இன்றைய ஆசிரியர்களின் கடமை-லட்சுமி.பி.ஆர்
வகுப்பறை என்பது புனிதமானது.நம் வீடுபோல் வகுப்பறையையும் கவனிக்கவேண்டும்.
குழந்தைகளை நம் குழந்தைகளாகக் கற்றுத்தரும் மனப்பக்குவம் வளரவேண்டும்.
சக ஆசிரியரிடத்தில் பொறாமை கூடாது.மாணவன் உங்களைப் பார்த்தே பாடம் கற்கிறான்.
மாணவர்களிடையே வேறுபடுத்திப்பேசுதல் தவறு.பணிக்குச் செல்லும் பெற்றோரின் குழந்தைகளிடையே அதிக கவனம் தேவை.பேசுவதற்கு நேரமில்லை என மாணவரிடம் வெறும் பாடத்தை மட்டும் கற்பிக்காதீர்கள்.
கல்வி வேறு, சமூகத்தில் வாழும் வாழ்க்கை வேறு என அவர்களுக்குக் காட்டாதீர்கள்.இரண்டும் ஒன்று என போதியு்ங்கள்.
படிப்பதைத்தான் வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டும் என வலியுறுத்துங்கள்.
பிறக்கும்போதே குழந்தைகள் அறிவுடன் பிறப்பதில்லை. வாழும் இருப்பிடம்,கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் ,சமூகத்தில் அவர்கள் பார்க்கும் நிலை இவற்றைப்பார்த்தே மாணவர்கள் கற்றுக் கொள்கின்றனர்.
மேலைநாட்டுப்பொருள் வாங்குவதைப்போல் மேலைநாட்டுக்கலாசாரத்தையும் மாணவர்கள் கற்றுக்கொடு்க்கின்றனர்.இன்றைய மீடியாக்களும் அதனை ஆதரிக்கின்றனர்(அவர்கள் பிழைப்புக்காக).இதனால் மாணவரகளிடையே தீவிரவாதம்,அடிபணியாமை, பெரியோர்களை மதிக்காதிருத்தல் ,எதனைக் கொடுத்தால் நமக்கு உழைக்காமலேயே அது கிடைக்கும், யாரைப் பிடித்தால் நமக்குக் காரியம் முடியும் என்பதில் உறுதியாக உள்ளனர்.காரணம் அவர்களல்ல.
சமூகமும்,அதில் திருந்தி வாழாத ஆசிரிய சமுதாயமும் தான்.பெற்றோரும்,அவர்கள் செய்யும் சிறு தவறையும் கண்டிப்பது கிடையாது. ஆசிரியரைக் குறை கூறி தனது குழந்தைகளுக்கு வாழ்வை இருட்டாக்கும் பெற்றோரும் தனது குழந்தை செய்யும் சிறு தவறான செயலையும் ஆசிரியரிடம் கலந்தாலோசிக்கவேண்டும்.
மாணவர்கள் வீட்டில் காட்டும் முகத்தை(அகத்தை)பள்ளியில் காட்டுவானென்ற உத்தரவாதம் கிடையாது. அதனால் ஆசிரியரும்,பெற்றோரும் இணைந்து மாணவனுக்குக் கற்றுக் கொடுத்தால்
காந்தி காண விரும்பிய வளமையான பாரதம் உருவாகும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக