால்,அதனைக் கட்டுப்பாட்டுஅறையில் உள்ள ஏழாவது குமிழைத் திருகி விமானச் சிறகுகளை ஒடுங்கச் செய்யலாம். இத்தகைய
குறுகுதல் உத்தி சங்கோச(29) ரகசியம் என சு.நெல்லைமுத்து
குறிப்பிடுகிறார்(ப.70,வேதவிமானம்) இவ்வாறு
தமிழிலக்கியச் சான்றோர்கள் விமானம் பற்றிய தம்முடைய சிந்தனையை வித்திட்டுச் சென்றனர்.
இதைப்போலவே
சிலப்பதிகாரத்தில் கண்ணகி கோவலனோடு ஆகாயத்திலிருந்து வந்திறங்கிய விமான ஊர்தியில் ஏறிச்
சென்றதாக ஒரு காட்சியினை இதனை இளங்கோ (சிலம்பு 3:196 - 200 ) காட்டுவதினால் விமானம்
கண்டுபிடிப்பதற்குமுன்னரே தமிழன் சென்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
செவ்வாய்
கிரகத்தில் தண்ணீர் சிறிது இருப்பதாகவும்,கல்வெட்டு இருப்பதாகவும் நடைமுறைச்
செய்திகள் தெரிவிக்கின்றன.செவ்வாய்க்கிரகத்திற்குச் செல்வதற்காக நடைமுறையில்
அதற்கான பணிகள் நடைபெற்றுவருகின்றன. இலக்கியங்களில் செவ்வாய்க்குச் சென்ற
செய்திகள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேலும் செவ்வாய்க்கிரகத்தில்
முன்னர் பூமியில் இருந்ததுபோல அனைத்து இயற்கை வளமும் இருந்திருக்கலாம். இயற்கை
அழிவினாலோ,அல்லது அதிகம் வெப்பம் பரவியதாலோ அழிந்திருக்கலாம் எனக் கருதலாம். அழிந்துபோன
இலக்கியங்களிலோ,இன்னமும் முழுமையாகக் கிடைத்தறியாமல் இருக்கும்
சீவகசிந்தாமணியிலும் கிடைக்கலாம் எனக் கருதுவதற்கும் இடமுண்டு.
மருத்துவ அறிவியல்
சீவக சிந்தாமணியில்
கொடிய நஞ்சினைப் போக்கும் மருத்துவம் சார்ந்தகலை காணப்படுகிறது. சிலப்பதிகாரத்திலும்,மணிமேகலையிலும்
பல மருத்துவம் சார்ந்த செய்திகள் காணப்படுகின்றன.
மணிமேகலை சுட்டும்
பளிக்கறை
நிறமற்ற கண்ணாடியாலேயே அறை
கட்டியிருந்ததை மணிமேகலை விவரிக்கிறது. கரிகாற் சோழனின் வழிவந்த
அரசகுமாரன் வழியிலே எட்டிகுமாரன்
என்பவன் மூலம் மணிமேகலை உவவனம் போயிருக்கிறாள் என்பதை அறிந்து, அங்கே போய் அவளைத் "தேரில் ஏற்றிக்கொண்டு
வருவேன்" என்று சொல்லிப் போகிறான்.
அவன் தேரொலி கேட்டதுமே அவளைச் சுதமதி பளிக்கறை என்னும் கண்ணாடி அறையில் வைத்துத் தாழிட்டுவிடுகிறாள்.
“விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதனுள் ”
(மணி.மலர்வனம் புக்ககாதை: 63-64)
"அந்தக் கண்ணாடியறைக்கு வெளியே இருந்து பார்ப்பவர்க்கு உருவம் தெரியும், ஆனால் ஒலி வெளியே கேளாது". கண்ணாடிஅறையின் தொழில்நுட்பம் இலக்கியத்திலேயே தொடங்கிவருவதை இவ்வாய்வு விளக்குகிறது.
அவன் தேரொலி கேட்டதுமே அவளைச் சுதமதி பளிக்கறை என்னும் கண்ணாடி அறையில் வைத்துத் தாழிட்டுவிடுகிறாள்.
“விளிப்பறை போகாது மெய்புறத் திடூஉம்
பளிக்கறை மண்டபம் உண்டு அதனுள் ”
(மணி.மலர்வனம் புக்ககாதை: 63-64)
"அந்தக் கண்ணாடியறைக்கு வெளியே இருந்து பார்ப்பவர்க்கு உருவம் தெரியும், ஆனால் ஒலி வெளியே கேளாது". கண்ணாடிஅறையின் தொழில்நுட்பம் இலக்கியத்திலேயே தொடங்கிவருவதை இவ்வாய்வு விளக்குகிறது.
கப்பல் கட்டும் தொழில் அறிவியல்
வணிகம் தொடர்பாகத் தமிழர்கள்
கடல்பிரயாணங்களை மேற்கொண்டிருந்தனர்.அதற்குரிய கப்பல் கட்டும் தொழில் போன்றவற்றில்
சிறந்து விளங்கினர். கல்லால் நங்கூரத்தில் கயிறைக் கட்டியிருப்பர். பெருங்காற்று வீசும்போது
கயிறு அவிழ்ந்து கலம் சுழலும். அந்தச் சுழற்சியின் வேகம் இரண்டு யானைகள் தம்முள் தீப்படச்
சண்டையிடும் வேகத்தோடு ஒப்பிடப்படுகிறது.
‘மாக்கடல் பெருங்கலம் காலின்
மாறுபட்டு
ஆக்கிய கயிறிரிந்து ஓடி எங்கணம்
போக்கவும் பொருளைப்போன்று
தீப்படத்
தாக்கின அரசுவாத் தம்மன் என்பவே” (சீவக.223) எனக் கற்பனை நயத்துடன் சிறப்பாக திருத்தக்கதேவர் இயற்றியுள்ளார்.
ஆற்றைக் கடக்க வங்கம் எனும்
கப்பல் பயன்பட்டதாக,
"கங்கைப் பேரியாறு கடத்தற்காவன
வங்கப் பொருநிரை செய்கதாமென”என (சிலம்பு
26. 164: 65 )
குறிப்பிடுகிறது.
ஓடத்தினை மக்கள் பயன்படுத்தியதாக
சிலப்பதிகாரம் குறிப்பிடுகிறது.
“இலங்குநீர் வரைப்பின் கலங்கரை
விளக்கமும்” (சிலம்பு. 6: 14) எனக்
கலங்கரை விளக்கம் இருந்த செய்திகள்வழி
அறிவியல்நுட்பங்கள் சிறப்பாக இருந்தனவற்றை அறிய இயலுகிறது.
உலோகப் பயன்பாடு
ஆடை, அணிகலன் வைக்கப் பேழை
இருந்தமை குறித்தும் அவை செம்பிலானது எனவும் சீவகசிந்தாணி குறிப்பிடுகிறது.
”தூமணித் துகிலார்ந்த
வலம்புரித் துலங்கு செம்பு” (சீவக.2475)
இத்தகைய காலத்தில் செம்பு இறக்குமதி செய்யப்படவில்லை.
எனவே செம்பு தயாரிக்கும் அறிவியல்தொழிலும் நடைபெற்றிருக்கலாம்.
பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம்,மணிமேகலை,சீவகசிந்தாமணி
போன்ற இலக்கியங்கள் மூன்றும் தமிழ்ப்பழமையினை மட்டும் எடுத்துக்கூறாமல் வாழ்க்கைக்கு
இன்றியமையாத அறிவியல்செய்திகளைவெளிக்காட்டியதன்வழி இலக்கியங்கள் என்றென்றும் அழியாமலிருக்கப் படைக்கப்பட்டிருந்தன
என்பது இவ்வாய்வுக்கட்டுரையின்வழி புலனாகிறது.
ஆண்ட்ராய்ட்செயலி
இன்றளவில் கற்பித்தலில் அறிவியல் தொழில்நுட்பம் அவசியம் தேவைப்படுகிறது. இவற்றைத் தமிழ்மொழியில் கொண்டுவருவது ஆசிரியர்களுக்கு மிகவும் சிரமமான ஒன்றாக இருக்கிறது. காரணம் நேரமின்மை,படைப்பாற்றல் திறனை வெளிக்கொணரும் அளவு பாடப்பொருள் இல்லாமை,பாடப்பொருள் பற்றிய தெளிவான சிந்தனை இல்லாமை,வகுப்பறைக்கற்பித்தலுக்கு உரிய திட்டமிடுதலை முன்கூட்டியே செய்யாதிருத்தல் போன்றவையாகும். ஒரு வகுப்பறைக்கு மாதம் 4 முறை
மாணவரின் படைப்பாற்றல் திறன் வெளிப்படும்அளவிற்கு கேட்டல்,பேசுதல்,படித்தல்,எழுதுதல் திறன்களை ஆசிரியர் வளர்க்கவேண்டும்.எடுத்துக்காட்டாக மாணவர்கள் இன்றைய அளவில் பொழுதுபோக்கிற்காகச் செல்லிடபேசி போன்ற கையடக்கக்கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.அவற்றில் இடம்பெறும் ஆண்ட்ராய்ட்செயலி எவ்வாறு உருவாக்குகின்றனர்,அதைப்போல நாமும் செய்ய என்ன செய்யலாம் என்பது போன்ற விழிப்புணர்வு ஆசிரியர்களிடையே அமைதல்வேண்டும்.கையடக்கக்கருவிகளில் அமைந்துள்ள விளையாட்டுகள்தான் மாணவர்களைக் கவர்கின்றன.அதை ஆசிரியரே தகுந்த மென்பொருள்வழி உருவாக்கி மாணவரை ஊக்குவிக்கலாம்.மகிழ்ச்சி நிறைந்த வகுப்பறையை உருவாக்கிக்காட்டலாம்.பயிற்சித்தாள் வெறும் எழுத்துகள் நிறைந்திருப்பது மட்டுமல்லாமல் படங்களுடனும்,சிந்திக்கத்தக்க சொற்களுடனும் அமைதல்வேண்டும்.அதைப்போல கையடக்கக்கருவிகளில் அமைந்துள்ள விளையாட்டுகளைத் தகுந்த தமிழ்ப்பாடங்களுடன் இணைத்து
கற்பிக்கலாம்.(appsgeyser.com)
மாணவரின் படைப்பாற்றல் திறன் வெளிப்படும்அளவிற்கு கேட்டல்,பேசுதல்,படித்தல்,எழுதுதல் திறன்களை ஆசிரியர் வளர்க்கவேண்டும்.எடுத்துக்காட்டாக மாணவர்கள் இன்றைய அளவில் பொழுதுபோக்கிற்காகச் செல்லிடபேசி போன்ற கையடக்கக்கருவிகளைப் பயன்படுத்துகின்றனர்.அவற்றில் இடம்பெறும் ஆண்ட்ராய்ட்செயலி எவ்வாறு உருவாக்குகின்றனர்,அதைப்போல நாமும் செய்ய என்ன செய்யலாம் என்பது போன்ற விழிப்புணர்வு ஆசிரியர்களிடையே அமைதல்வேண்டும்.கையடக்கக்கருவிகளில் அமைந்துள்ள விளையாட்டுகள்தான் மாணவர்களைக் கவர்கின்றன.அதை ஆசிரியரே தகுந்த மென்பொருள்வழி உருவாக்கி மாணவரை ஊக்குவிக்கலாம்.மகிழ்ச்சி நிறைந்த வகுப்பறையை உருவாக்கிக்காட்டலாம்.பயிற்சித்தாள் வெறும் எழுத்துகள் நிறைந்திருப்பது மட்டுமல்லாமல் படங்களுடனும்,சிந்திக்கத்தக்க சொற்களுடனும் அமைதல்வேண்டும்.அதைப்போல கையடக்கக்கருவிகளில் அமைந்துள்ள விளையாட்டுகளைத் தகுந்த தமிழ்ப்பாடங்களுடன் இணைத்து
கற்பிக்கலாம்.(appsgeyser.com)
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)