வியாழன், 16 பிப்ரவரி, 2012

worksheet-

பொருத்தமான சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.(கா கா,கூ கூ) காக்கை எப்படிக் கரையும்? காக்கை ‘-------‘ என்று கரையும். குயில் எப்படிக் கூவும்? குயில் ‘-------‘என்று கூவும் கேட்டல் திறன் பாடல் தாகம் கொண்ட காகம் ஒன்று எட்டி எட்டி பார்த்தது! எங்கும் அதற்கு தண்ணீர் தான் கொஞ்சம் கூட இல்லையே! தேடித் தேடிப் பார்த்த காகம் தோட்டத்தினில் நடுவினுள் சாடியில் நீரைக் கண்டது. எட்டி எட்டிப் பார்த்த காகம் ஏமாந்து போனதே! எட்டாத தூரத்தில் தண்ணீரும் இருக்குதே? யோசித்துப் பார்த்த காக்கையும் ஒய்யாரமாய் கழுத்தை கொஞ்சம் சாய்க்கையில் கற்களைத்தான் கண்டதே! கற்குவியலைக் கண்டதும் ஞானம் அதற்குப் பிறந்ததே! கல்லை எடுத்து சாடிக்குள் போட தண்ணீரும் தான் கிடைத்தது. தாத்தாவுடன் காகமும் விளையாடத்தான் சென்றது. ர.ற வேறுபாடு அறிந்து எழுத்தினைக் கோடிட்ட இடத்தில் நிரப்புக. 1.பட்டுபோல புல் த-(ரை,றை) யில் பட- (ர்,ற்) ந்திருக்கும். 2.வண்ண மல-(ர்,ற்)களால் தோட்டம் அழகு பெறும். ன,ண,ந வேறுபாடு அறிக. 1.வ-(ண்,ன்)ண மலர்கள் எ-ண,ன)க்குப் பிடிக்கும். 2. தோட்டம் –(ந,ன)ல்ல தோட்டம் 3.தி-(ன்,ண்)னப் பழம் கொடுக்கும் மரங்களை அ-(னை,ணை)வரும் வளர்ப்போம். குயிலின் இசை நி-(னை,ணை)கும் போது இன்பம்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக