வெள்ளி, 14 ஜூன், 2013

 இமெயிலை விசமிகளிடம் இருந்து பாதுகாக்க


உங்கள்


உங்கள் இ-மெயிலை, 70% ஹாக் செய்வது உங்கள் நண்பர்களாக தான் இருக்கிறார்கள்.30% மட்டுமே, ஆன்லைன் மோசடியாளர்கள் ஹாக் செய்கிறார்கள்(பண மோசடி, உங்கள் அக்கவுண்டில் இருந்து பல ‘கெட்ட மெயில்' உங்கள் மெயில் முகவரி புத்தகத்தில் இருக்கும் நண்பர்களுக்கு அனுப்புதல், போன்ற பாதிப்புகள் இருக்கின்றன). அதனால, எல்லாவற்றிலும் கொஞ்சம் கவனமாக இருங்க.
                                               

பாதுகாப்பு வழிமுறை:

மெயில் நுழைவு சொல்லை அறிய எந்த மென்பொருளும் இல்லை. சில இணைய தளங்களிலும், மெயில்களிலும் இப்படி பார்த்து இருக்கலாம். இந்த மெயில் முகவரிக்கு, ”நீங்கள் ஹாக் செய்ய விரும்பும் மெயில் ஐடி மற்றும் உங்கள் பாஸ்வேர்டை அனுப்புங்கள், நாங்கள் ஹாக் செய்து தருகிறோம்” என்று. உங்க பாஸ்வேர்டை எந்த காரணம் கொண்டும் தராதீர்கள். இவை உங்கள் மெயில் முகவரியை ஹாக் செய்திட நீங்களே உத்தரவு தருகிற மாதிரி.



கடைப்பிடிக்க வேண்டியவை:




1) கடவு சொல்லை மூன்று மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றுங்கள்.




2) “Hint Question" - கொஞ்சம் கஷ்டமாக உபயோகிக்கவும். உங்களுக்கு மட்டும் இல்ல, யார் வேண்டுமானாலும், உங்கள் மெயில் முகவரியைக் கொடுத்து விட்டு, ”Forgot My Password" என்று கிளிக் செய்தால், இந்த “Hint Question"ஐ தான் அவர்களிடமும் கேட்கும். உங்க செல்ல பேரு என்ன, உங்க அம்மா பேரு என்ன, பிறந்த ஊர் என்ன, பிடித்த நிறம்? இப்படி சில்லி தனமாக கேள்வி இருந்தா, உங்க நண்பர்கள், தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் ஒரு யூகத்தில் பதில் அளித்து ஹாக் செய்திட முடியும்.)




3) கண்டிப்பாக “Secondary Mail" உபயோகிக்கவும். ”Secondary Mail" - இருந்தால், Hint Question கேட்காது, Forgot my password கிளிக் செய்தால், உடனே ஒரு activation link உங்க மெயில் ஐடிக்கு வந்துவிடும். யாரும் ஹாக் பண்ண முயற்சி செய்தாலும் தெரிந்து விடும்.



4) குறைந்தது 4 மெயில் ஐடி வைத்துக்கொள்ளுங்கள்.



ஒரு மெயில் ஐடி - யாருக்கும் கொடுக்கதீர்கள். ஆன்லைன் பாங்கிங் போன்ற மிகவும் முக்கியமான செயலுக்கு மட்டுமே உபயோகிக்கவும். மற்ற மூன்று மெயில் ஐடிக்கும் “Secondary mail id"- ஆக இந்த ஐடியை கொடுக்கவும். (யாருக்கும் தெரியாம ரகசியமாக வைச்சுக்கோங்க)

இரண்டாவது மெயில் ஐடி - நண்பர்கள் மற்றும் அலுவலக பயன்பாட்டிற்காக உபயோகிக்கலாம்.

மூன்று - நம்பகமான தளங்கள், சோசியல் நெட்வொர்கிங் தளங்கள் (FACEBOOK,ORKUT,TWITTER) போன்றவற்றில் சேருவதற்கு உபயோகிக்கலாம். அலுவலக பயன்பாட்டிற்காக உபயோகிக்கும் மெயில் ஐடியை சோசியல் நெட்வொர்கிங் தளங்களில் சேர்வதற்கு உபயோகிக்க வேண்டாம்

நான்கு - இந்த முகவரியை ”குப்பை” (spam) மெயிகளுக்காக மட்டும், உபயோகிக்கவும். (அப்டினா? ஆசை யார விட்டது, பணம் சம்பாதிக்கலாம், உங்க மெயில் ஐடி தாங்க, அனுப்பி வைக்கிறோம் / இந்த தளத்தில் சேர்ந்தால் தான், இந்த தளத்தைப் பார்வை இடலாம், இதியாத்தி... இதியாத்தி..... இப்படிதெரியாத தளங்களில் எல்லாம் இந்த முகவரியை கொடுங்க. குப்பை மெயில் வந்தாலும், ஒரு பிரச்சனையும் இல்ல.

GMAIL உபயோகிப்பவர்களுக்கு:


ஜிமெயில் அக்கவுன்ட் வைத்திருந்தால், அக்கவுண்ட் பக்கத்திற்கு செல்லவும். யாஹூ உபயோகிப்பளர்கள், தங்கள் மெயிலில் உள்நுழைந்த பின், மேலே ”sign out", அருகில் ”My Account" கிளிக் செய்து, தங்கள் மெயில் செட்டிங்கை மாற்றிக் கொள்ளலாம்.


Read more: http://www.anbuthil.com/2012/10/blog-post_13.html#ixzz2WEZ6f7Qi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக