செவ்வாய், 7 ஜனவரி, 2014

THIRUKKURAL-NEWS

திருக்குறளும் அரிய தகவல்களும்:- 

*
திருக்குறள் முதன் முதலில் அச்சிடப்பெற்ற ஆண்டு – 1812 
*
திருக்குறளின் முதல் பெயர் – முப்பால். 
*
திருக்குறளில் உள்ள அதிகாரங்கள் – 133 
*
திருக்குறள் அறத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள்- 380 
*
திருக்குறள் பொருட்பாலில் உள்ள குறட்பாக்கள் – 700 
*
திருக்குறள் காமத்துப்பாலில் உள்ள குறட்பாக்கள் – 250 
*
திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள் – 1330 
*
திருக்குறளில் உள்ள சொற்கள் – 14,000 
*
திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள் – 42,194 
*
திருக்குறளில் தமிழ் எழுத்துகள் 247-இல், 37 எழுத்துகள் மட்டும் இடம்பெறவில்லை. 
*
திருக்குறளில் இடம்பெறும் இரு மலர்கள் – அனிச்சம், குவளை. 
*
திருக்குறளில் இடம்பெறும் ஒரே பழம் – நெருஞ்சிப்பழம் 
*
திருக்குறளில் இடம்பெறும் ஒரே விதை – குன்றிமணி 
*
திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து – ஒள
*
திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரம் – குறிப்பறிதல். 
*
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் – பனை, மூங்கில். 
*
திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட (1705) ஒரே எழுத்து – னி. 
*
திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட இரு எழுத்துகள் – ளீ, ங. 
*
திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள் – தமிழ், கடவுள். 
*
திருக்குறள் மூலத்தை முதன் முதலில் அச்சிட்டவர் – தஞ்சை ஞானப்பிரகாசர். 
*
திருக்குறளுக்கு முதன் முதலில் உரை எழுதியவர் – மணக்குடவர். 
*
திருக்குறளை முதன் முதலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் – ஜி.யு.போப். 
*
திருக்குறள் உரையாசிரியர்களுள் 10-வது உரையாசிரியர் – பரிமேலழகர். 
*
திருக்குறளில் “கோடி’ என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது. 
* “
எழுபது கோடி’ என்ற சொல் ஒரே ஒரு குறளில் இடம்பெற்றுள்ளது. 
* “
ஏழு’ என்ற சொல் எட்டுக் குறட்பாக்களில் எடுத்தாளப்பட்டுள்ளது. 
*
திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண் – ஒன்பது 
*
திருக்குறள் இதுவரை 26 மொழிகளில் வெளிவந்துள்ளது. 
*
திருக்குறளை ஆங்கிலத்தில் 40 பேர் மொழிபெயர்த்துள்ளனர். 
*
திருக்குறள் நரிக்குறவர் பேசும் “வக்ரபோலி’ மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக