செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013

கவரிமான்



                               கவரிமான்
அவள் கோவில் வாசலில் நின்றிருந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்த வயதான இரண்டு குழந்தைகளைப் பார்த்தாள். காலையில் நடந்தது அவளுக்கு ஏதோ இனம் புரியாத உணர்வை அவள் மனதில் பதிந்திருந்தது.
நாங்கள் இரண்டு பேரும் உன்னை விட்டுப் போய்ட்டா நீ என்னடா செய்வே? என அப்பா கேட்டதை ஒரு கணம் கேட்டவுடன் சடாரென எனக்கென்ன! எப்போதும் போல நீங்க இருக்கீங்க..எனக்குக் கல்லூரியில் ஆசிரியர் உங்க ரெண்டுபேர் மாதிரியே தான்...அச்சு அசலா என்ன  பழக்கங்கள் தான் கொஞ்சம் வேறுபாடா! கிட்டத்தட்ட வாளின்முத்தம் கதை மாதிரின்னு வைச்சுக்கிட்டா என்ன! ஆனா எல்லாரும் என்னை பழக்கங்களும் அதே போலத்தான்னு சொல்றாங்க! இருக்கற ஏரியா,வளர்த்த வளர்ப்பு, பாட்டு,வீணைன்னு......சொல்லிக்கொடுத்தாச்சு.இப்போ விட்டுட்டுப்போறேன்னுட்டுஆளுக்காளு பாட்டுப் பாடறாங்க..... நான் பாட்டுக்குப் போறேன் எனச் சொல்ல வாய் வந்ததைச் சடாரென நிறுத்திக் கொண்டாள் மீனாட்சி. ஓ...கல்லூரியிலும் நம்ம ஆசிரியர் நம்மை விட்டு வேறு வகுப்பிற்குச் சென்று விடுவதாகச் சொல்லியிருந்தாரே!
எதுவுமே என்னைக்குமே நிரந்தரம் இல்லை என்றாரே....நாமும் இந்தக் குழந்தை போல யாருமே இல்லாமல்  இருந்திருக்கலாமோ யாருமே இல்லாத உலகத்தில் இந்தக் குழந்தைகள் வாழவில்லையா என ஒரு கணம் யோசித்தாள். எதையும் இழக்கும்போது மனதைப் பக்குவப்படுத்தி தன்னைத் தயார் செய்து கொள்ளவேண்டிய கலையை மாணவர்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். உங்களை விட்டுப் பிரிந்து விடப்போகிறேன். நீங்கள் நன்றாகப் படிக்க வேண்டும் என ஆசிரியர் கூறினாரே...அப்போது வாணி கூடக் கேட்டாளே! நாங்கள் எந்தத் தவறும் செய்யாத போது எதற்காக இந்த இடமாற்றம்?
தலைமைக்குக் கட்டுப்பட வேண்டும் இல்லையா வாணி? அழகாய்ப் புன்னகைத்தார் இராதா. இழப்புகளை  ஏற்று வாழ நம்மை எப்போதுமே தயார் செய்து கொள்ள வேண்டும். அப்போ மீதமுள்ள ஆசிரியர்கள் சரியில்லையா! என வினா தோன்றுமில்லையா?
அப்போ நீங்கள் எங்களை விட்டு விலகிச் சென்றால் செய்யாத தவறுக்காக நாங்கள் உங்களை விட்டுப் பிரிவதாகத் தான் எல்லோருடைய கண்ணுக்கும்  தெரியும். அதில் எங்களுக்கு உடன்பாடு கிடையாது. இத்தனை வருடம் உங்களிடம் படித்தோம். நாங்கள் வாழ்க்கைக்குத் தேவையானதை உங்களிடம் கற்றோம். தங்களை விட்டுப் பிரிந்தால் ஒவ்வொரு முறையும் இப்படித்தான் இனியும் செய்வார்கள். நாம் இது குறித்துக் குரல் எழுப்பினால் என்ன கலா?
நீ என்ன சொன்னாலும் யாரும் கேட்கப் போவது கிடையாது. கல்லூரியை விட்டு வேண்டுமானால் நாம் விலகிக் கொள்ளலாம். அவ்வளவு தான்.நாமென்ன...மாணவர்கள் தானே..நமது உணர்வுகள் யாருக்கும் புரிவதில்லை என நிரஞ்சன் அலுத்துக் கொண்டான். இதோ! அழகாய் சொல்லப்போனால் எத்தனை நாள் உங்களுடன் இருப்போம்? அதுவரை நாங்கள் உங்களுடன் இருப்பதை மட்டுமே விரும்புகிறோம். இல்லையெனில் நாளை முதல் நாங்கள் வரவில்லை. நாங்களாக உங்களை விட்டுப்பிரிவது இயற்கை. அதை ஏற்று நாங்கள் வாழ்வோம் என் அம்மா, அப்பா கூறியதைப் போல. ஆனால் நீதியற்ற கருத்தினை ஏற்று நாங்கள் தங்களைப் பிரிவது எங்கள் படிப்பைப் பாதிக்கும். நான் கல்லூரியை விட்டுப் போவதாக உள்ளேன்.
நிரஞ்சன் சொன்னது ஒருபுறம் வேதனை.  காலையில் வீட்டிலிருந்து வயதான பெற்றோரிடம் சொல்லாமல் வந்த வேதனை மனதில் ஒருபுறம்..கல்லூரியில் நடந்த நிகழ்ச்சி ஒருபுறம் என மனதைப் பந்தாட ஒரு ஓரமாக அமர்ந்து அந்தக் குழந்தைகள் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள்.கையை ஒரு கணம் திருப்பிப் பார்த்துக்கொண்டாள்.ஏற்கனவே பிளான் செய்தது போல் நிறைவேற்ற இன்னமும் சில வேலைகள் இருக்கிறதே! இப்போது இந்தப் பிரச்னை வேறு..யாருக்காக இருக்க வேண்டும்? என இரண்டு வருடமாகவே பலமுறை யோசித்து எடுத்த முடிவை நிறைவேற்றிக் கொள்ள இந்தப் பாச உணர்வு தடை போடுகிறது. நம்பெயர் பூமியில் நிற்கும்படி ஏதோ ஆசிரியர் சொன்னார் என ஏதோ கிறுக்கி எழுதி அவர் கையால் கையெழுத்து வாங்கி முடித்து விட்டோம். பூமிக்கு வந்த வேலை முடிந்து விட்டது என மனதில் நினைத்துக் கொண்டாள். அருகில் இருந்த அந்தப் புத்தகத்தின் அட்டைப்படச் சுவடி அவள் கிழித்த அவள் அப்பாவின் சுவடியைப்போல அவளைப் பார்த்துச் சிரித்தது. அப்பாவைப் போல மனதெல்லாம்  வெள்ளையாய்ச் சிரிக்க ஏன் இந்த இரண்டு வருடமாக என்னால் முடியவில்லை?  ஏதோ ஆசிரியர் இருக்கிறார் என வாழ்ந்தோம்.இப்போது அதற்கும் ஒரு தடை.மனதில் மத்தாப்பூவாய் பல எண்ணங்கள் வந்து மாற ......கைப்பையில் இருப்பது நல்ல வேளை யாரும் இன்னமும் பார்க்கவில்லை என நினைத்துக் கொண்டாள். இன்னமும் 3 மாதம்தான் என மனதிற்குள் நினைத்துக் கொண்டாள்.  யாரோ மொபைலில் படம் பார்த்துக் கொண்டிருந்ததை அவள் பார்த்தாள். ஆட்டோவில் நாலைந்து பேர் கலர்கலராய்க் கட்டிய கொடிகளுடன் உள்ளே உருட்டுக் கட்டைகளுடன் முன்னால் சென்ற டூவீலரை விரட்டியதைப் பார்த்தாள். ஏனிந்த வன்முறை! என்று ஒழியும் இந்தக் கலாசாரம் படங்களில் என தனக்குத் தானே கேட்டுக் கொண்டாள். டூவீலர் அடையாறு தாண்டி உள்ளே தரமணிக்குச் சென்றவுடன் பின்னால் வந்த ஆட்டோ காணாமல் மறைந்தது.என்னமாய்ப் படம் எடுக்கிறார்கள் என மொபைல் வைத்திருந்த பெண் இரசித்தாள். நீங்கள் எந்த காலேஜ் என்றாள்.
நான் காந்தி காலேஜ். நீங்க கேஆர்ன்னு நினைக்கறேன்.எப்பிடி இவ்வளவு கரெக்டா சொல்றீங்க....அது உங்க ஸ்டைல் சொல்லுது.
படம் பாக்க நான் டிஸ்டர்பா..பாக்கலாமா உங்களுடன்!
ஓகே!
இதென்ன! படத்திற்குச் சம்மந்தமே இல்லாமல் புலி படம் காட்டுறாங்க! நீங்க வேற! தேசியச் சின்னமுல்ல. அதான் வீரம்னு சிம்பாலிக்காச் சொல்றாங்கலாம். இப்பல்லாம் குறிப்பால் உணர்த்துதல்னு இலக்கணத்துல படிச்சிருக்கோம்ல. அதான் நடைமுறையில ஓடுது...பார்..பார்...
டிரெயின் கம்பார்ட்மெண்டை என்னமா காட்டுறான்னு.....சுத்தி ஆளுங்க..நடுவுல ஃபுல்லா பாரு யாருன்னு...என்ன தத்ரூபமா இருக்குல்ல....ஆமா..ஆமா...சாகப்போறவுங்களக்கூட என்ன தத்துவம் பேச வைச்சு எடுத்திருக்காங்க பார்...அந்த காலத்து அந்தி நேரத் தென்றல்காற்று..படம் பாக்குற மாதிரி இருக்கு.....போதும் தேங்க்ஸ்..பொழுது நல்லா போச்சு.....பழைய கசங்கிப்போய் பஃப்ஸ் மடித்த பேப்பரைத் திருப்பிப் பார்த்தாள். அது 2011 இல்  வெளியான மார்ச் மாத பேப்பர் கார்ட்டூன்.பின்னால்   திருப்பித் திருப்பிப் திருப்தியாக பெண்ணைத் துன்புறுத்தும் எவரும் ஜெயித்ததாக வரலாறு இல்லை என்ற செய்தியைப் படித்து முடித்தாள். திரும்பவும் மீனாட்சி அந்தப் பையனைப் பார்த்தாள்.
அந்தப் பையன் வாடி வதங்கிய பூவை அந்தப் பெண் தலையிலிருந்து எடுத்துக் கீழே போட்டான். ஆதித்யா அண்ணா! அது போலவே எனக்குத் தலை வாரி விடுகிறாயா?என யாரையோ சுட்டிக் காட்டினாள். சுட்டிக் காட்டிய இடத்தில் ஒரு பெண் தலைவிரி கோலமாகத் தலையை விரித்துப் போட்டு அடியில் ரப்பர் பேண்ட் போட்டிருந்தாள். ப்பூ...அதுதானா ....பிரமாதம். இதோ பார் எந்தங்கைக்கு இல்லாத அலங்காரமா? என்றான்.
 அருகில் இருந்த பெரிய கைப்பையைப் பார்த்து வியந்தாள் மீனாட்சி. அது பணக்காரர்கள் வைத்திருக்கும் ஆடம்பரப்பை. அது நிறைய என்ன இருக்கும் என்ற ஆவலில் உள்ளே எட்டிப்பார்த்தாள். அதில் உள்ளே பெரிய ஃபோட்டோ.அதில் நகை அணிந்த கோல்த்தில் ஆணும், பெண்ணும் நின்றிருந்தனர்.
பக்கத்தில் போய் வேகமாக உடனே இது யார் எனக் கேட்டாள். இது எங்களை வளர்த்தவங்க. எங்களுக்கு அப்பா, அம்மா யாரும் கிடையாது. அனாதை ஆஸ்ரமத்துல வளர்ந்தோம். அங்கே இவங்க திடீரென இறந்து போய்ட்டாங்க. எனக்கு அங்கு இருக்கப் பிடிக்கல..வந்து கோவில்ல இதோ உட்காந்துட்டோம்.
இதென்ன! நம்மைப்போலவே இந்தக் குழந்தைகளும் ...என ஆச்சரியத்தில் வியந்தாள் மீனாட்சி. ஏம்மா! அங்கு வேறு யாரும் இல்லையா? உங்க படிப்பு இதால தடைபடுமே!
போகட்டுமே! பூமியில எதுவுமே நிரந்தரம் கிடையாது. படிப்பில்லாட்டி என்ன? நான் இதோ கோவில் வாசல்ல உட்காந்துட்டேன் அழகா சாப்பாடு கிடைக்குது. இதோ! அவுங்க எடுத்துக் கொடுத்த துணி ஆயுசுக்கும் போதும்.மனசுக்குப் பிடிச்சாத் தான் எதுவும்...
..
மீனாட்சி படிப்பைத் தொடர்ந்தாளா?
கதையைத் தொடர்ந்து எழுதுக. கதைக்குத் தலைப்பு பொருத்தமானதா! ஆராய்க.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக