ஞாயிறு, 17 ஆகஸ்ட், 2014

காலையில் நான் எழுந்திடுவேன்



  • காலையில் நான் எழுந்திடுவேன்
மாலையில் நானும் மறைந்திடுவேன்
தாமரைப்பூவின் தோழன் நான்
நான் யார் என்று சொல்வாயே!
எந்தத் திசையில் நான் உதிப்பேன்?
எந்தத் திசையில் நான் மறைவேன்
சொல்லியே நாமும் சிரிப்போமே
கல்வி கற்று மகிழ்வாமே!
மல்லிகைப்பூவே மல்லிகைப்பூவே
ஏன் மலர்ந்தாய்?
தாமரை அக்கா வந்தாள்
என நான் மலர்ந்தேன்
தாமரைப்பூவே தாமரைப்பூவே
ஏன் வந்தாய்?
அரளியுடன் விளையாட
நான் வந்தேன்.
அரளி அரளி ஏன்
வந்தாய்?
அண்ணல் காந்திக்காக
நான் வந்தேன்.
நான்குகால் வண்டினமும்
நாட்டியமாடி நடந்தன
காட்டில் ஒரு பெருவிழா
காலாட்டி நடந்தன
குயிலும் அங்கு கூடியே கூட்டமாக நடந்தன
கூடிக்கூடிப் பேசியே
கும்மாளம்தான் அடிக்குது!
                                      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக