புதன், 6 மார்ச், 2013

பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்


பதினெண் கீழ்க்கணக்கு நூல்கள்
நான்கு அடிகளைக் கொண்ட வெண்பாவால் இயற்றப் பட்டதால் நாலடியார் எனப்பட்டது. இந்நூல் சமண முனிவர் நானூறு பேரால் பாடப்பட்டது. திருக்குறளைப் போலவே நாலடியாரும் அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் மூன்று பகுப்பாக உள்ளது. பதினெண் கீழ்க்கணக்கு (Pathinen Kezhkanakku)

http://www.tamilkalanjiyam.com/literatures/images/kizhkanakku.jpg

சங்கம் மருவிய காலத்தில் தோன்றிய நூல்கள் பதினெண் கீழ்கணக்கு என்னும் பெயர் பெற்றன.இவை மொத்தம் பதினெட்டு நூல்களாகும்.















பதினெண் கீழ்க்கணக்கு நூல்களைக் கீழ்வரும் பாடல் மூலமாக அறிந்து கொள்ளலாம்.
நாலடி நான்மணி நால்நாற்பது ஐந்திணைமுப்
பால்கடுகம் கோவை பழமொழி - மாமூலம்
இன்னிலைய காஞ்சியுடன் ஏலாதி என்பவே
கைந்நிலைய வாம்கீழ்க் கணக்கு.


இந்த பதினெண் கீழ்கணக்கு நூல்களை மூன்று வகையாகப் பிரித்துக்கொள்ளலாம்.

1.
அற நூல்கள்:

காதலுக்கும்,வீரத்திற்கும் அற நெறிகளை வலியுறுத்திச் சொல்லப்பட்ட இலக்கியங்கள் அற இலக்கியங்கள் எனப்பட்டன. மேலும் இவை வாழ்வு நூலாக போற்றப்படுகின்றன.

இப்பிரிவில்,
ஆகிய பத்து நூல்களும்,

2.
அகப்பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,
ஆகிய ஆறு நூல்களும்,

3.
புறப்பொருள் பற்றிய நூல்கள்:

இப்பிரிவில்,
ஆகிய ஒன்றும் அடங்கும்.

மேலும் இன்னிலை (Innilai) என்ற நூல் கூட இப்பிரிவினைச் சார்ந்ததாக சிலர் கருதுகின்றனர்.
 சமண மாமுனிவர்கள் அருளிய இவ்வரிய நூலுக்கு உரை எழுதியவர் ஜைன தத்துவ நூலாசிரியர் ஸ்ரீபுராணச் செம்மல் பேராசிரியர் ஜெ. ஸ்ரீசந்திரன், M.A., அவர்கள் ஆவார்.

http://www.tamilkalanjiyam.com/literatures/pathinen_keezhkanakku/naaladiyar/naaladiyar13.html#.UKz9wmfZEaw
பெரியவர் கேண்மை பிறைபோல நாளும்
வரிசை வரிசையா நத்தும் - வரிசையால்
வானூர் மதியம்போல் வைகலும் தேயுமே
தானே சிறியார் தொடர்பு.
125

பொயோர் நட்புப் பிறைச் சந்திரனைப்போல, நாள்தோறும் படிப்படியாக வளரும். கீழோர் உறவு வானத்தில் தவழும் முழுமதி போல நாள்தோறும் சிறிது சிறிதாகத் தானே தேய்ந்து குறைந்து ஒழியும்.
மனைப்பாசம் கைவிடாய் மக்கட்கென் றேங்கி
எனைத்தூழி வாழ்தியோ நெஞ்சே! - எனைத்தும்
சிறுவரையே யாயினும் செய்தநன் றல்லால்
உறுபயனோ இல்லை உயிர்க்கு.
130

நெஞ்சமே! நீ மனைவியிடம் கொண்டுள்ள ஆசையை விடமாட்டாய்! மக்களுக்குப் பொருள் முதலியன சேர்த்து வைக்க வேண்டும் என்று ஏக்கமுற்று இன்னும் எவ்வளவு காலம் வாழப் போகிறாய்? சிறிதளவாயினும் செய்யும் அறச்செயலாலன்றி உயிர்க்கு வேறு செயலால் கிடைக்கும் பயன் எதுவும் இல்லை! (மனைவி மக்களிடத்துப் பற்று கொண்டு அவர்களுக்கு வேண்டியவற்றைச் செய்ய வேண்டும் என ஏக்கம் கொண்டு இன்னும் எவ்வளவு காலம் வாழப்போகிறாய்? இந்த ஏக்கத்தினாலேயே நீ இறக்கப் போவதன்றி வேறொரு நற்பயனையும் பெறப் போவதில்லை! இருக்கும் குறைந்த ஆயுட்காலத்திலாவது அறம் செய்தால் அதுவே உயிர்க்கு நற்பயனாகும். ஆதலால் உயிர்க்கு உறுதி செய்யாமல் வாழ்வதற்கு அஞ்ச வேண்டும் என்பது கருத்து).
நீதிகளைக் கூறுவதில் திருக்குறளும் நாலடியாரும் ஏறக்குறைய ஒரே முறையைப் பின்பற்றுகின்றன. திருக்குறளைப் போன்றே நாலடியாரும், அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் எனும் முப்பிரிவுகளை உடையதாக விளங்குகிறது.திருக்குறள் இரண்டு அடிகளில் சொல்ல, நாலடியார் நான்கு அடிகளில் சொல்கிறது.திருக்குறள் ஒரே ஆசிரியரால் இயற்றப்பட்டது. நாலடியாரோ சமண முனிவர் நானூறு பேர் பாடிய வெண்பாக்களின் தொகுப்பாகும்.நாலடியாரைத் தொகுத்தவர் பதுமனார். இயற்றப்பட்ட காலம் சங்கம் மருவிய காலம் (கி.பி.250 ஒட்டிய காலம்).
"ஆலும் வேலும் பல்லுக்குறுதி; நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி', 'சொல்லாய்ந்த நாலடி நானூறும் நன்கு இனிது', 'பழகுதமிழ் சொல்லருமை நாலிரண்டில்' என்கிற கூற்றுகள் இதன் பெருமையை திருக்குறளுக்கு இணையாக எடுத்தியம்புவன.

நாலடியார் பாடல்களின் எண்ணிக்கை கடவுள் வாழ்த்து : 1 அறத்துப்பால் : 130 பாடல்கள் (13 அதிகாரங்கள்) பொருட்பால் : 260 பாடல்கள் (26 அதிகாரஙள்) காமத்துப்பால் : 10 பாடல்கள் (1 அதிகாரம்) மொத்தம் : 400 பாடல்கள் (40 அதிகாரங்கள்)
எடுத்துக்காட்டு பாடல்கள்
குஞ்சி யழகும் கொடுந்தானைக் கோட்டழகும்
மஞ்சள் அழகும் அழகல்ல - நெஞ்சத்து
நல்லம்யாம் என்னும் நடுவு நிலைமையால்
கல்வி அழகே அழகு.
(2. பொருட்பால், 2.14 கல்வி, 131)
நான்கு அடி வெண்பாக்களால் இந்நூல் செய்யுட்கள் அமைந்திருத்தலின் இதனை 'நாலடி'என்றும், 'ஆர்'என்னும் சிறப்பு விகுதியை இறுதியில் இணைத்து, 'நாலடியார்' என்றும் வழங்கி வருகின்றனர்.குறளைத் 'திருக்குறள்' என்று குறித்ததைப் போல,நாலடி வெண்பாக்களாலாகிய வேறு நூல்கள் பல தமிழில் இருக்கவும், இந் நூல் ஒன்றையே 'நாலடி' என்ற பெயரால்குறித்து வந்துள்ளனர். இந் நூலில் அமைந்துள்ள பாடல்தொகையை உட்கொண்டு, 'நாலடி நானூறு' என்றும் இதுகுறிக்கப் பெறுகின்றது. இதற்கு 'வேளாண் வேதம்' என்றஒரு பெயரும் உளதென்பது சில தனிப் பாடல்களால் தெரியவருகிறது.
எண் பெரும் குன்றத்து எணாஅயிரம்இருடி
பண் பொருந்தப் பாடிய பா நானூறும்
என்றும் ஒரு தனிப்பாடலில் காண்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக