விளையாட்டுமுறையில் தமிழ் கற்றல்-கற்பித்தல்
ஆசிரியர்களுக்குரியது
பொதுவாக மாணவர்கள் எழுதும் முறையினை வெறுத்து விளையாட்டுமுறையில் கல்வி கற்பதை விரும்புவர்.காரணம் இன்றைய இயந்திர உலகில் தமிழ் வகுப்புகளில் மட்டும்தான் மாணவர்கள் தனது தாய்மொழியில் பேசுகின்றனர்.அவ்வகுப்பிலும் எழுதுதல்,பேசுதல்,படித்தல் திறன்களில் மட்டுமே கற்பித்தல் நடைபெற்றால் மாணவர்களின் மனம் பாதிப்படையும்.தமிழ் கற்க மறுப்பர்.இந்நிலையினைத் தவிர்க்க கீழ்க்காணும் எடுத்துக்காட்டுப் பாடம் வானிலும்,புவியிலும் என்ன இருக்கும்?
சாதாரணமான திறன் படைத்த ஆசிரியர்கள் என்ன செய்வர்?
இதுதான் படம்-இதில் உள்ள சொற்களை விரல்களை வைத்துப் படியுங்கள்.நானும் படித்துக்காட்டுகிறேன் என்றும்,படங்களைக்காட்டி விளக்கியும்,தேர்ந்தெடுத்துச் சரியான விடை எழுதி, நடத்தி எழுத வைத்து விடுவார்.இதில் வெற்றியும் கிடைக்கும்.ஆனால் மீத்திறன் குறைவான,அதாவது எழுத்துகளே தெரியாமல் முதன்நிலையில் வந்து அமர்ந்திருக்கும் மாணவர்களுக்கு இம்முறை பயனளிக்காது.
ஆனால் திறமை மிகுந்த ஆசியரோ வான்,புவி பற்றிய விளக்கம் ஏற்கனவே மாணவன் அறிவியல் வகுப்பில் படித்துள்ளதை மீட்டுக்கொணர்ந்து வகுப்பறை கவனத்திற்குக் கொணர்தல் வேண்டும். வானம் என்றால் என்ன?புவி என்றால் என்ன?விளக்கம் அறிந்தபின் கற்பித்தல் முறைகளில் ஏதேனும் இரண்டு முறைகளைப் பயன்படுத்தலாம்.வினாடிவினா,நாடகம்,வெளியரங்க விளையாட்டு-ஆசிரியரின் கற்பனைக்கு ஏற்றதுபோல் பயன்படுத்தி கற்பிப்பதால் மாணவர் அந்த வகுப்பறையில் கற்ற பாடத்தை மறக்க மாட்டார்.வகுப்பறை முடியும்போது நினைவில் நிறுத்த மறுமுறையும் வகுப்பறையில் நடைபெற்றதைச் சொல்ல வைக்கவேண்டும்.இதற்கு அறிவியல் சாதனங்களையும் பயன்படுத்தலாம். மறுநாள் வரும்போது ஆசிரியர் கேட்கும்போது இம்முறையிலேயே தமிழ் முழுவதையும் படிக்கலாமா என மாணவர் கேட்கும் நிலை உருவாகும். கற்பித்தலில் இம்முறை மிகவும் சிறப்பானது.
மாதிரி பயிற்சித்தாள்
-------------------------
----------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக