வெள்ளி, 13 மார்ச், 2015

ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்- விவேகானந்தர் அறிவுரை

                                            ஆசிரியர்களுக்கும்,பெற்றோர்களுக்கும்- விவேகானந்தர் அறிவுரை
 நாம் பெரிய மனிதர்கள் என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டிருக்கிறோம். ஆனால், ஒருநாள் அனைவரும் உலகத்தை விட்டே செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள். அப்போது மக்கள் நம்மை மறந்து விட்டு, அவரவர் பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பர். 
* கடவுள் என்றும் நிரந்தரமானவர். அவருக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. எல்லா ஆற்றலும் அவருடையதே. எப்போதும் செயல்பட்டுக் கொண்டிருக்கும் அவரின் அதிகாரத்தின் கீழே உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.

* கடவுளின் கட்டளைப்படியே இயற்கை இயங்குகிறது. எல்லாம் வல்ல கடவுளை நம்மால் வழிபட மட்டுமே முடியும். செயல்களின் பலனை அவரிடம் ஒப்படைத்துவிட்டு பற்றில்லாமல் கடமையில் ஈடுபடுங்கள்.

* மக்கள் வணங்கும் எல்லா வடிவங்களிலும் ஒரே கடவுளே வீற்றிருக்கிறார். இதை உணர்ந்து கொண்டால் நம்முள் வேற்றுமை மறைந்துவிடும். 

-
கைம்மாறு கருதாமல் பிறருக்கு உதவுபவனே உயர்ந்த மனிதன்.
* ஆன்மிகத்தில் நாட்டம் வைத்தால் உண்மையான இன்பத்தை அடையலாம்.

* உண்மையைப் பின்பற்றுபவர்கள் யாரிடமும் பயப்படத்தேவையில்லை.

* மனத்தூய்மை இருக்குமானால், இந்தப் பிறவியிலேயே கடவுளை அடைய முடியும்.

* ஒவ்வொருவரிடமும் எல்லையற்ற சக்தியும், தூய்மையும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கிறது.

* நீங்கள் எதை நம்புகிறீர்களோ, அதுவாகவே மாறி விடுவீர்கள்.

-
 மனதில் பலம் நிறைந்திருந்தால், உங்களின் விதியை நீங்களே வகுத்துக் கொள்ள முடியும்.
* பிறருக்கு கொடுத்து உதவுங்கள். உதவி பெறுபவரைக் கடவுளாகவே மதியுங்கள்.

* யார் வேண்டுமானாலும் தலைவனாக செயல்படலாம். ஆனால், நல்ல தொண்டனாக இருப்பது கடினம்.

* மகத்தான செயல் எதுவும் கடின உழைப்பு இல்லாமல் சாதிக்க முடிவதில்லை.

* வெற்றியில் விருப்பம் இருக்குமானால், ஆணவத்தை முதலில் ஒழித்து விடுங்கள்.

* மனத்துாய்மை மிக்கவர்கள் இந்த பிறவியிலேயே கடவுளைக் காண்பது உறுதி.


* நீங்கள் பொறுமைசாலியாக இருந்தால் உலகமே உங்களின் காலடியில் பணியும்.
* உலகிற்கு நன்மை செய்து வாழ்வதே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

* கீழ்ப்படிய முதலில் கற்றுக் கொள்ளுங்கள். கட்டளையிடும் அதிகாரம் தானாகவே கிடைக்கும்.

* வெற்றியோ, தோல்வியோ விருப்புடன் ஏற்றுக் கொள்வதே அறிவுடைமை. தோல்வியைக் கண்டு யாரும் துவளத் தேவையில்லை.

* வேடதாரியாக இருக்க வேண்டாம். உண்மை எங்கு இழுத்துச் சென்றாலும் துணிந்து செல்லுங்கள்.

-
உலகம் ஏளனம் செய்வதைப் பொருட்படுத்த வேண்டாம். உன் கடமைகளைச் செய்து கொண்டே இரு.
* வலிமை, தன்னம்பிக்கை, பெருமை இந்த மூன்றும் என்றென்றும் நமக்குச் சொந்தமானது. 

* தன்னைத் தானே முழுமையாக நம்புவது தான், ஆன்மிகத்தின் அடிப்படை ரகசியம். 

 எல்லாத் தீமையையும் எதிர்த்து நின்று போரிடு. தொண்டு செய்து வாழ்வதே மகிழ்ச்சியானது. 
* சுயநலமில்லாமல் எந்நேரமும் பற்றின்றி பணியாற்றுவதே கர்மயோகம்.

* இன்பம் மட்டுமே குறிக்கோள் அல்ல. ஞானம் ஒன்றே வாழ்வின் உயர்ந்த லட்சியம். 

* உதவி செய். ஒருபோதும் சண்டையிடாதே. ஒற்றுமைக்கு வழிகாட்டு. யாரையும் அழிக்க நினைக்காதே. 

* ஆற்றலும், துாய்மையும், பூரணத்தன்மையும் உன்னிடத்திலே நிறைந்திருக்கிறது. 

-
* ஒவ்வொரு மனிதனையும் அவரவருடைய தகுதிக்கேற்ப மதிப்பிட வேண்டும். 

* மனிதன் தாழ்ந்த உண்மையில் இருந்து உயர்ந்த உண்மைக்கு பயணம் செய்து கொண்டிருக்கிறான்.
நன்றி-தினமலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக