விதிகள்
|
மிகுமா?
|
உதாரணம்
|
நிலை மொழியின் ஈற்றில் உயிரும் வரும்
மொழியில் கசதப வந்தால்
|
ஆம்
|
|
ஓரெழுத்து ஒரு மொழி முன் மிகும்.
|
ஆம்
|
பூப் பறித்தான், கைக் குழந்தை
|
அகர,
இகர ஈற்று வினையெச்சம் முன்
|
ஆம்
|
வரச் சொன்னான், ஓடிப் போனான்
|
நிலைமொழியில் உயர்திணை
|
இல்லை
|
திரு கண்ணன், சிவ பெருமான்
|
இருபெயரொட்டுப் பண்புத் தொகை
|
ஆம்
|
தைத் திங்கள், வட்டக் கல், கோடைக்காலம், முருகக்கடவுள்
|
பண்புத் தொகை
|
ஆம்
|
வெள்ளைத் தாமரை, மெய்ப்பொருள், பசுமைத் தாயகம்
|
வினைத் தொகை
|
இல்லை
|
காய்கதிர்,பழமுதிர்சோலை
|
உம்மைத் தொகை
|
இல்லை
|
கபில பரணர்
|
உவமைத் தொகை
|
ஆம்
|
முத்துப்பல், கமலச் செங்கண்
|
உவமை விரி
|
இல்லை
|
முத்து போன்ற பல்,முத்தைப் போன்ற பல்
|
உருபும், பயனும் உடன் தொக்க
தொகை
|
ஆம்
|
தமிழ்ப் பேச்சு
|
ஊர்ப் பெயர்களின் அடுத்து
|
ஆம்
|
திருவாரூர்த் தமிழ்ச்சங்கம்
|
எழுவாய் தொடர்
|
இல்லை
|
சாத்தன் வந்தான்
|
அடுக்குத் தொடர்
|
இல்லை
|
பாம்பு பாம்பு
|
விளித் தொடர்
|
இல்லை
|
சாத்தவா
|
தொரிநிலை வினைமுற்றுத் தொடர்
|
இல்லை
|
வந்தான் சாத்தன்
|
குறிப்பு வினைமுற்றுத்தொடர்
|
இல்லை
|
பொன்னனிவன்
|
பெயரெச்சம்
|
இல்லை
|
வந்த பையன், பறந்த புறா
|
எதிர்மறைப் பெயரெச்சத்தில்
|
இல்லை
|
வாடாத பூ, ஓடாத குதிரை
|
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சம்
|
ஆம்
|
அறியாப் பிள்ளை, தீராத் துன்பம், ஓடாக் குதிரை, பாடாத் தேனீ
|
நெடிற்றொடர்,ஆய்தத்தொடர்,உயிர்த்தொடர்,இடை/மென்தொடர்க்
குற்றியலுகர வினையெச்சம்
|
இல்லை
|
வந்து போனான்
|
வன்றொடர்க் குற்றியலுகர வினையெச்சம்
|
ஆம்
|
போட்டுக் கொடுத்தார்
|
இடைச்சொற்றொடர்
|
இல்லை
|
மற்றொன்று
|
உரிச்சொற்றொடர்
|
இல்லை
|
நனிபேதை
|
இரட்டைக் கிளவி
|
இல்லை
|
தடதட
|
எட்டாம் வேற்றுமை
|
இல்லை
|
தலைவா கொடும், நாடே தாழாதே
|
ஏழாம் வேற்றுமை விரி
|
இல்லை
|
தரையில் படுத்தான்
|
ஏழாம் வேற்றுமைத் தொகை
|
இல்லை
|
தரை படுத்தான்
|
7 உருபும் பயனும் உடன்தொக்க தொகை
|
ஆம்
|
நீர்ப்பாம்பு
|
ஆறாம் வேற்றுமை விரி
|
இல்லை
|
கண்ணனது கை
|
ஆறாம் வேற்றுமைத் தொகை
|
ஆம்
|
புலமைச் சிறப்பு, கிளிக்கூண்டு,வாழைத்தண்டு,தேர்ச்சக்கரம்,காளி கோயில்
|
6 உருபும் பயனும் உடன்தொக்க தொகை
|
-
|
-
|
ஐந்தாம் வேற்றுமை விரி
|
இல்லை
|
மதுரையின் வடக்கே
|
ஐந்தாம் வேற்றுமைத் தொகை
|
இல்லை
|
தமிழ் பேசு, ஊர் நீங்கினான்
|
5 உருபும் பயனும் உடன்தொக்க தொகை
|
ஆம்
|
வாய்ப்பாட்டு, கனிச்சாறு
|
நான்காம் வேற்றுமை விரியின் பின்
|
ஆம்
|
கடைக்குப் போனான்,தந்தைக்குக் கடமை
|
நான்காம் வேற்றுமைத் தொகை
|
ஆம்
|
வேலிக் கம்பி,பொன்னி கணவன்
|
4 உருபும் பயனும் உடன்தொக்க தொகை
|
ஆம்
|
குழந்தைப் பால், கூலிப்படை, தக்கோர் சால்பு
|
மூன்றாம் வேற்றுமை விரியின் பின்
|
இல்லை
|
தந்தையோடு சென்றான்
|
மூன்றாம் வேற்றுமைத் தொகை
|
இல்லை
|
கை தட்டினான்
|
3 உருபும் பயனும் உடன்தொக்க தொகை
|
ஆம்
|
வெள்ளித் தட்டு
|
இரண்டாம் வேற்றுமை விரியின் பின்
|
ஆம்
|
பூனையைப் பார்த்தான்
|
இரண்டாம் வேற்றுமைத் தொகை
|
இல்லை
|
நீர் குடித்தான்
|
2 உருபும் பயனும் உடன்தொக்க தொகை
|
ஆம்
|
நீர்க்குடம்
|
முதலாம் வேற்றுமை என்னும் எழுவாய்
வேற்றுமை
|
இல்லை
|
கூனி கொடுத்தாள், வள்ளி சென்றாள், தாய்
காப்பாற்றுவாள்
|
வன்தொடர்க் குற்றுகரம்
|
ஆம்
|
ட்டு,ற்று...
|
திரு,
நடு,
முழு,
பொது
|
ஆம்
|
திருக்கோவில், நடுத்தெரு, முழுப்பேச்சு, பொதுப்பணி
|
நிலை மொழியில் மகரம் கெட்டால்
|
ஆம்
|
இணையத் தமிழ், அந்நியச் செலாவணி, படத் தொகுப்பு
|
தொல்காப்பிய/நன்னூல் இலக்கண விதிகள்
கவிக்கோ.ஞானச்செல்வன் அவர்களின் பிழையின்றித் தமிழ் பேசுவோம், எழுதுவோம்! என்ற தொகுப்பு
நன்று
பதிலளிநீக்கு