ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

கண்டுபிடி



தண்ணீரில் நானும் வாழ்ந்திடுவேன்
மனதின் நிறமும் வெள்ளை தான்!
என் பெயர் என்ன?
-----------------------------------கண்டுபிடி?
அம்மாவுடன் சென்றிடுவோம்!
ஆனந்தமாகக் குளித்திடுவோம்!
சல சல வென்ற சத்தத்துடன்
சொய் சொய் என்றே
நாம் நீந்தி இங்கே
மகிழ்கின்றோம்.



பந்தே பந்தே ஓடி வா
பறந்து இங்கே வந்திடுவாய்!
பறந்து இங்கே வந்திடுவாய்!
பள்ளியில் நாங்கள் விளையாட வந்திடுவாய்.
என்னை வீட்டில் வைத்திடுவார்
வாலை நானும் நன்றாய் ஆட்டிடுவேன்
நன்றியுடன் நான் வாழ்ந்திடுவேன்
நான் யார் தெரியுமா?

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக