புதன், 4 மார்ச், 2015

எதற்காகத் தமிழ்க்கல்வி?

                                            எதற்காகத் தமிழ்க்கல்வி?
தமிழ்மொழியில் பணிவாய்ப்பு குறைவு.இதனால் மாணவர்கள் எதற்காகத் தமிழ் பயிலவேண்டும் எனக் கேள்வி எழுப்பும்நிலை மிகுந்துள்ளது. அதற்கேற்றாற்போல பணி நிறுவனங்களும் தமிழ்மொழி கற்பிப்பவருக்கு உரிய மரியாதையினை அளிப்பது கிடையாது. இதனைப் பார்க்கும் மாணவர்களும் தமிழ் என்றால் மதிப்பு குறைவு,மதிப்பெண்ணும் வாங்க இயலாது எனத் தவறான முடிவுக்குப்போய்விடுகின்றனர்.
காரணம் நம் அனைவருக்குமே தெரிந்த ஒன்று.ஏட்டில் படிப்பதை வாழ்க்கையில் கடைபிடிக்கமுடிவதில்லை. தமிழே வாழ்க்கைப்பாடம்தானே!அறிவியல் தொடர்பான செய்திகள் அனைத்தும் மாணவர்களிடம் சென்று சேர்வதில்லை.அறிவியல்தமிழ் என்ற புத்தகம் தேர்வுக்கு ஒரு வாரம் முன்னர்தான் மாணவர்களின் கைகளில் தென்படும்.இணையவழி மென்பொருட்கள் என்றால் என்ன? என்பதுபோன்ற போலியான மாயை ஏற்பட்டுள்ள இத்தருணத்தில் தமிழ்க்கல்வியின் முக்கியத்துவத்தை ஆசிரியர்கள் மாணவர்களிடம் உணர்த்தவேண்டும்.ஆராய்ச்சி அளவிலும் ஆராய்ச்சியாளர்களாகத்தான் விருப்பப்பட்டு ஆய்வை நடத்துகின்றனர்.(அதுவும் மிகவும் குறைந்த நிலை)இதனால் கணினிவழி தமிழ்மொழி வளர்ச்சியை ஊக்கப்படுத்தவேண்டும்.இதனால் தமிழ்மொழியில் உள்ள பழமையான செய்திகளை(அறிவியல்) உலகளாவிய மக்கள் அறிந்துகொள்வர்.தமிழ் கற்பவர்களும் பெருகுவர்.வைரத்தமிழ்ச் சிறப்பைப் பட்டை தீட்டி எடுத்துக்காட்டினால் என்றும் ஒளிரும்.தமிழ் வளரும்.பழம்பெருமைப் பெட்டகத்திலேயே வைத்திருந்தால் அதன் பெருமையை யாரும் அறிய இயலாது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக