செவ்வாய், 21 ஜனவரி, 2014

பெண்ணுலகப் படைப்புகள்



பெண்ணுலகப் படைப்புகள்
ஒருவருடைய உணர்ச்சி வெளிப்பாடுகள் தொல்காப்பியர் எழுதிய மெய்ப்பாடுகளாக வெளிப்படுகின்றன.
மனதில் எழும் இத்தகைய எண்ணங்களே கதை, கவிதை,கட்டுரை இவற்றின் வழி ஆராய்ச்சியாளருக்கும்,கவிஞனுக்கும்,கதாசிரியனுக்கும் கருப்பொருளாக அமைகிறது. உள்ளத்துள் எழும் எண்ண உணர்ச்சிகளை அடக்கி வெளிக்கொணரும் இடமாகப் படைப்புகள் அமைகின்றன. இதனால் பெண்ணுலகம் படைக்கும் அனைத்தும்  அவளது வாழ்க்கையில் நிகழ்ந்தவை என ஆணுலகத்தினால் வரையறுக்கப்பட்டுள்ளதை அறுதியிட்டு ஏற்கஇயலாது. பெண்கள் இவ்வுலக வாழ்க்கையில் தமது பெரும்பங்கு படைப்புகளைச் சில காரணங்களினால் பெருமளவில்
வெளிக்காட்ட விரும்புவதில்லை. காரணம் பெண் படைக்கும் படைப்புகள் யாவும் அவளது எண்ணங்களையும், அவளது சமூகத்தையும் இணைத்தே படைக்கப்படுகின்றன என்பது போன்ற தவறான கருத்துகள் மண்டிக் கிடக்கின்றன.
ஆனால், இக்கூற்றுகள் ஒருசில நிகழ்வுகளை மட்டுமே உள்ளடக்கி ஏனைய செய்திகள் படைப்பாளரின் கற்பனைத்திறனுடன் இணைந்தததாகக் கருதுவதற்கான இடமுண்டு. ஒவ்வொரு படைப்பாளருக்கும் படைப்பாக்கத்தை வெளிக்கொணரும் விதத்தில் அவரது எண்ண ஓட்டங்கள் தடைபடாதிருக்கும்பொருட்டு தமது வாழ்வில் பதிந்த ஏதாவது ஒரு நிகழ்வு அழியாமல் பதிந்து விடுவதுண்டு. அக்கருத்து வெளியாகின் சமூகத்திற்கு நன்மை விளையும் என்ற நோக்கினில் அமைக்கப்பட்டிருக்கலாம்எனக் கருதலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக