பெற்றோர் கவனம்
ஆசிரியர் மட்டும் இன்றளவில் மாணவர்களிடம் கவனம் செலுத்த இயலாது.
காரணம் அவர்கள் பள்ளி,கல்லூரி இவற்றில் எட்டுமணிநேரம் மட்டுமே இருக்கின்றனர்.மீதி எட்டுமணி
நேரம் பெற்றோருடன் செலவிடுகின்றனர்.பெரும்பாலான பெற்றோர் ஆண்குழந்தை உயர்வு பாராட்டி
வளர்க்கின்றனர்.பெண்குழந்தைக்குப் போதுமான கல்வி இவற்றை அளிப்பதில்லை.திருமணம் போன்ற
வாழ்க்கை நிலைகளில்கூட அவர்களது கருத்தினைக் கேட்பது கிடையாது. ஆணைப்போற்றிப்பாடும்
வாய் பெண் குழந்தையைக் கூறுவது கிடையாது.ஆசிரியரிடமே அந்தக் குழந்தை கண்ணீர்மல்க நின்று
கேட்கும்போது அந்த ஆசிரியர் என்ன பதில்கூற முடியும்? சமூகம் அவ்வாறு இருக்கிறதம்மா
எனக் கூறவா முடியும்?
அப்பொழுது ஆணுக்குச் சமமாக மதிப்பெண் பெற வேண்டும் என்ற வினா
அவர்கள் மத்தியில் எழும்போது என்ன நிலை உருவாகும்?
பெண் குழந்தைகளைப் பெற்றோர் பேணிக் காப்பாற்றவேண்டும்.அதற்கேற்ற
இடத்தில் திருமணம் செய்து தரவேண்டும்.ஆணுக்கொரு நீதி,பெண்ணுக்கொரு நீதி என்பது பணத்தளவில்
மட்டுமல்ல,வீட்டின் ஒவ்வொரு நடவடிக்கையிலும் பெற்றோர் கடைபிடிக்கவேண்டும்.
பெரும்பாலான கிராமங்களில் அடித்தட்டு மக்கள் தனது சாதி,மதம்
கருதிப் பெண்ணிற்கு உயர் கல்வி அளிக்க மறுத்துவிடுகின்றனர்.
ஆனால் ஆண்மக்களோ அதைத் தனக்கு சாதகமாகப் பயன்படுத்தி பெண்கல்வி
மறுப்பு, திருமணம் செய்துகொண்டபின் பெண்ணைஅடிமைப்படுத்துதல் போன்ற தரக்குறைவான செயல்களில்
ஈடுபடுத்துகின்றனர்.
பெண் திருமணமாகி புது சூழ்நிலைக்குச் செல்லும்போது அவளுக்குத் தேவையான பொருளினைக்கூடத் தராது நகை,சீர் எனக்கொடுத்து அனுப்புவது அந்தப் பெண்ணைக் கேவலப்படுத்துவது போன்றதாகும்.இதைக்கூடப் பெற்றோர் சரிவரச் செய்வதில்லை.அங்கு செல்லும்போது பெண் பலவிதங்களில் புது இடத்திற்குத் தகுந்தபடி தன்னை மாற்றிக்கொள்ள சிரமப்படுகிறாள்.படித்த பெண்களுக்கும் இன்று அதே நிலைதான் உள்ளது.இதையெல்லாம் தனது சுற்றுப் புறங்களில் வாழும் மாணவர்கள் பார்த்தபின் தனக்குப் பிடித்தவர்களைத் திருமணம் செய்து கொள்கின்றனர். பெரும்பாலான இந்த நிலை அமைய ஆசிரியர்களே காரணமாகின்றனர்.ஆசிரியர்கள் வெறும் பாடத்தினை மட்டும் போதிக்கின்றனர்.அக்கல்வியை வாழ்க்கைப்பாடத்தினோடு ஒப்பிட்டு நடத்தும்போதுதான் வாழ்க்கை வெற்றிபெறுகிறது. அத்தகைய கல்விதான் இன்றைய மாணவர்களுக்குத்தேவை தமிழ்ப்பாடத்திட்டக்கல்வி அத்தகைய திறனுடன்தான் அமைக்கப்பட்டுள்ளது.இன்றைய காலத்தில் மாணவர்களிடம் மட்டுமல்ல,இளைஞர்களிடம்கூட இந்த மொபைல் வைத்துப் பார்க்கும் வழக்கம் காணப்படுகிறது. காரணம் தேவையில்லாத பேச்சு,செயல்,அடுத்தவரைத் தாண்டிச் சென்று வன்முறையாகச் செயல்படுதல் என எல்லா இடங்களிலும் மனிதநேயமற்ற செயல்கள் நடந்தேறிவருகின்றன.சகோதர,சகோதரி பாசங்களும் வெறும் பணத்தளவிலும்,அவரவர் குழந்தைகள் முன்னேறவேண்டிய அளவிலும் இருப்பதால் இதைப் பார்க்கும் மாணவச் செல்வங்களும் அதையே பின்பற்றி வாழ்கின்றனர். வெறும் பணமும்,பகட்டும் மட்மே வாழ்வின் பொருளாகிவிடாது என்பதை ஆசிரியர் சமூகம் உணர்த்தவேண்டும்.சமன்செய்து சீர்தூக்கும்கோல்போல எனபெற்றோர் நின்று வாழ கற்றுக்கொடுக்கவேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக