வியாழன், 12 மார்ச், 2015

எது தகுதி?

                         எது தகுதி?
என்ன எனக்கு இன்னும் பொண்ணு பார்க்கலியா! சைலண்டா இருக்கீங்க! போங்க எங்கேயாவது போய்த் தொலைங்க! பெத்தா மட்டும் போதுமா! என் வேலை என்ன?நான் படித்த படிப்பென்ன? என் கௌரவம் என்ன?
வயதான அம்மா ஜாதகம் நிறைய வந்துருக்கு தம்பி! ஆனா பாத்துக்கோ! வெளிநாட்டு மாப்பிள்ளைன்னா கொஞ்சம் யோசிக்கிறானுங்க இல்லை.ஒரே ஆளுதான் பார்த்துக்கோ வந்தாரு! அவரு பொண்ணு ஜாதகத்தை பார்த்தா மூல நட்சத்திரம்பா! ஜாதகம் வேண்டாம்னு அவங்க சொல்வாங்க! நாம யோசிக்கணும்ல! அப்பா வியாபார விஷயமா வெளிநாடு போயிருக்காரு! நீ இங்கே இப்பிடி அலப்பல் பண்ற! அவர்கிட்ட பேசிட்டு உனக்கு ஒரு முடிவு சொல்றேன்! ஃபோனை வச்சிடு.அமெரிக்கான்னா சும்மாவா!அதான் பையன் கேக்குறான்.கலா! அந்த ஜாதகக்கட்டை எடு.நானாச்சும் ஊருக்குப் போய் நாலு வரனைத் தேடுறேன்.செடி முளைச்சிட்டு பூ பூக்கிறமாதிரி பொண்ணை பிடுங்கிட்டா வரமுடியும்.அறிவு கெட்டவனுங்க…..இவரைக்கேட்டா மூல நட்சத்திரமாவது! மண்ணாவது! நா இருந்தா இருக்கேன். செத்தா சாவுறேன்.அதே இடத்தை முடிச்சிடும்பாரு….அறிவு கெட்ட மனுசன்! பார்க்கலைன்னா ஒண்ணுமில்லை…முதல்ல அப்படியா இருந்துச்சு…காலம் மாற மக்களுக்கு புத்தியும் மாறுது…..அப்பா நாளைக்கு வருவாரு…..அவரை ஊருக்கு வரச் சொல்லு…..என கட்டைளையிட்டாள் கலாவிற்கு.
அம்மா என்று தயங்கிய வேலைக்காரி கலாவைப் பார்த்து என்ன என்று கேட்டாள்.
நாய்க்கு இரண்டு நாளா உடம்பு சரியில்லை.ஆஸ்பத்திரிக்குப் போகணும்.
கடவுள் என் நாயைப் பார்த்துப்பான்.
வெளியில் சென்ற அம்மா எப்பொழுதும் அவள் புடவையை உரசியபடி வேகமாக ஓடி வந்து வாலை ஆட்டும் பிளாக்கி ஏனோ சோர்ந்து இருந்ததைப் பார்த்தாள். நாய்க்கு நாம் பேசுவது புரியும் என்பார்களே! வீட்டில் ஒரு வாரமாக நடக்கும் பிரச்னை ஒருவேளை இதற்குத் தெரிந்திருக்குமோ!
கதையைத் தொடர்ந்து எழுதிப் பழகுக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக