ஞாயிறு, 2 பிப்ரவரி, 2014

பயிற்சித்தாள்

பயிற்சித்தாள்-2(worksheet-2)
I.                  பின்வரும் படத்தைப் பார்த்துப் பொருளுணர்ந்து அடைப்புக்குள்ளிருக்கும் சரியான சொல்லைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
        Look at the picture and mention the activity performed in the blanks given.

(வருகிறான் varugir:aan, படிக்கிறாள் padikkir:aal,கொஞ்சுகிறாள் konjugir:aal , இழுக்கிறான் izhukkir:aan )
(coming, reading, pulling,caring for)
     1.   Aval: -----------
                                    அவள்----
                                      She is ----------
2. Thambi thavazhndhu ---------
                                          தம்பி தவழ்ந்து----
                                       Brother is ________ by crawling.
                    

3,Aval: putthagathai thambi  piditthu -------
                  அவள் புத்தகத்தைத் தம்பி -------------
                  Brother is ______________her book.
  4.Aval: thambiyai---------
                 அவள் தம்பியை --------
                                    She is ___________ her brother.
I I  பின்வரும் படத்தைப் பார்த்துப் பொருளுணர்ந்து முன்னிலைப் பெயர் உள்ள படத்தை Pசெய்க.
 pinvarum padatthaip paartthup  porulunarndhu munnilaip peyar ulla padatthai  P      seyiga.   
Identify the second person  pronoun from the    pictures given below. 

 1. நான் naan
                                1.
 2.நூற்றுக்கு நூறு மதிப்பெண் வாங்கியிருப்பதை
                 Nootr:ukku noor:u madhippen vaangiyir:uppadhai
                                        Have got centum marks in the examination

 3.நீங்கள் பாருங்கள் அப்பா.
               Neengal: paarungal: appa.

                                       You see it my daddy.

சனி, 1 பிப்ரவரி, 2014

பயிற்சித்தாள்

                 பயிற்சித்தாள்(WORKSHEET-1)
பின்வரும் வாக்கியத்தினைப் படித்துணர்ந்து  அடைப்புக்குள்ளிருக்கும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்துக் கோடிட்டஇடத்தினை நிரப்புக.(marks-6)
( றீர்கள்reergal , றான்raan, றேன்reen, றாள்raal, றோம்rom ,றார்கள்raargal)
Read the sentences carefully and Fill in the blanks with suitable words given in the list.
(am, are, is)
  1. நான் படித்துக் கொண்டிருக்கி-------.
Naan paditthuk kondirukki--------.
I _________ studying.


  1. நாங்கள் படித்துக்கொண்டிருக்கி------
Naangal paditthukkondirukki----------
We  ________ studying.


  1. நீங்கள் படித்துக் கொண்டிருக்கி-------
Neengal paditthukkondirukki----------------
You ___________ studying.

  1. அவன் படித்துக் கொண்டிருக்கி------.
Avan  paditthuk kondirukki-------------------
He __________ studying.



  1. அவள் படித்துக்  கொண்டிருக்கி------.
Aval paditthuk kondirukki-------------------
She _________ studying.

  1. அவர்கள் படித்துக்கொண்டிருக்கி------.
Avargal paditthuk kondirukki-------------.
They __________ studying.
I I   பின்வரும் வாக்கியத்தினைப் படித்துணர்ந்து  அடைப்புக்குள்ளிருக்கும் வார்த்தைகளைத் தேர்ந்தெடுத்து கோடிட்டஇடத்தினை நிரப்புக.(marks-2)
(றனrana, றதுradhu)
Read the sentences carefully and Fill in the blanks with suitable words given in the list.
(It , They)
  1. அது வருகிறது.
Adhu varugiradhu.
_________ is coming.

2,  அவை வருகின்றன.
    Avai varugindrana.

        _________ are coming.     

பயிற்சித்தாள்-1-பாடம்-3

           பயிற்சித்தாள்-1-பாடம்-3
                                    worksheet-1-lesson-3                
I        ஆங்கில வார்த்தைக்குப் பொருத்தமான சேர்த்த               சொல்லைப் பொருத்துக. (Match the English words with correct word adding ‘ai’) Marks-7
    i.        Me-----avalai (அவளை)
  ii.        You-----pandhai (பந்தை)
iii.        Him-----adhai (அதை)
iv.        Her-----unavai (உணவை)
  v.        It-------unnai (உன்னை)
vi.        Ball----avanai (அவனை)
vii.        Food----yennai (என்னை)
II  பொருத்துக     (Match the following) Marks-7
                                i.            I----Nee(நீ)
                              ii.            You---Avan(அவன்)
                            iii.            He---Naan(நான்)
                           iv.            She---Pandhu(பந்து)
                             v.            It----Unavu(உணவு)
                           vi.            Ball---Adhu(அது)
                         vii.            Food---Aval(அவள்)

Worksheet-2-lesson-3 பயிற்சித்தாள்-2-பாடம்-3
I அடிக்கோடிட்ட சொல்லுக்கு ஐ சேர்த்து எழுதுக
(Write the underlined words adding ‘ai’)
(பெட்டியைப்petiyai , உணவைச்unavai, பாடத்தைப் paadathai, பந்தை pandhai)
                                                       i.            அவன் உணவு சாப்பிட்டான். (He ate food)
Avan unavu saappitaan.
                                                    ii.            அவள் பந்து எறிந்தாள். (She threw the ball)
Aval pandhu erindhal.
                                                  iii.            நீ பெட்டி  பார்த்தாயா? (Did you see the box)
Nee petti paarthaaya?
                                                  iv.            நான் பாடம் படித்தேன். (I studied the lesson)
                                                    v.            Naan paadam padithen.
           I I  அடிக்கோடிட்ட சொல்லுக்கு ஐ நீக்கி எழுதுக.
(Write  the underlined words removing ‘ai’)
                                                                               i.            அவள் உணவைச் சாப்பிட்டாள். (She ate food)
Aval unavai chaappitaal.
                                                                            ii.            அவன் பந்தை எறிந்தான். (He threw the ball)
Avan pandhai erindhaan.
                                                                          iii.            நீ பெட்டியைப் பார்த்தாயா? (Did you see the box?)
Nee pettiyaip paartthaayaa?
                                                                          iv.            நான் பாடத்தைப் படித்தேன். (I studied the lesson)
Naan paadatthaip paditheen.
                                                                               v.            அவள் சீப்பை எடுத்தாள். (She took the comb)
Aval seeppai edutthaal.
                                                                          vi.            அவன் அம்மாவை அழைத்தான். (He called the mother)

Avan  ammavai  azhaitthaan.

புத்தகத்தின் கண்ணீர் தேடல்

அங்காடித் தெருவில்
அங்குலமாய் என்னை
அணைக்க விழிக்கதவின்
உப்புநீர் மட்டுமே
உன்னிடம் இருந்ததை
 நான் அறிந்தேன்!
பாதம் நோக
காத தூரம்
நீ நடக்க
கல்விச்சோலையாய்
என் உறவுகளின்
நூலக அணிவகுப்பு
நூலகத்தில் கறையான்கள்
மட்டுமே குடியிருக்க
உரமாய் நானிருக்க
உன்னுள் அறிவுமல்லிகையாய்
நான் மலர்ந்தேன்!
நெருஞ்சி முள்ளாய்
உறவுகள் உரச
உப்புநீரால் என்
தேகத்திற்கு
அன்றுதான் குளியல்!
கண்ணிமை ஈரம்
துடைக்க நானே
அறிவு மருந்தானேன்!
பல்லாண்டு கடந்தாலும்
தொலைந்து போன
 மதலைமுகம்
 தேடி அலைகின்றேன்!
பட்டம் பல பெற்று
வரதட்சணை வீதியில்
 தொலைந்தாயோ?
மாதந்தோறும்
 வரதட்சணை அமுதசுரபியாய்
மாறினாயோ?
காலச்சக்கரத் தேரோட்டத்தில்
தும்பைப்பூ தேகம்
துகளாய் மாறி
உதிர்ந்து விடும்
வேதனையில் நான்!
அறிவுத் தேடலை
அகண்டமாக்கிய
இனிய உறவே!
என்னை அழிவில்லாமல்
செய்திட வருவாயோ?

கவிதையைத் திறனாய்வு செய்தல்



                     பெண்-கவிதையைத் திறனாய்வு செய்க
என்னை நோக்கி வீசி எறிந்த
ஒவ்வொரு வரதட்சணை அணுகுண்டும்
என்னை முன்னேற்றிய ஏணிப்படிகள்!
தாயாய் தாலாட்டிய புத்தகங்கள்
பாலைவனத்தில் உருவாகிய சோலைவனம்!
கடவுளிடம் பேசிய வரிகள்
சத்தியமான உண்மைகள்!
நெஞ்சத்தில் மறைந்த
நெருஞ்சி முட்களை எடுத்துவிட
எந்த மருந்தைத் தேடுவது?
நடந்தவை நடந்தவையாக
நடக்க இருப்பவை நல்லவையாக
நாளைய  பொழுது நல்லவையாக
இருக்கும் என்ற எதிர்பார்ப்பில்
வாழ்ந்து கொண்டிருக்கும்
இயந்திரம்.