சனி, 16 ஆகஸ்ட், 2014

மழலைக்கல்வி-தமிழ் இணையப் பல்கலைக்கழகம்வாயிலாகத் தமிழ் கற்பித்தல் ஓர் ஆய்வு



மழலைக்கல்வி-தமிழ் இணையப் பல்கலைக்கழகம்வாயிலாகத் தமிழ் கற்பித்தல் ஓர் ஆய்வு


முனைவர்  புலவர். பி.ஆர். இலட்சுமி,பி,லிட்.,எம்.ஏ.,எம்.ஏ.,எம்ஃபில்.,
சென்னை-33.


"அருங்காட்சியகத்தில் இறந்த பொருட்களை வைத்திருப்பது போலக் குழந்தைகளை வகுப்பறையில் உட்கார வைத்துப் பூக்களின் மேல் புயல் வீசுவது போலப் பாடங்களைக் குழந்தைகளின் மேல் திணிப்பது தவிர்க்கப்படுதல் வேண்டும்."
                                                                                                           -
இரவீந்திரநாத் தாகூர்.


தமிழ்மொழி கற்பித்தலில் உச்சரிக்கக் கற்பித்தலும், வரி வடிவத்தைப் பிழையற எழுதக் கற்பித்தலும் முக்கிய இடம் பெறுகின்றன.மேலும் தமிழ்மொழி கற்பித்தலில் கேட்டல்,பேசுதல்,படித்தல், எழுதுதல் திறன்கள் முக்கிய பங்கினை வகிக்கின்றன.இந்நால்வகைத்திறன்களில் கேட்டல்,பேசுதல் திறனில் காது,வாய்,மூளை போன்ற உறுப்புகள்  செயலாற்றுகின்றன. இத்திறன்களில் மாணவர்கள் எளிமையாகக் கற்கின்றனர்.படித்தல்,எழுதுதல் திறனில் கண்,கை,வாய்,மூளை இவை அனைத்தும் ஒருங்கிணைந்து
செயல்படவேண்டியிருக்கும்.இதனால் எழுத்துகளின் வரிவடிவங்களைக் கற்க வேண்டிய அச்ச உணர்வு ஏற்பட்டுத் தமிழ் மொழியினை விலக்கும் நிலை உருவாகியுள்ளது.வகுப்பறையில் தமிழ் இணையப் பல்கலைக்கழகம் வாயிலாக மழலைக்கல்வியினை எளிதாகக் கற்பிக்கும் முறைதனை விளக்குவது
இவ்வாய்வுக்கட்டுரையின் நோக்கம்.


புலம் பெயர்ந்தும்,பணியின் காரணமாகப் பன்னாடுகளில் வாழும் தமிழர் யாவரும் தமிழ் கற்க, பட்டம் பெற,தமிழ்ப்பண்பாட்டை அறிந்துகொள்ளத் துணைசெய்யும் நோக்கில் அமைக்கப்பட்ட தமிழ் இணையப் பல்கலைக்கழகம் ஏறத்தாழ 17 நாடுகளில் ஒருங்கிணைப்பு மையங்கள் நிறுவி பல்லூடகங்களின் துணை கொண்டு இணையவழித்தமிழ்க்கல்வியை வழங்குகிறது. கல்வித்துறையில் கணினி வழியில் மொழி கற்பித்தலைத் தகவல் தொடர்புத்தொழில்நுட்பத்துடன் இணைத்துத்தமிழுக்கெனத் தனி ஒரு உலகத்தை உருவாக்கியுள்ளது என்றால் அது மிகையாகாது.கற்பித்தலில் புதுமையைத் திட்டமிட்டுப் பாடப்பொருள் வழி கணினிக்கல்வி அளிப்பதன் வாயிலாக மாணவர்களின் கற்றல் நிலை மேம்பட வழியுண்டு.

காலமாற்றத்திற்கேற்பவும்,வளர்ந்து வரும் நவீனத் தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்பவும் கல்வி  முறையில் புதுமையாக்கத்தை மேற்கொண்டால் பண்பிலும்,அறிவிலும் சிறந்த வருங்காலத் தலைமுறையினரை உருவாக்க இயலும்.விதிமுறைகளை உருவாக்குவது முக்கியமல்ல.எப்படி அவ்விதி
முறைகளைச் சிந்தித்துச் செயலாற்றுகிறோம் என்பதனை மனதில் கொண்டு கற்பித்தலின் சிறப்பு முறைகளான
- படி நிலைகளாகப்பிரித்தல்
- வடிவமைப்பு முறை
- தூண்டல் முறை
- குறிப்பு முறை ---உடல்வழி
                                      ---வாய்மொழி
- வரிசை முறை
போன்ற உத்திகளைப் பின்பற்ற வேண்டும்.

கருத்து வளர்ச்சியடையக் கற்பிக்கும் படிநிலைகளைத் தமிழ்இணையவழிக்கல்வி
பொருத்துதல்
அடையாளம் காட்டுதல்
பெயர்கூறுதல்
காட்சிப்படுத்துதல்
போன்றவற்றின் மூலம் தெளிவாக்கியுள்ளது.

பிற மொழிப்பாடங்கள் உலகில் பிழைக்கக் கற்றுக் கொடுக்கின்றன.தமிழ் மொழி மட்டுமே சிந்திக்கவும்,வாழவும் கற்றுக் கொடுக்கிறது.கற்றலின் நோக்கங்கள் அறிவைப்பெறுவதற்காகக்கற்றல்,செயல்புரியக்கற்றல்,
கூட்டாக வாழக்கற்றல், சுயம்இழக்காமல் இருக்கக் கற்றல் போன்றவையாகும்.இதற்கு வழிகாட்டியாகத் தமிழ் இணையக்கல்வி வலைதளமான (http://www.tamilvu.org/courses/primer/bpooooo/.htm.)
இல் அமைந்துள்ள மழலைக்கல்வி முறையினைப் பயன்படுத்தலாம்.

"எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்" என்ற சான்றோர் கருத்தின்படி தமிழ்
இணையப்பல்கலைக்கழகம்  சிறப்பாகச் செயலாற்றி வருகிறது.அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு வெளிநாடுகளில் தமிழ்மொழி இணையப்பல்கலைக்கழகம் வாயிலாகக் கற்பிக்கப்படுகிறது. நால்வகைத் திறன்களை வளர்க்கும் விதமாக
1-- பாடல்கள் -- 12 பாடல்கள்(பயிற்சிகளுடன்)
2-- கதைகள் --- 4 கதைகள்(நீதிக்கருத்துகளுடன்)
3-- கதைகள் -- 4 கதைகள்(நீதிக்கருத்து மற்றும் பயிற்சிகளுடன்)
4--- உரையாடல் -- 7 தலைப்புகள்(பயனுள்ள நடைமுறைக்கருத்துகள்)
5--- வழக்குச்சொற்கள் -- 10 பாடல்கள்(வாழும் உலகியற்    பொருட்கள்,மரபுச்சொற்கள்)
6---- நிகழ்ச்சிகள் --- 9 பாடங்கள்(காலங்கள்)
7---- எண்கள் ---- 9 பாடங்கள்(பயிற்சி,பாடம்,பாடல்கள்)
8----எழுத்து ----- 14பாடங்கள்(ஓரெழுத்து முதல் ஐந்தெழுத்துச்சொல் வரை அறிதல், பாடல்கள்)

பாடம், பயிற்சி என வகுக்கப்பட்டு அசைவூட்டப்பட்ட வரைபடங்களுடன் தெளிவாகவும், சிறந்த ஒளியமைப்புடனும் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கற்றல்திறன் சிறப்பாக அமையும்.


பாடல்கள் வரிசையில் 'காக்கைப்பாடல்','ஆத்திசூடி' இரண்டு முறை இடம்பெற்றுள்ளன.
தமிழுக்கு உரிய சிறப்பு ஒலி எழுத்துகள்-ல,,,,,,,
ஒரே மாதிரித்தோற்றமளிக்கும் எழுத்துகள்-அ,,,,ஒள
ஒன்று போல அமையும் எழுத்துகள்-எ,ஏ மற்றும் ,
இரு வரிவடிவ எழுத்துகள்-கெ,கே,கை
மூன்று வடிவ எழுத்துகள்-கொ,கோ, கெள
துணை எழுத்துகள் இணைத்து எழுதும் எழுத்துகள்-கா,கை
கீழ் வளைவு-பு,பூ
மேல் வளைவு-மி,மீ
கீழ்விலங்கு-கு,கூ
மேல்விலங்கு--கெ,கொ,கே,கோ
அழுத்தம் கொடுத்து உச்சரிக்க வேண்டியவை-ச,,,
எளிய முறையில் உச்சரிக்க வேண்டியவை--ன,,
நாவை வளைத்து உச்சரிக்க வேண்டியவை-ழ
பழக்கத்தில் கற்றுக் கொள்ள வேண்டியவை-ங,
மேற்கண்ட செய்திகள் அனைத்தையும் இணைத்து மழலைக்கல்வியில் இணைத்துக் கற்பிக்கலாம்.

'பள்ளி' என்ற தலைப்பில் படத்தைச் சுட்டிப் பொருத்தமான எழுத்தை நிறைவு செய்யும் பகுதியும், எழுத்தைக்கூட்டி ஒலிக்கும் முறையும் (http://www.tamilunltd.com/swfs/mainpage.html)
வலைதளத்தில் சிறப்பாக அமைக்கப்பட்டுள்ளது. (http://www.kidsone.in/tamil/)
என்ற வலைதளத்தில் மெய்யெழுத்துகள் எழுதும் முறைகளும்,பயிற்சித்தாள் அமைக்கப்பட்டுள்ள விதமும் சிறப்பானது.இவ்வாறு பிற வலைதளங்களில் உள்ள சிறப்பான பாடங்களைப் பயன்படுத்தலாம்.
(www.tamilvu.org/courses/beginner/main.htm.) என்ற இணையதளத்தில்
- மெய்யெழுத்து அறிமுகப் பாடல்(அக்காள் வீட்டுத்தோட்டம் )
- இன எழுத்துப்பாடல்(எங்கள் அம்மா இனியவள்)
- னகர,ணகர வேறுபாடு அறியும் பாடல்(மன்னன் நல்ல மன்னன்)
- உயிரெழுத்து அறிமுகப்பாடல்(அன்பே கடவுள் அறிவாய் பாப்பா)

முதலியவை சிறப்பானவை.
(www.tamilvu.org/courses/beginner/main.htm.)என்ற இணையதளத்தில் அமைந்துள்ள
எழுத்துகளை எழுதும் பயிற்சிகள் போன்றவற்றை மழலைக்கல்வியில் இணைத்துக் கற்றுக்கொடுக்கலாம்.

(http:/www.tamilvu.org/courses/primer/bpooooo/.htm.)
என்ற வலைதளத்தில் 'அணிலும் ஆடும்' பாடலில் 'ணி' என்ற எழுத்து தவறாகக் குறிக்கப்பட்டுள்ளது. அசைவூட்டப்பட்ட வரைகலைப்படங்களை இன்னமும் தெளிவாக அமைத்தால் சிறப்பாக இருக்கும்.

பழங்காலப் பயிற்சிமுறை இன்றைய மாணவர்களுக்கு நடைமுறைப் பயன்பாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும் பொழுது புதிய கருத்தாக்கங்கள் தோன்றுவது இயல்பு.இவ்வாறு தமிழ்இணையப் பல்கலைக்கழகம் பாடத்திட்டம், பயிற்றுமுறை,மதிப்பீடு என யாவற்றிலும் தமிழ் கற்பித்தலைச்
சிறப்பாக்கியுள்ளது."உன் ஆசிரியர் என்ன படித்திருக்கிறார்?எனக் கேட்பதை விட உன் ஆசிரியர் என்ன படித்துக்கொண்டிருக்கிறார்?" என்ற கல்வியாளரின் சிந்தனை ஒவ்வொரு ஆசிரியரிடமும் இன்றைய நாளில் எதிர்பார்க்கக்கூடிய ஒன்று. இதன்மூலம் நடைமுறை மாற்றப் புதிய கல்விக்கோட்பாடுகளைப்
புகுத்தமுடியும்.

















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக