வெள்ளி, 11 நவம்பர், 2011

கல்விக் கலைச்சொற்கள்

Saturday, October 22, 2011
இணையத்தின் வளர்ச்சி மேலோங்க மேலோங்க, இணையத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சியும் மேலோங்கியுள்ளது. இணையத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சி மேலோங்க மேலோங்க தமிழ் கலைச்சொற்களின் தேவையும் தமிழர்களால் உணரப்பட்டுள்ளது. இத்தேவை கருதி கலைச்சொற்களை உருவாக்கும் செயற்பாடுகள் சில குழுமங்களாகவும் சிலர் தனித்தும் சிதறி நடைப்பெற்றுவருகின்றன. இருப்பினும் ஒரு ஒருங்கிணைந்த செயற்பாடாக, கனடாவில் அனுபவம் வாய்ந்த அறிஞர்கள், ஆசிரியர்கள், மொழிப்பெயர்பாளர்கள், துறைசார் வல்லுனர்கள் கனடா தமிழ்ச் சொற்கோவைக் குழாம் எனும் பெயரில் காலத்தின் தேவைக்கேற்ப, பல்வேறு துறைசார்ந்த தமிழ் கலைச்சொற்களையும் உருவாக்கிவருகின்றனர். அவை ஆங்கிலக் கல்வியுடன் தொடர்புடையவை என்பதால், அவற்றை அவர்களின் அனுமதி பெற்று அனைத்து தமிழரின் பயன்பாட்டிற்காக இங்கே இலக்க வரிசையில் அட்டவணையாக எமது ஆங்கிலம் தளத்தின் ஊடாக வழங்குகின்றோம்.



No:
English Terms
கலைச்சொல்லாக்கம்
1.
Academia
கல்வியுலகு

2.
Academic qualification
கல்வித் தகமை

3.
Academician
கல்விக்கழகத்தவர்

4.
Academy of music
இசைக் கல்விக்கழகம்

5.
Accelerated learning
துரித கற்கை

6.
Action maze
செய்கைப் புதிர்

7.
Active learning
செயலுறு கற்கை

8.
Activity step
செயற்பாட்டுப் படி

9.
Adaptive (adjustive) device
இசைவிப்பு உத்தி

10.
Adjunct program
உப நிகழ்வுத் திட்டம்

11.
Adolescence
வளரிளம்பருவம்

12.
Adult education
வளர்ந்தோர் கல்வி

13.
Affective domain
உளப்பாங்கு பரப்பு

14.
After-school program
பாடசாலை வேளைக்குப் பிந்திய நிகழ்வுத்திட்டம்

15.
Analysis phase
பகுப்பாய்வு கட்டம்

16.
Andragogy
வளர்ந்தோர் கல்வி

17.
Apprenticeship
பணிப்பயிற்சி

18.
Aptitude test
உளச்சார்புத் தேர்வு

19.
Assignment
ஒப்படைய்வு

20.
Attainment target
எய்தல் இலக்கு

21.
Attitude
உளப்பான்மை/ மனப்பான்மை

22.
Authoring tool
ஆக்க சாதனம்

23.
Autodidactism
தற்போதனை/ சுயபோதனை

24.
Award
விருது

25.
Basic skills
அடிப்படைத் திறன்கள்

26.
Behaviorism
நடத்தையியல்

27.
Bibliography
நூற்பட்டியல்

28.
Bilingual education
இருமொழி கல்வி

29.
Biliteracy
இருமொழி எழுத்தறிவு

30.
Blended learning
இணைப்புக் கற்கை

31.
Boarding school
விடுதிப் பாடசாலை

32.
Brain dominance
மூளை ஆதிக்கம்

33.
Branching
கிளை உத்தி

34.
Bullying
அடாது செய்தல்

35.
Case study
விடய ஆய்வு

36.
Certificate
சான்றிதழ்

37.
Certification
சான்றிதழீடு/ அத்தாட்சிப்படுத்துகை

38.
Certify
சான்றுபடுத்துகை

39.
Child care/day care
சிறார் பராமரிப்பு

40.
Chunking
கூறாக்கம்

41.
Citation for bravery
தீரச் சான்றுரை

42.
Classroom learning
வகுப்பறைக் கற்கை

43.
Clustering
கொத்தாக்கம்

44.
Coach
பயிற்றுநர்

45.
Cognitive skill
புரிகைத் திறன்

46.
Cognitivism
புரிகைக் கோட்பாடு

47.
Collaborative learning
கூடிக் கற்கை

48.
Collective task
கூட்டு முயற்சி

49.
Common learning objective
பொதுக் கற்கை நோக்கம்

50.
Competency-based instruction
தகுதியடிப்படைப் போதனை

51.
Complication
கோவையாக்கம்

52.
Computer-assisted instruction
கணனியுதவிப் போதனை

53.
Computer-based training
கணினிவழிப் பயிற்சி

54.
Concept chart
கருதுபொருட் சட்டகம்

55.
Conditioned response
நிலைமைக்குரிய பதில்வினை

56.
Constructed response
ஆக்கப் பதில்வினை

57.
Constructivism
ஆக்கக் கோட்பாடு

58.
Consultant
உசாவலர்

59.
Contextual interference
சந்தர்ப்ப தலையீடு

60.
Convocation
பட்டமளிப்பு

61.
Cooperative learning
கூட்டுக் கற்கை

62.
Correlation
இடைத்தொடர்பு

63.
Courseware
கற்கைநெறிச் சாதனம்

64.
Criterion-referenced instruction
பிரமாணம் சார்ந்த போதனை

65.
Cross-training
மேலதிக பயிற்சி

66.
Curriculum
பாடத்திட்டம்

67.
Curriculum vitae/ resume
தகைமைத் திரட்டு

68.
Day care/ child care
சிறார் பராமரிப்பு

69.
Demonstration
செய்முறைகாட்டல்

70.
Diploma
தகுதிச் சான்றிதழ்

71.
Distance learning
அஞ்சல்வழிக் கல்வி

72.
Dyslexia
எழுத்தறிவுக் குழப்பம்

73.
Early childhood education
இளம் பராயக் கல்வி

74.
Education research
கல்வி ஆராய்ச்சி

75.
E-learning
மின்னஞ்சல் வழிக் கல்வி

76.
Elementary school
தொடக்கப்பாடசாலை

77.
Exchange student
பரிமாற்ற மாணவர்

78.
Experiential education
அனுபவக் கல்வி

79.
Extended education
நீட்டிப்புக் கல்வி

80.
Extracurricular activities
பிறதுறைச் செயற்பாடுகள்

81.
Gifted education
இயற்பேற்றுக் கல்வி

82.
Graduate
பட்டதாரி

83.
Graduation
பட்டம்/ பட்டப்பேறு

84.
Grammar school
அரிவரிப் பாடசாலி

85.
Higher education
உயர் கல்வி

86.
Home-schooling
வீட்டுப் போதனை

87.
Homework
வீட்டுப்பாடம்

88.
Humanities
மானுடவியல்

89.
Junior high school
இடைநிலைப் பாடசாலை

90.
Kindergarten
பாலர் பாடசாலை

91.
Kinesthetic education
மெய்யுறு கல்வி

92.
Listening
செவிமடுப்பு

93.
Literacy
எழுத்தறிவு

94.
Middle school
இடைநிலைப் பாடசாலை

95.
Numeracy
எண்ணறிவு

96.
Nursery school
பாலர் பாடசாலை

97.
Perception
இயல்திறம்

98.
Performance
ஆற்றுகை

99.
Peripatetic teacher
தலம்பெயர் ஆசிரியர்

100.
Potentially
இயல்திறம்

101.
Pre-school education
முன்பள்ளிக் கல்வி

102.
Pre-school speech program
முன்பள்ளிப் பேச்சு நிகழ்வுத்திட்டம்

103.
Presentation
அளிக்கை

104.
Primary school
முதனிலைப் பாடசாலை

105.
Professional qualification
துறைசார் தகமை

106.
Reading disability
வாசிப்பு வலுக்குறைவு

107.
Report card
தேர்ச்சி அறிக்கை

108.
Role model
முன்மாதிரி

109.
Rote learning
பாடமாக்கி கற்றல்

110.
Sanitation
துப்பரவு

111.
School discipline
பாடசாலை ஒழுக்கம்

112.
School system
பாடசாலை முறைமை

113.
Secondary education
இடைநிலைக் கல்வி

114.
Skill development
திறன் விருத்தி

115.
Structured activities
கட்டமைப்புச் செயற்பாடுகள்

116.
Student counseling
மாணவர் மதித்துணை

117.
Supply teacher
பதிலீட்டு ஆசிரியர்

118.
Syllabus
பாடவிதானம்

119.
Teaching career
கற்பித்தல் பணி

120.
Teaching profession
கற்பித்தல் துறை

121.
Technical education
தொழில்நுட்பக் கல்வி

122.
Teen/ teenage
பதின்ம வயதினர்

123.
Tertiary education
மேல்நிலைக் கல்வி

124.
Tuition
பிரத்தியேகப் போதனை

125.
University graduate
பல்கலைக்கழகப் பட்டதாரி

126.
Vocational education
தொழிற்கல்வி

127.
Voluntary agency
தொண்டு முகாமையகம்

128.
Volunteer-teacher
தொண்டர்-ஆசிரியர்


"
இவை விழைஞரும் துறைஞரும் கருத்தில் கொள்ளத்தக்க சொற்கோவைகள் என்பது எமது துணிபு" என மாணவர்கள், படைப்பாளிகள், கட்டுரையாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள், ஊடகர்கள், கலைஞர்கள், கவிஞர்கள், சொற்கோவையாளர்கள் அனைவரையும் உள்ளத்தில் இருத்தி, கனடா தமிழ்க் கலைச்சொற்கோவை குழாமினர் கலைச்சொற்களை உருவாக்கி வருகின்றனர் என்பது மகிழ்ச்சிக்கும் பாராட்டுக்கும் உரியது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக