ஞாயிறு, 18 அக்டோபர், 2015

வலைப்பூக்கள் உருவாக்குவது எப்படி?

                     வலைப்பூக்கள் உருவாக்குவது எப்படி?

ஒவ்வொருவருக்கும் ஒரு தனிப்பட்ட விருப்பம் என்று என இருக்கும்.அதை எப்படி வெளிக்கொணர்வது எனத் தெரியாத பலர் இன்றும் நம்மிடையே நிறைய பேர் உள்ளனர்.
எளிதாக உருவாக்குவதற்கு ஜிமெயில் ஐடி இருப்பவர்கள் வலைப்பூவினை அதிலேயே உருவாக்குவதுதான் நேரத்தை எளிதாக்கும். அதிலேயே நமக்கு தேவைப்படும் வண்ணம்,ஒலி,ஒளி ஏற்றும் வசதி அனைத்தும் கிடைக்கின்றன்.இதில் ஆங்கிலம் தெரிந்தால்தான் இயங்கஇயலும் என்ற கருத்திற்கு இடம் கிடையாது. நாம் நமது தாய்மொழியிலேயே உருவாக்கிக் கொள்ளலாம்.
இதனால் ஆய்வுக்கட்டுரைகள்,நாம் நினைக்க,எழுத நினைத்த பல செய்திகள்,பிற வலைத்தளங்களில் காணப்படும் சிறந்த செய்திகள் இவற்றை வெளிக்கொணரலாம்.பிறருடைய தளத்தில் நாம் நமது கட்டுரைகளையோ,இன்னபிற செய்திகளையோ  அளிக்கும்போது அவை இறுதிவரை திருத்தப்படாமல் இருக்கவேண்டும்.அப்போதுதான் நமக்குரிய தரம் நிரந்தரமாக இருக்கும்.அதில் நாம் கவனமாகச் செயலாற்றவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக