வெள்ளி, 18 அக்டோபர், 2013

வினாக் குறியாய்

                                              பயிற்சித்தாள்
மோனை -இடம் பெறும் இடத்தினை எடுத்து எழுதுக.
இக்கவிதைக்குப் பொருத்தமான வேறு தலைப்பினை எழுதுக.
இக்கவிதையின் கருப் பொருள் யாது?
இக்கவிதையினைப் போல் ஒரு கவிதை எழுதுக.

உயர உயர படித்தாலும் பெண்ணே!
உனக்கு இரண்டாம் இடம் தானே!
பண்பாடு கானல் நீராய் தெரிய
பட்டங்கள் பணமாய் மாற
பாசங்கள் அரிதாரம் பூசி நிற்க
பெண்ணே!
வீட்டுக்குள் மட்டும் ஒளி விளக்காய்
இருந்திருக்கலாம்!
பட்டறிவு வேண்டுமென பட்டறிஞர் பலரும்
பறை சாற்றியதால்
நான்கு முனை கண்ணாடி வாழ்க்கையில்
இன்று நீ கேள்விக்குறியாய்?
நிஜங்கள் மின்மினிப் பூச்சிகளாய்
சடுகுடு ஆட்டம் ஆட
பெண்ணே!
நீ ஏன் வெளிச்சத்திற்கு வந்தாய்?
யார் ஆளப் போகும் உலகிற்கு
மெழுகாய் உருகி நிற்கின்றாய்?
தப்பித்திருக்கலாமோ!
சிபியும் மனுவும் வாழ்ந்த காலத்தில்
நீ படித்திருந்தால் ஒரு வேளை
வினாக் குறியாய் மாறாமல்
ஆச்சரியக் குறியாய் இருந்திருப்பாயோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக