புதன், 11 மார்ச், 2015

தமிழ் கற்பித்தல் முறைகள்

                                     தமிழ் கற்பித்தல் முறைகள்
 வகுப்பறைக்குள்  உள்ளே நுழையும்போது ஆசிரியர் அன்றைய தினத்திற்கான பாடத்திட்டத்துடன்  இருக்கவேண்டும்.முதல்நாள் பாடமுடிவில் மாணவரிடம் ஒரு வினாவினை எழுப்பி விடை காண வைக்கும்போதுதான் அன்றைய வகுப்பில் ஈடுபாடு மாணவர்களால் காணமுடியும்.
ஆர்வமூட்டல் வகுப்பறையில் முக்கியமானது.
கற்பித்தல் முறை நாம் பாடத்திட்டத்தினைத் தயாரித்தலின்போது உள்ளபடி சில சமயங்களில் அளிக்க இயலாது. காரணம் எதிர்பாராமல் நமது துணைக்கருவிகளான மடிக்கணினி,கையடக்கக்கணினி போன்றவை வேலை செய்யாது போகலாம்.அதில் நாம் தயாரித்த நழுவக்காட்சிகள் அளிக்க இயலாது போகலாம்.அப்போதும் வகுப்பறையை ஆசிரியர்கள் அதற்கு மாற்றான வகுப்பறையைக் காட்டலாம். குறிப்பாக ஒரு பாடத்திட்டத்திற்கு ஒரு ஆசிரியர் அளித்ததை அனைத்து ஆசிரிியர்களும்(நழுவம்-காட்சி,பயிற்சித்தாள்,ஔிக்காட்சிகள் இவற்றைப் பயன்படுத்த இயலாது.காரணம் ஒவ்வொரு ஆசிரியரிடமும் பாடப்பொருள் ஒன்றாக இருந்தாலும் கற்பித்தல்முறை வேறுபடும்.எனவே ஒவ்வொரு ஆசிரியரும் அவருக்குண்டான தனி பாடங்களை அமைத்துக்காட்டிடவேண்டும்.
அவை எளிதிலிருந்து கடினப்பொருளைக் கற்பித்தல் என்ற நிலையில் அமைந்தால் மாணவரின் கற்றல்திறன் பெருகும். என்னிடம் இணைய வசதி,கணினி சார்ந்த பொருள் இல்லை என்பது ஒரு பிரச்னை கிடையாது. அவை இல்லாத வகுப்பறையையும் துணைக்கருவிகள் வழி சிறப்பானதாக்கலாம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக