விளையாட்டு முறையில் தமிழ்மொழி கற்றல்-கற்பித்தல் –ஓர் ஆய்வு
முனைவர் பி.ஆர்.இலட்சுமி.,
பி.லிட்.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்ஃபில்.,பிஎச்.டி.,புலவர்.,டிசிஎஃப்.இ.,
(பிஜிடிசிஏ).,(டிசிஏ).,(எம்பிஏ).,
பேர்ல் அகாடமிக் லீடர்ஷிப் இன்ஸ்டிட்யூட்,
சென்னை-66.
வகுப்பறை என்பது
பூந்தோட்டம்போல மனதிற்கு மகிழ்ச்சிதரும் மலர்கள் நிறைந்தது. அம் மலர்களாகிய
மாணவர்களுக்குத் தோட்டக்காரராகிய ஆசிரியர் சமுதாயக்கல்வி என்ற தமிழ்நீருற்றினை
அளிக்கவேண்டும்.
இன்றைய மாணவர்கள்
மனதளவில் மென்மையானவர்களாகவும், வாழ்க்கையில் ஏற்படும் வெற்றி,தோல்விகளைச்
சமாளிக்க இயலாதவர்களாகவும் உருவாகி வருகின்றனர். இதற்குக்காரணம் தமிழ்ப்பண்பாட்டு
நெறியின்படி வாழ்க்கையில் நடந்துகொள்ள இயலாததும் ஒரு காரணமாகிறது. அறிவியல்
கருவிகளைப் பயன்படுத்துவதிலும்,பிற செய்திகளைத் தெரிந்து கொள்வதிலும் முன்னோடியாக
இருக்கும் மாணவ சமுதாயம்
பாடப்புத்தகத்தில் இருப்பதை நடைமுறை உலகில் கடைப்பிடித்து வாழ இயலாமல்
தடுமாறும் நிலை காணப்படுகிறது. இதனால், தமிழ்ப்பண்பாடு சிதைவுற்ற நிலை காணப்படுகிறது.
பாடங்கள் பணி அமைத்துத் தருவது போல அமைக்கப்படாமல்
பண்பாட்டினையும், பழமையான இலக்கியங்களையும்,
சமுதாய நல்லிணக்கத்தினையும்
அடித்தளமாகக்கொண்டு சில நாடுகளில் அமைக்கப்படுவதால் பணி வாய்ப்புகள் சரிவரக்
கிடைப்பதில்லை.
மொழி கற்பிப்பதன் நோக்கம் தமிழ்ப்பண்பாட்டினைக்
கடைப்பிடித்து வாழ்வதாக இருக்கும் காலத்தில் இத்தகைய போக்கு சிக்கலானதாகக்
காணப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள அனைத்துமொழிகளிலும் சிறந்த மொழியான தமிழ்
பழமையானதாக இருப்பினும், பணி
வாய்ப்பின்மையால் அம் மொழியினைக் கற்க
மாணவர்கள் மறுக்கின்ற காலகட்டம் உருவாகியுள்ளது. உலகில் நிகழும் நிகழ்வுகள்
யாவும் அவரவர் சுயநலம் கருதி இருப்பதால்
காலத்திற்குத் தகுந்தாற்போல ஆசிரியர் கற்பித்தல்திறனை வெளிக்காட்ட வேண்டியவராகிறார். மொழியின் பழமை கருதியும், தமிழ்ப்
பண்பாட்டினைக் காக்கும்பொருட்டும் வகுப்பறையில் விளையாட்டுமுறையில் அடிப்படைத்
தமிழ் கற்றல்-கற்பித்தல் திறன் வளர்த்தல் குறித்து இவ்வாய்வுக் கட்டுரை அமைகிறது.
பாடத் திட்டம்
நாள்தோறும் பாடம் கற்பித்தல், குறிப்பிட்ட
நாட்களுக்குண்டான பாடம் கற்பித்தல்
·
வாரப் பாடத்
திட்டம்
·
மாதப் பாடத்
திட்டம்
·
ஆண்டுப் பாடத் திட்டம்
என்ற முறைமையின்படி தமிழ் வகுப்புகள் உலகெங்கும் குறிப்பிட்டகால அடிப்படையில்
வகுக்கப்பட்டுள்ளன.
பாடத்திட்டங்கள்
பெரும்பாலும்,கலைகள்,இலக்கியங்கள்,தொல்பொருள் ஆய்வுகள்,தமிழ்
இலக்கணம்,தமிழ்ப்பண்பாடு,சான்றோர் வரலாறுகள்,அறிவியல் சிந்தனைகள் இவற்றின்
அடிப்படையிலேயே மாணவர்களின் படைப்பாற்றல் திறன் வெளிப்படுத்தும் வகையில்
அமைக்கப்படுகின்றன.
நல்ல
பாடத்திட்டம் அமைக்கப்படுவது கற்றல் செயல்பாடுகளில் 50 சதவீதம்தான் வெற்றி அளிக்கும்.
ஆசிரியர் அளிக்கும் வகுப்பறை கற்பித்தலில்தான் முழுமையான கற்றல் வெளியாகும்.
ஆசிரியர்கள் தமது புதுவிதமான கற்பித்தல் அணுகுமுறைகளினால் அலுப்பில்லாத
தமிழ்வழிக்கல்வியினை அளிக்க இயலும். தேர்வுத்தாளும்,தேர்வு மதிப்பீடுகளும் ஒரு
மாணவனின் சமுதாய வெற்றிக்குக் குறிப்பிட்ட பங்குதான் பங்களிக்கும் என்பதை ஆசிரியர்
சமுதாயம் உணர்ந்து இயங்கவேண்டும். இன்றளவில் மாணவ சமுதாயம் சிறு தோல்வியினைத்
தாங்கிக்கொள்ள இயலாத மனநிலையில் வளர்ந்து வருகின்றனர். அறிவியல் சமுதாயமும் இதற்கு
ஒரு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. வெற்றி என்பதை மட்டும் இலக்காக வைத்து மாணவ
சமுதாயத்தினை இயங்க வைப்பதால் இச் சிக்கல் ஏற்படுகிறது.
பொருள்தேவைக்காகவும்,அடுத்தவர் பார்க்கப் புகழுடன் வாழ்வது மட்டும்தான் இலட்சியமாக
நினைத்துவாழும் இந்நிலையினைத் தாய்மொழிக்கல்வியின் வழியாக ஆசிரியர் இச்சிக்கலை நீக்க இயலும்.
எல்லாப் பாடங்களும்
வாழ்க்கையில் ஊன்றுகோலாக நிற்க வழி காட்டுகிறது. மொழிப்பாடமே வாழ்க்கையில்
வாழ்வதற்கான வழியினை நேர்பட வழிகாட்டுகிறது. அத்தகைய சிறப்புமிகுந்த
மொழிப்பாடத்தினை
- கேட்டல்
- பேசுதல்
- படித்தல்
- எழுதுதல்
போன்ற அடிப்படைத்திறன்களுடன் புதிய பல
அணுகுமுறைகளையும் உட்புகுத்தி மாணவர்களுக்குத் தகுந்தாற்போலக் கற்பித்தல்வேண்டும்.
அடிப்படைத் தமிழ் கற்க
·
அடையாளம் காட்டுதல்
வகுப்பறை அளவிற்குத் தகுந்த வட்டத் துணியிலோ,
அல்லது நெகிழியிலோ எழுத்துகளையும், அதற்குத் தகுந்த படங்களையும் உருவாக்கிக் கொள்ளலாம்.
கற்பித்தலில் இடம் பெறும் எழுத்து
வீ
v தெரிந்த ஒன்றிலிருந்து தெரியாதனவற்றை அறியச்
செய்தல் முறை
ü கீழ்க்காணும் படத்தில் நீ அறிந்த சொற்களைப்
பெட்டியிலிருந்து தேர்ந்தெடுத்து உனது நண்பனுக்கு உதவுக.
ü கீழ்க்காணும் படத்தில் நீ அறிந்த சொற்களை எழுதுக.
ü கப்பலுக்குக் கடலில் போடப்பட்ட பாலத்தின் வழி
சென்று உனது நண்பனுக்கு வீ எழுத உதவுக.
ü உனது குழுவில் உள்ள மாணவர்களுடன் கலந்து
வீட்டினுள் இருக்கும் வீ எழுத்தைக் கண்டுபிடித்து உனது கையேட்டில் எழுதுக.
v படத்தில் காணப்படும் மரத்தின் வண்ணத்தைக் ௯றுக.
v வீட்டின் வண்ணத்தினை எழுதுக.
v உனது வீட்டின் வண்ணத்தினை எழுதுக.
உள்ளரங்கம்,வெளியரங்கம் போன்றவற்றில் இவற்றினைப்
பயன்படுத்தி விளையாட வைக்கலாம். இம்முறையிலேயே தமிழ் இலக்கணமான எழுத்து,திணை,பால்,எண்,இடம்,வாக்கிய
உருவாக்கப் பயிற்சியினையும் அளிக்கலாம்.
·
பொருத்திக் காட்டல்
குறிப்பிட்ட எந்தத் தமிழ்மொழிப் பாடமாக இருந்தாலும்
பொருத்திக்காட்டலினால் வகுப்பறைக் கற்றலை எளிமையாக்க இயலும். குழுவழிக் கற்றல்அணுகுமுறை
மிகவும் பயனுள்ளதாகக் கருதலாம்.
ü கீழ்க்காணும் படத்தில் காணப்படும்
பூச்சிக்குப் பெட்டியில் உள்ள சொற்களை எடுத்துப் பொருத்த
வழிகாட்டுக-குழுவழி கற்றல்
ü ஆண்பாலுக்கும், பலர்பாலுக்கும் பொருத்தமான படத்தை
ஒட்டுக.
மேற்காணும் முறையில் பாடங்கள் தொடர்பானவற்றை ஆசிரியர்கள் தயாரித்து
வைத்திருந்தால் வகுப்பறைக் கற்றலை எளிமையாக்க இயலும்.
·
அறிவியல்கருவிகளான
அட்டைக்கணினி,மடிக்கணினி,மேசைக்கணினி போன்ற பல கருவிகளைப் பயன்படுத்தி
வரைதல்,குறுஞ்செயலி உருவாக்குதல்,ஒலி,ஒளிப் பயிற்சி அளித்தல் போன்ற முறைகளினால் மாணவர்கள் படைப்பாற்றல்திறனுடன்
தமிழ் கற்பர்.
·
திரைப்படங்கள்,புகைப்படம்
எடுத்துத் தேவையற்றவிதங்களில் பதிவேற்றி காலத்தை விரயமாக்குதல் போன்றவை இதனால் குறையும்.
முகநூல்,கட்புலன்செவி,ட்வீட்டர் போன்றவற்றைத் தமிழ் கற்பித்தலிலும் பயன்படுத்தலாம்.
இருப்பினும், ஆசிரியர்களும்,பெற்றோர்களும் இத்தகைய நுட்பத்தை மாணவர்கள் பயன்படுத்தும்போது
சரியான வழிகாட்டியாக இயங்குவது அவசியம்.
பெரும்பாலும் மாணவர்கள் உகரத்திலும், இகரத்திலும்
கவனம் செலுத்த மாட்டார்கள். இதனால் பிழைகள் மிகுந்து காணப்படும். குரு,நன்றி-போன்ற
சொற்களில் ரு-றி இவற்றை உருவாக்கிப் பயன்படுத்திக் காட்டினால் மாணவர்கள் தானே
உருவாக்கிக் கற்பர். கேட்டுக் கற்றலைவிட செயல்வழிக்கற்றலினால்
அதிக பயனை அடைய இயலும்.இம்முறையிலேயே டண்ணகரம்,றன்னகரம், இன எழுத்துகள் இவற்றையும்
எளிமைப்படுத்திக் கற்பிக்கலாம்..
புலம் பெயர்ந்து வாழும் தமிழ் மாணவர்களுக்கு
·
தகுந்த உரையாடல்
பயிற்சியினை எளிமையாக்கித் தருதல்
·
மிகவும் குறைந்த அளவில் ஆங்கிலத்தைப்
பயன்படுத்திக் கற்பித்தல்
·
விளையாட்டுமுறையில்
கற்பித்தல்
போன்ற அணுகுமுறைகளைக் கையாளலாம்.
ஏனெனில், முழுவதுமான ஆங்கிலக் கலப்புடன் கூடிய தமிழ்க்கல்வி
மாணவரின் கற்றல்திறனை வளர்க்காது. ஆங்கில ஒலியுடன் தமிழ் ஒலி எழுத்துகள் சில
இடங்களில் வேறுபடும்.மேலும் ஆங்கிலம் கலப்பதினால் கற்றுக்கொள்ளும் நேரமும்
அதிகமாகும்.
- கடல் >ka
- தங்கம் >
ga
- கடல் >kadal
- டமாரம் >tamaaram
ஆர்வமூட்டல்
ஆசிரியர்
வகுப்பறையில் கற்பித்தலைப் போர்க்களத்தில் நுழையும் போர்வீரனைப்போல அமைத்திருத்தல் கூடாது.
ஆர்வமூட்டல் நிகழ்த்துவதற்கான காரணங்கள் பலதரப்பட்டனவாக ஆராய்ச்சியாளரால்
மதிப்பிடப்பட்டுள்ளன. ஆர்வமூட்டல் இல்லாமல் நடைபெறும் கற்பித்தல்
மதிப்பீடுகளின்படி மாணவர்களின் கற்றல் சதவீதம் குறைந்த அளவில் காணப்படுவது உறுதி
செய்யப்பட்டுள்ளது.
- முன்னர் நடந்த வகுப்பறைக் கற்பித்தலின்
இறுதியில் ஒரு சொல் அல்லது பொருளின் பெயரைக் கூறி மறுநாள் அது தொடர்பான
வாக்கியங்களை அமைக்க வைத்தல்
- அது தொடர்பான செய்திகளைப் பேச வைத்தல்
- உள்ளரங்க,வெளியரங்க விளையாட்டுகள் நடத்துதல்
- தொடர்ச்சியான கற்பித்தல் நிகழ்த்த மாணவரிடையே
குழுவழிப் பயிற்சி நடத்துதல்
இதுபோன்ற பலதரப்பட்ட நிகழ்வுகளை நடைபெறச் செய்தல்
அவசியமாகும்.
தெரிந்த
ஒன்றிலிருந்து தெரியாத ஒன்றைப் புரிய வைத்தல் நிலை உருவாகும்போது இயல்பாகவே மொழி
கற்கும் ஆர்வம் அதிகமாகும்.
ஒலியியல் பயிற்சிகள்,
ஒளிக்காட்சி உருவாக்கம் போன்றவற்றைத்
தகுந்த மென்பொருள்களைக் கொண்டு ஆசிரியர் உருவாக்கிக் காட்டுதல்வேண்டும்.
- அதன்தொடர்ச்சியாக மாணவரும் இப்பயிற்சிகளைப்
பதிவு செய்து திரும்ப மீட்டுருவாக்கம் செய்தல்
- அட்டைக்கணினியினைப் பயன்படுத்தி
ஒளிக்காட்சியினை உருவாக்குதல்
- ஆசிரியர் பாடங்களுக்குத் தகுந்த
பயிற்சித்தாள்களை அவர்களது மாணவரின் கற்றல் திறனறிந்து தயாரித்தல்
- பாடவகுப்புகளிடையே எதிர்வினாக்கள் வினவி விடை
பெறும் பயிற்சி,குழுவழிக் கற்றல் பயிற்சி,செய்முறைப்
பயிற்சிகளை காலத்திற்குத் தகுந்தாற்போல வகுப்பறையிலேயே கற்பித்துச் செய்ய
வைத்தல்
போன்ற பல நிகழ்வுகளையும் பயன்படுத்தும்போது
தமிழ்கற்றல் பெருகும்.
விளையாட்டுமுறையில் தமிழ்மொழிக் கற்றல்
நிகழும்போது பல சிக்கல்கள் நிகழ்வதுண்டு. அதற்குரிய தீர்வுகளையும்
இவ்வாய்வுக்கட்டுரை விளக்குகிறது. மொழிப்புலமை என்பது மனப்பாடம் செய்து வருவதனால்
ஏற்படாது. ஒரு பொருளைக் குறித்துத் தமிழ்மொழி கற்ற மாணவன் சுயமாக எழுதவோ,பேசவோ, இது குறித்த பல
நல்ல சிந்தனைகளையோ வெளிப்படுத்துவதாக இருக்கவேண்டும் என்பதனை
இவ்வாய்வுக்கட்டுரையின்வழி அறிய இயலுகிறது.
ஆய்வுக்குப்
பயன்பட்ட வலைத்தளங்கள்